- Monday
- May 4th, 2026
இந்தோனேசிய சுமத்ரா தீவிற்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளபோதிலும், இலங்கையில் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது. இந்தோனேஷியாவின் தெற்கு சுமத்ராவில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (ஈ.எம்.எஸ்.சி) தெரிவித்துள்ளது. 10 கி.மீ (6.21 மைல்) ஆழத்தில் இந்த...
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் செயலிழந்துவிட்டதால் நாட்டில் சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்துவதற்கான நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை நாடுமுழுவதுவம் மின்தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் செயலிழந்துவிட்டது என்று இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்தார். இந்த தகவலை கொழும்பு ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது. நுரைச்சோலை அனல்...
யாழில். இரவு 10 மணி வரை வர்த்தக நிலையங்களை திறப்பது தொடர்பில் குழப்பங்கள் தேவையில்லை – வணிகர் சங்கம்
‘யாழ்ப்பாணத்தில் இயலுமாக இருந்தால் இரவு 10 மணி வரை கடைகளை திறந்து வியாபார நடவடிக்கைகளை முன்னெடடுக்கலாம். வீண் குழப்பங்கள் தேவையில்லை’ என யாழ்.வணிகர் சங்கத்தின் உப தலைவர் ஆர். ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘கடந்த வெள்ளிக்கிழமை வடக்கு...
யாழ்ப்பாணம்- கொட்டடியில் மனித எலும்புக்கூடுகள் காணப்பட்ட பகுதிகளில் அகழ்வு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் குறித்த அகழ்வு பணிகள் தொடர்பாக படமெடுப்பதற்கோ அல்லது தகவல் சேகரிப்பதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம்- கொட்டடிப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டது. யாழ்ப்பாணம், கொட்டடி மீனாட்சி அம்மன் ஆலய வீதிப்பகுதியில் தனியார்...
விளையாட்டுத்துறை அமைச்சின் பெயர் பலகையிலுள்ள தமிழ் பிழையை திருத்தி விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் மொழி உரிமைக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளார். விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக நாமல் ராஜபக்ஷ இன்று (2020.08.18) கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். உத்தியோகப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னதாக அமைச்சின் பெயர் பலகையிலுள்ள தமிழ் பிழையை திருத்தி, அமைச்சர் மொழி உரிமைக்கு...
உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேவையான ஒளடதங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதனூடாக செலவிடப்படும் அந்நிய செலாவணியை சேமிப்பதற்கு நடவடிக்கை...... அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒளடதங்களை ஏற்றுமதி செய்யும் பிரதான நாடுகளான அயர்லாந்து, இஸ்ரேல் மற்றும் சிங்கப்பூர் மட்டத்திற்கு இலங்கையை கொண்டு வருதல்.... - பசில் ராஜபக்ஷ - தலைவர், பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை...
நேற்றிரவு 10.30 மணியளவில் நாட்டின் அனைத்து பகுதிகளுக்குமான மின்சார விநியோகமானது மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் மின்வெட்டின் விளைவாக சீர்குலைந்த நீர் விநியோகமும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலிருந்து களனிதிஸ்ஸ மின் நிலையத்திற்கு மின்சாரம் அனுப்பும் கரவலப்பிட்டி மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு மின்சார விநியோகம்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கூட்டம் எதிர்வரும் 20ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதவிநிலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு புதிய பேச்சாளர் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான தீர்மானம் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின்...
💥மணிவண்ணன் தொடர்ந்தும் உறுப்பினராக இருக்க முடியும் - கஜேந்திரகுமார் தெரிவிப்பு! 💥என்மீதான அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்கள் என்மீதான மத்தியகுழு நடவடிக்கைகளுக்கு ஏற்புடையதல்ல பொதுச்சபையினை கூட்டினால் விளக்கமளிக்க தயார் - மணிவண்ணன் நெருங்கியவர்களிடம் தெரிவிப்பு மணிவண்ணன் பதவி நீக்கம் தொடர்பில் ஆதரவாளரிடயேயான உள்ளக கூட்டம் ஒன்றில் கயேந்திரகுமார் தெரிவித்ததாவது மணிவண்ணன் தொடர்பில் நாங்கள் 3 மணி நேரம் விவாதித்தோம்....
