Ad Widget

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உட்கட்சி மோதலால் மக்கள் விசனம்! உள்ளே நடப்பது என்ன?

💥மணிவண்ணன் தொடர்ந்தும் உறுப்பினராக இருக்க முடியும் – கஜேந்திரகுமார் தெரிவிப்பு!

💥என்மீதான அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்கள் என்மீதான மத்தியகுழு நடவடிக்கைகளுக்கு ஏற்புடையதல்ல பொதுச்சபையினை கூட்டினால் விளக்கமளிக்க தயார் – மணிவண்ணன் நெருங்கியவர்களிடம் தெரிவிப்பு

மணிவண்ணன் பதவி நீக்கம் தொடர்பில் ஆதரவாளரிடயேயான உள்ளக கூட்டம் ஒன்றில் கயேந்திரகுமார் தெரிவித்ததாவது

மணிவண்ணன் தொடர்பில் நாங்கள் 3 மணி நேரம் விவாதித்தோம். தமிழ்த் தேசிய முன்னணியின் மத்திய குழு உறுப்பினர்களில் மூவர் மணிவண்ணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்கள்.
ஏனையவர்கள் மணிவண்ணனை கட்சியில் இருந்து நீக்கலாம் என்பதற்கு அப்பால் அவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே பேசியிருந்தார்கள்.

எங்களுடைய கட்சியைப் பொறுத்தவரையில் விடயங்களைப் பேசித் தான் முடிவெடுக்கிறோம். நான் ஒரு கருத்தை சொல்லும்போது அதை கண்ணை மூடிக்கொண்டு எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எங்கள் கட்சி இல்லை.

அனைவரும் பேசி எடுத்த முடிவை கட்சிக்குள்ளேயே விமர்சித்து கட்சிக்குள் அணிகளை உருவாக்குவதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. மணிவண்ணன் அந்தக் கோணத்தில் செயற்பட்டது தான் எங்களுக்குப் பிரச்சினை.

விருப்பு வாக்குப் பிரச்சினை இல்லை. சுகாஷிக்கும் மணிவண்ணனுக்கும் விருப்பு வாக்கு விடயத்தில் பிரச்சினைகள் இருந்தது உண்மை.

மணிவண்ணன் கூறுகிறார் தன்னுடைய செல்வாக்கை வளர்த்துவிட்டேன் அதனால் கஜேந்திரனுக்கு அது போட்டி என்பதால் தனக்கு எதிராக பரப்புரைகளைச் செய்கிறார் என்று.

மணிவண்ணனுக்கும் சுகாஷிக்கும் 800 வாக்குகள் தான் வித்தியாசம். அப்படி என்றால் கஜன் சுகாஷிக்கு எதிராகவும் கதைத்திருக்க வேண்டும்.

மணி வந்து கஜேந்திரனுக்கும் சுகாஷ்க்கும் எதிராக பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டுள்ளார். இவர்கள் தான் மணிவண்ணனை தோற்கடிக்கப் பார்க்கிறார்கள் என்ற கோணத்தில் பொய்யான பரப்புரைகளைப் பரப்பி, கொள்கை சார்ந்து பிரச்சினை கட்சிக்குள் இருக்கிறது அதனை சரியான வகையில் முகம் கொடுக்கவில்லை என்ற உண்மையை மறைத்து. அந்த இடைவெளியை குறைக்க எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் மாறாக தன்னுடைய வெற்றியை உறுதிப்படுத்துவது தான் தேர்தல் காலத்தில் இடம்பெற்றது.

அதுதான் தற்போது கஜனும் நானும் தன்னுடைய வளர்ச்சியை சகித்துக்கொள்ள முடியாத நிலையில் தனக்கு எதிரான நடவடிக்கையை எடுகின்றார்கள் என்ற விடயத்தை நேற்று கோப்பாயில் நடைபெற்ற கூட்டத்தில் மணி பேசியிருக்கின்றார்.

நான் எதைச் சொல்ல வாருகிறேன் என்றால் தேசிய அமைப்பாளர் என்ற பதவியை வைத்துக்கொண்டு கட்சிக்குள் பிளவை ஏற்படுத்திக்கொண்டு கொள்கைக்கு மாறாக தனக்கொரு அணியை பலம் சேர்க்கிற நிலையில் அவருக்கு இப்பதவியை தொடர்ந்து வழங்குவது ஆபத்தானது.

