Ad Widget

இரவு 10 மணிவரை வர்த்தக நிலையங்களை திறந்து வைக்குமாறு வட மாகாண ஆளுனர் அறிவுறுத்தல்!

வட மாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ், மாகாணத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும்இரவு 10 மணிவரை திறந்து வைக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன் மாகாண கிராமபுறங்களின் போக்குவரத்து நடவடிக்கைகளையும் இரவில் இயலுமான அளவு பராமரிக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வடக்கு மாகாணத்தில் வணிகர்கள் வர்த்தக நிலையங்களை முன்கூட்டியே மூடியிருந்தனர். இந் நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் இன்னும் அதனையே வழக்கத்தில் கொண்டுள்ளனர்.

அத்துடன் வட மாகாணத்துக்கான பொதுப் போக்குவரத்து இரவில் இதேபோல் தடைபட்டுள்ளது என்று ஆளுநர் கூறினார்.

மாலை 6 மணிக்குப் பிறகு போக்குவரத்து வசதிகள் இல்லாததால் கிராமப்புறங்களில் மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் வந்ததாக ஆளுநர் கூறினார்.

இந் நிலையிலேயே வட மாகாணத்தில் உள்ள கடைகளை இரவு 10 மணி வரை திறந்து வைக்கவும், இரவில் சரியான பொது போக்குவரத்தை பராமரிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஆகஸ்ட் 20 முதல் இரவு 10 மணி வரை வடக்கில் உள்ள உணவு விற்பனை நிலையங்கள், துணிக்கடைகள் மற்றும் மருந்தகங்களை திறந்த நிலையில் வைக்கவும் ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Posts