வட மாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ், மாகாணத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும்இரவு 10 மணிவரை திறந்து வைக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன் மாகாண கிராமபுறங்களின் போக்குவரத்து நடவடிக்கைகளையும் இரவில் இயலுமான அளவு பராமரிக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வடக்கு மாகாணத்தில் வணிகர்கள் வர்த்தக நிலையங்களை முன்கூட்டியே மூடியிருந்தனர். இந் நிலையில் தற்போது...
போலித் தேசியம் பேசிவருபவர்கள் முள்ளிவாய்க்காலை வைத்து அரசியல் செய்து மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். அத்துடன், முள்ளிவாய்க்கால் என்ற புனித பூமியை தங்களது சுய அரசியலுக்காக கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவாலயம் சென்று சில அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியக் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருக்கும் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் தவராசா கலையரசன் தனது தவிசாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றில் பிரதிநிதியாக சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முன்பு சட்டப்படி தற்போதைய தவிசாளர் பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என்ற நிலையில் அவர் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இராஜினாமா...
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இணையத்தளத்தில் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இதேநேரம், தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்கள் அந்த அமைச்சினால் உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் நியமனம் பெறுபவர்கள் செப்டெம்பர் 02ஆம் திகதி தமக்கு அருகில் உள்ள பிரதேச...
நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் பகையை வளர்த்துக்கொள்ளாமல் பண்பினால் ஒன்று பட்டு எந்த மக்கள் வாக்களித்தார்களே அந்த மக்களுக்கு ஒன்றுமையாக சேவை செய்வதற்கு அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என்று அகில இலங்கை இந்த மா மன்றத்தின் உபதலைவரும் துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவருமான கலாநிதி ஆறு. திருமுருகன் வலியுறுத்தியுள்ளார். தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றுகூட்டி...
யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கொட்டடி மீனாட்சி அம்மன் ஆலய வீதிப் பகுதியில் தனியார் காணியொன்றில் கொட்டகை அமைப்பதற்காக நிலத்தை தோண்டியபோதே இவ்வாறு மண்டையோடு மற்றும் எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியானது 2006ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது மண்டையோடு மற்றும் பெண்கள் அணியும் ஆடையும்...
முல்லைத்தீவு – செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது இலங்கை வான்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 61 மாணவிகளின் 14 ஆம் ஆண்டு நினைவுதினம் யாழ்ப்பாணத்தில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாக முற்றவெளியில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் நாடாளுமன்றுக்கு...
தமிழ் அரசியலில் இளைஞர்களால் கவர்ந்து இழுக்கப்பட்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்க கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை இரவு கூடிய மத்திய குழு, சட்டத்தரணி வி.மணிவண்ணனை முன்னணியின் பதவி நிலைகளிலிருந்து நீக்கும் இந்த முடிவை எடுத்தது. இந்தக் கூட்டத்துக்கு...
அமைச்சரவைப் பதவியேற்பில் பறக்கவிடப்பட்ட கொடிகள் இந்த அரசாங்கத்தின் உண்மையான முகத்தை வெளிக்காட்டியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், மத விவகாரங்களில் அரசியல் தலையீடு இல்லாமல் இருப்பது நல்ல விடயம் எனத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு வைபவத்தில் பயன்படுத்தப்பட்ட...
செஞ்சோலை படுகொலையின் 14ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்த முடியாது என புதுக்குடியிருப்பு பொலிஸார் தடை விதித்துள்ளனர். முல்லைத்தீவு, வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இலங்கை விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் 54 மாணவிகள் உட்பட 61 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த...
பொதுமக்கள், அரசியல்வாதிகளை வழிநடத்தும் ஒரு பொறிமுறை நோக்கி நகர முயற்சி எடுக்க தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும் என தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக பேரவை விடுத்துள்ள அறிவிப்பில், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலே மக்கள் தமது தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். அந்த மக்கள் தீர்ப்பு மதிக்கப்படவேண்டிய ஒன்றாகும். இந்தத் தேர்தலில் எந்தவொரு அணியினருக்கும்...
Loading posts...
All posts loaded
No more posts