நாங்கள் அவருக்கு இனி பதவியினை வழங்க முடியாது. ஆனால் அவர் தொடர்ந்தும் உறுப்பினராக இருக்க முடியும். அவர் எதிர்காலத்தில் கட்சியில் எவ்வாறு செயற்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தே எமது முடிவுகள் இருக்கும் என கஜேந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கயேந்திரகுமார்  மேலும் ஆதரவாளர்களிடம் தெரிவிக்கையில், மணிவண்ணன் கூறுவதுபோல கட்சி எந்த ஒரு நிலையிலும் அவரை தோற்கடிக்கும் வகையில் செயற்பட்டிருக்கவில்லை என்றும் ஏனைய வேட்பாளர்கள் அனைவரும் மணிவண்ணன் மீது குற்றம் சாட்டியிருக்கின்றனர் மணிவண்ணன் ஏனையவர்களை தோற்கடிக்கும்வகையில் செயற்பட தொடங்கியதன் பின்னரே ஏனைய வேட்பாளர்கள் முரண்பட ஆரம்பித்திருக்கின்றனர் என்று குறிப்பிட்டார்

கொள்கை ரீதியில் நழுவல் போக்கு உடையவர் என்று தெரிந்திருந்ததால் ஏன் போட்டியிட சந்தர்ப்பம் வலிந்து வழங்கப்பட்டது என்ற கேள்விக்கு முன்னணி வெற்றிபெறக்கூடிய நிலையிருந்த நிலையில்  ஆரம்பகாலங்களில் இருந்து இணைந்து பயணித்து பலதோல்விகளால் மனமுடைந்திருந்த மணிவண்ணனை தவிர்த்துவிட்டு செல்வது நல்லதல்ல சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும் என்றே கொடுக்கப்பட்டது அதை தேர்தல் பிரச்சாரக்காலத்தில் தவிடு பொடியாக்கிவிட்டார் என்றார். தேர்தலின் பின்னர் இணுவில்  சுதுமலை சம்பவங்கள் அவர் பின்னுள்ள அணி குறித்த சந்தேகங்களை மேலும் வலுப்படுத்துகின்றது என்றார். சக வேட்பாளர்கள் மீது மிரட்டும் பாணியில் செயற்பட்டிருக்கிறார் என்றும் தெரிவித்திருக்கிறார்.

வெற்றி பெற்றிருந்தாலும் தங்களால் மணிவண்ணனை தங்கள் கொள்கைப்பயணத்தில் மாற்றி பயனிக்க வைக்க முடிந்திருக்கும் என நம்பியிருந்ததாகவும் மணிவண்ணனை முற்று முழுதாக கொள்கை பிறழ்வான ஆளாக நாம் பார்க்கவில்லை அடிக்கடி தளம்புபவராகவும் தோல்விகளின்போது துவண்டு விடுபவராகவும் இருக்கின்றார்  அவரை சுற்றியுள்ள சில உறுப்பினர்களே அதற்கு துாபமிடுகின்றனர் என்றும் தெரிவித்தார்.

அவர் தன்னை சுயபரிசோதனை செய்து தொடர்ந்து பயணிக்க முடியும் . தேசிய அமைப்பாளர் பதவி எவருக்கும் இப்போதைக்கு வழங்கப்படப்போவதில்லை  அதனை மீண்டும் பெறுவதற்கு தகுதியாவதும் விடுவதும் மணியைப்பொறுத்தது என்றும் தெரிவித்தார்

அவரை தாம் வலிந்து முழுமையாக நீக்க விரும்பவில்லை என்றும் தனது பதில் கடிதத்தை  மணிவண்ணன் அனுப்பிய பின் அவர் கோருவதுபோல பொதுச்சபை கூட்டுவது பற்றி தீர்மானிக்கலாம் என்றும் தெரிவித்தார்  அவர் எம்மை விமர்சிக்க நாங்கள் தடைசெய்யவில்லை அதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது அதற்கான பதில்களையும் நாம் தெளிவு படுத்துவோம் என்றார்

இதேவேளை இருதரப்பையும் சமாதானமாக பேசி இணைப்பதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல தரப்பினரும் முயன்றவண்ணம் உள்ளனர்

மணிவண்ணன் ஆதரவாளர்களிடையே கூறிவருவதாவது

இத்தேர்தலில் ஆர்வமில்லாதிருந்த என்னை வலிந்து அழைத்து விட்டு என்னை செயலாளர் உள்ளிட்ட சிலர் தோற்கடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டமைக்கு என்னிடம் தகுந்த ஆதாரங்கள் உள்ளன அது குறித்து தலைவரிடம் முறையிட்டிருந்தேன் அது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் என்மீது நடவடிக்கை எடுத்தமை திட்டமிட்டு ஒரம் கட்டுவதற்கு ஒப்பானது

