Ad Widget

இலங்கை நீதித்துறை வரலாற்றில் முதன்முறையாக நேரலை வீடியோ தொழில்நுட்பத்தில் நீதிமன்ற நடவடிக்கை!!

புதிய காணொலித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீதித்துறை செயல்முறையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கான முதல் படியாக புதுக்கடை நீதிவான் நீதிமன்றம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை இடையே முதல் விசாரணை திட்டம் நேற்றையதினம் தொடங்கியது.

அதன்படி, இலங்கை நீதித்துறை வரலாற்றில் முதன்முறையாக நேரலைக் காணொலி உரையாடல் (Video Conference) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்காக சிறப்பு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதற்கு பதிலாக, அவர்கள் வெலிகடை சிறையில் நிறுவப்பட்ட தொழில்நுட்ப வளாகத்திலிருந்து புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அடுத்த கட்டம் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி நிறுவ வேண்டும் என்று நீதி அமைச்சுத் தெரிவித்துள்ளது.

நேற்றைய வழக்கு நடவடிக்கையில் நீதி அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, நீதி அமைச்சின் செயலாளரும் பங்கேற்றனர்.

Related Posts