த.தே.ம.முன்னணியினர் முள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம்!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களது உறுதிப்பிரமாணம் முள்ளிவாய்க்காலில் நாளைமறுதினம் (15) சனிக்கிழமை காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள உறுப்பினர்களான கஜேந்திரகுமார் மற்றும் தேசியப் பட்டியல் உறுப்பினர் கஜேந்திரன் ஆகியோரே முள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம் எடுக்கவுள்ளனர்.

இந்நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களைக் கலந்து கொள்ளுமாறு முன்னணியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related Posts