பதவியேற்பில் பறக்கவிடப்பட்ட கொடிகள் அரசாங்கத்தின் உண்மை முகத்தைக் காட்டியுள்ளன- சுமந்திரன்

அமைச்சரவைப் பதவியேற்பில் பறக்கவிடப்பட்ட கொடிகள் இந்த அரசாங்கத்தின் உண்மையான முகத்தை வெளிக்காட்டியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், மத விவகாரங்களில் அரசியல் தலையீடு இல்லாமல் இருப்பது நல்ல விடயம் எனத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு வைபவத்தில் பயன்படுத்தப்பட்ட...

செஞ்சோலை படுகொலை நினைவுகூரல் நிகழ்வை நடத்தத் தடை!

செஞ்சோலை படுகொலையின் 14ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்த முடியாது என புதுக்குடியிருப்பு பொலிஸார் தடை விதித்துள்ளனர். முல்லைத்தீவு, வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இலங்கை விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் 54 மாணவிகள் உட்பட 61 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த...
Ad Widget

பொதுமக்கள் அரசியல்வாதிகளை வழிநடத்தும் பொறிமுறை நோக்கிய நகர்வு: தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

பொதுமக்கள், அரசியல்வாதிகளை வழிநடத்தும் ஒரு பொறிமுறை நோக்கி நகர முயற்சி எடுக்க தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும் என தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக பேரவை விடுத்துள்ள அறிவிப்பில், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலே மக்கள் தமது தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். அந்த மக்கள் தீர்ப்பு மதிக்கப்படவேண்டிய ஒன்றாகும். இந்தத் தேர்தலில் எந்தவொரு அணியினருக்கும்...

ஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத தொழில் வழங்குநர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!

ஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத தொழில் வழங்குநர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார். அமைச்சர் நேற்றையதினம் (வியாழக்கிழமை) தொழில் அமைச்சில் தமது கடமைகளை ஆரம்பித்த அமைச்சர், தொழில் அமைச்சு தொழிலாளர்களுக்காக சேவையாற்றும் இடமாக அன்றி தொழில் வழங்குநர் நிறுவனமாக இருக்கக் கூடாது என்றும் கூறினார்...

முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்து நாடாளுமன்றப் பயணத்தைத் தொடங்கினார் விக்னேஸ்வரன்!!!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான க.வி.விக்னேஸ்வரன், தனது நாடாளுமன்றப் பயணத்தை முள்ளிவாய்க்கால் மண்ணில் சத்தியப்பிரமாணத்துடன் ஆரம்பித்துள்ளார். முல்லைத்தீவில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுதூபிக்கு இன்று (12) காலை சென்ற விக்கினேஸ்வரன், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அத்துடன், தனது சத்திய பிரமாண உரையையும் நிகழ்த்தினார். வடக்கு மாகாணத்தின்...

த.தே.ம.முன்னணியினர் முள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம்!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களது உறுதிப்பிரமாணம் முள்ளிவாய்க்காலில் நாளைமறுதினம் (15) சனிக்கிழமை காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள உறுப்பினர்களான கஜேந்திரகுமார் மற்றும் தேசியப் பட்டியல் உறுப்பினர் கஜேந்திரன் ஆகியோரே முள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம் எடுக்கவுள்ளனர். இந்நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள்...

மாணவர்களுக்கான வருகை நேரம் தொடர்பில் திருத்தம் – கல்வி அமைச்சு

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த பாடசாலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த புதிய சுகாதார பணிபுரைகளில் திருத்தங்களை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்ததோடு பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் நான்கு கட்டங்களுக்கு அமைவாக பாடசாலைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டு கொரோனா...

தென்னிலங்கை பெண்கள் இருவர் யாழில் கைது!

பாலியல் தொழிலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் தென்னிலங்கை பெண்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நல்லூர் முன் வீதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதியில் தனித்திருந்து இரு பெண்களை யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று(வியாழக்கிழமை) கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

நாட்டில் தற்போது கொரோனா வைரஸின் ஆபத்து அதிகமாகக் காணப்படுவதாக எச்சரிக்கை!!

பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் ஆரம்பித்தது முதல் தற்போது வரை நாடு மிக சுறுசுறுப்பாகச் செயற்படுவதால் சமூகத்தில் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டால்கூட கொரோனா பரவுவதற்கான ஆபத்து அதிகளவில் காணப்படுவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. தனது அலுவலகத்திலிருந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அந்த பிரிவின் தலைவர் வைத்தியர் சுதாத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில்...

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம்

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். பதவிப் பிரமாண நிகழ்வு நேற்று (12) கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகுல்மடுவ மண்டபத்தில் இடம்பெற்றது. சுபீட்சமான தேசத்தை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணித்த...

மாவை சேனாதிராசாவின் கட்சி தலைமையை நாம் கைப்பற்ற முயலவில்லை -எம்.ஏ.சுமந்திரன்

மாவை சேனாதிராசாவின் கட்சி தலைமையை நாம் கைப்பற்ற முயலவில்லை. ஊடகங்களே அப்படியொரு செய்தியை உலாவவிட்டுள்ளன. இதனால் மாவை சேனாதிராசாவிற்கு மனவருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்காக நானும், சிறிதரனும் மனம் வருந்துகிறோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். பருத்தித்துறையில், தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...

இரா.சம்பந்தன், ரணில் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக அழைப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 21ஆம் திகதி அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களுடன், மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா, அனுரகுமார திசாநாயக்க,...

உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. உயர்தர புதிய, பழைய பாடத்திட்ட பரீட்சைகளுக்கான நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்கான அட்டவணைகளை கல்வித் திணைக்களத்தின் இணையத்தளமான...

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள் பேரவையினால் தெரிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த ஆறு பேரில் மதிப்பீட்டுக் குழு மற்றும் பேரவையின் மதிப்பீடுகளின் அடிப்படையில் மூவரின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக ஜனாதிபதிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான பீடம், தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும், கணிதப் புள்ளி விபரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜாவின் பெயர் முதலாவதாக பெயரிடப்பட்டுள்ளது....

இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு: கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?- விக்னேஸ்வரன்

இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொள்கை அடிப்படையில் ஒருமித்த நிலைப்பாட்டை கூட்டமைப்பு முன்னிறுத்தினால் அதனுடன் இணைந்து செயற்பட தாம் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வாரம் ஒரு...

கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் திருமலையில்

தேசியப் பட்டியல் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்ட விவகாரத்தில் கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் திருகோணமலையில் நடைபெறவுள்ளது. கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் எதிர்வரும் சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இந்தக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர்...

யாழில் வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி, காதலனுடன் மீட்பு!

யாழ்ப்பாணம் நீர்வேலி வடக்கு பகுதியில் வானில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி கோப்பாய் பொலிஸாரால் நேற்று மாலை மல்லாகத்தில் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் 4 பேர் கொண்ட கும்பல் 20 வயது மதிக்கதக்க யுவதி ஒருவரை கடத்திச் சென்றதாக அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...

தேசியப்பட்டியல் பற்றி சம்பந்தமில்லாதவர்களே தீர்மானித்தார்கள்; சசிகலாவே எனது தெரிவு: மாவை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர் நியமனம் தொடர்பில் சம்மந்தமில்லாத தரப்பினர் தலையிட்டதும், அது தொடர்பாக அவர்கள் நடந்துகொண்ட விதமுவே அதிருப்தியளிப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். மேலும் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரவிராஜ் சசிகலாவையே பிரேரிக்க இருந்ததாகவும், எனினும் கட்சியினதும் மற்றும் பலரது அறிவுரைகளின்படியே தான்...

நியமனம் பெற்ற இராஜாங்க அமைச்சர்களின் விபரங்கள் வருமாறு!

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சர்களின் பதவிப் பிரணமான நிகழ்வு சற்று முன்னர் வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி முன்னிலையில் ஆரம்பமானது. இதன்போது இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் நியமனம் பெற்றனர். அவர்களின் முழு விபரம்: *உள்நாட்டலுவல்கள், உள்நாட்டு பாதுகாப்பு...

மீன்பிடித் தொழில்துறை அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா நியமனம்

திரு.டக்ளஸ் தேவானந்தா மீன்பிடி தொழில்துறை அமைச்சராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். கண்டி மகுல்மடுவ மண்டபத்தில் தற்பொழுது நடைபெறும் புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இவர் அமைச்சராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Loading posts...

All posts loaded

No more posts