எனக்கும் இணுவில் மற்றும் சுதுமலை கூட்ட்ட குழப்ப சம்பவங்களுக்கும் எதுவித தொடர்புமில்லை

பல்வேறு வாதப்பிரதிவாதங்களை மூன்றாம் நபர்கள் ஊடாக பரிமாற்றி நேரத்தை வீணடிக்காமல் பொதுச்சபையை உடனடியாக கூட்டினால் சகலருக்கும் சகலவிடயங்கள் தொடர்பிலும் ஆதாரங்களுடன் விளக்கமளிக்க தயார் என்று மணிவண்ணன் குறிப்பிட்டார். பதவி நீக்கம் தொடர்பிலான தொடர்பிலான ஆட்சேபங்களை விரைவில் தலைமைக்கு கடித மூலம் அறிவிக்க உள்ளதாகவும்

எனக்கு பதவிகள் முக்கியமில்லை என்மீது எடுக்கப்பட்டமாதிரியான நடவடிக்கைகள் என்னால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதும் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் அவ்வாறில்லையேல் அது என்னை ஓரங்கட்டுவதற்காக செய்யப்படும் ஒருதலைப்பட்ச நடவடிக்கையாகவும் இருப்பதாக தான் கருதுவதாகவும் குறிப்பிட்டார்

வெற்றி பெறுவதற்காக எனக்கு வேட்பாளர் சந்தர்ப்பம் தரப்பட்டிருந்தால் தனக்கு எதிராக எதிர்பிரச்சாரம் செய்யவேண்டிய தேவை ஏன் கட்சியின் முக்கிய பொறுப்பிலுள்ளவர்களுக்கு ஏற்பட்டது என்று கேள்வி எழுப்பினார்.

உதவி பெறும் விடயத்தில் தலைமைக்கு எதிரான கொட்வின் தினேஸ் போன்றவர்களுடன் தனக்கு நீண்டகாலமாக எதுவித தொடர்புகளும் இல்லை என்றும் கட்சியின் ஏனைய தரப்பினர் அவ்வாறான தொடர்புகளை பேணியதையும் அறிய முடிவதாக சுட்டிக்காட்டினார். தேர்தல்கள் தொடர்பிலான முடிவுகளில் யதார்த்தபூர்வமான மக்களின் உணர்வலைகளுடன் ஒத்துப்போகின்ற கட்சி முடிவுகளுடன் முரண்பாடான கருத்துக்களை கட்சிமட்டத்தில் கொண்டிருந்தமை உண்மை என்றும் அதை மக்களிடத்தில் பிரச்சாரம் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்

பிரிந்து கூட்டமைப்புடனோ அல்லது கூட்டணியுடனோ இணையும் எண்ணம் தனக்கு இல்லை என்று நெருங்கியவர்களிடம் தெரிவித்திருக்கிறார். கட்சி கொள்கையில் தான் எப்பொழும் வழுவ இல்லை என்றும் தெரிவித்து வருகின்றார்

இந்நிலையில் சமரச முயற்சிகள் தொடர்கின்றன. வார இறுதியில் சில சந்திப்புக்களுக்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

சமூக வலைத்தளங்களில் ஆதரவாளரிடையே காரசாமான வாதப்பிரதிவாதங்கள் நடைபெறுகின்றன. சரி பிழைகளுக்கு அப்பால் பலரும் மணிவண்ணனுக்கு எதிரான இந்த கட்சி நடவடிக்கைகள் பொருத்தமற்ற நேரத்தில் பொருத்தமற்ற வகையில் கையாளப்பட்டு எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கின்றனர்.

பதவி நீக்கம் தொடர்பில் வழங்கப்பட்ட காரணங்கள் தொடர்பில்  கட்சித்தலைமையை எள்ளி நகையாடி வருகின்றனர் ஆனால் இந்த நேரத்தில் இந்த முடிவை எடுக்காமல் விட்டால் பாரிய பிரச்சனையாகியிருந்திருக்கும் என்றும்  கடித்தில் குறிப்பிட்டவை சுருக்கமான காரணங்கள் என்றும் அதன் பின்னாலுள்ள வரலாறுகளை விரிவாக ஆராய்ந்தால் மக்களுக்கும் உறுப்பினர்களுக்கும் தாம் எடுத்த முடிவில் பிழையில்லை என்பது தெரிய வரும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts