போக்குவரத்து கட்டுப்பாடுகளை 14 ஆம் திகதி நீக்குவது பொருத்தமான தீர்மானமல்ல – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!!

நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக முழுநேர போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் , தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்களின் எண்ணிக்கை என்பன குறைவடையவில்லை. அதற்கமைய முழுநேர போக்குவரத்தை கட்டுப்பாட்டின் பயனை நாம் பெறவில்லை. எனவே 14 ஆம் திகதி போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீக்குவது பொருத்தமானதல்ல என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு மற்றும்...

ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

சீனாவிடம் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகுதி சைனோபார்ம் கொவிட் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. அதன்படி, இன்று (06) காலை ஒரு மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்ததடைந்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். மேலும், ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 9 ஆம் திகதி நாட்டுக்கு அனுப்பி...
Ad Widget

சிகிச்சை நிலையத்துக்கு செல்ல மறுப்பு தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் வைரஸ் தொற்றாளர்கள்!!

யாழ்ப்பாணம்- சுன்னாகம், மயிலங்காடு பகுதியிலுள்ள 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை நிலையத்துக்கு செல்ல முடியாது என அவர்கள் மறுப்புத் தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குறித்த தொற்றாளர்களுக்கு, இவ்விடயத்தில் சுகாதாரத் துறையினர் ஆலோசனை வழங்கியபோதும் அதனை ஏற்காது அவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்களை சிகிச்சை நிலையத்துக்கு...

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3600 ஆக அதிகரித்துள்ளது!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3600 ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்க அதிபர் மேலும் கூறியுள்ளதாவது, ‘யாழ்ப்பாணத்தில் நேற்று மாத்திரம் 92 பேருக்கு கொரோனா வைரஸ்...

நாட்டில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200,000ஐத் தாண்டியது

நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியது. உலகில் 2 லட்சம. கோவிட்-19 நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட 78ஆவது நாடாக இலங்கை காணப்படுகிறது. அரச தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நாட்டில் இன்று மாலை வரை 2 ஆயிரத்து 280 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஜனவரி...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இன்று (சனிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. இன்று (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில், யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் இணைந்து குறித்த தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை முன்னெடுத்தனர். ஊசி மருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்கள் மற்றும் வேறு...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கிளினிக் பிரிவில் வைத்திய சேவை பெறுவோருக்கு விசேட அறிவிப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலுள்ள சிகிச்சை களத்தில் வைத்திய சேவை பெறும் நோயாளிகளுக்கான மருந்து பொருட்கள், தபால் ஊடாக அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார் ஆகவே இன்றிலிருந்து யாழ்.போதனா வைத்தியசாலையின் கிளினிக் பிரிவில் வைத்திய சேவை பெறும் நோயாளர்கள், தமக்குரிய மருந்துப் பொருட்களை 021- 2214249, 021- 2222261, 021- 2223348...

14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்படும் பயணக்கட்டுப்பாடு !!

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இன்று (சனிக்கிழமை) கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அரசாங்க பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு கூறினார். ஜூன் 14 ஆம் திகதிக்கு பின்னர் பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க முடிவு எட்டப்பட்டால்,...

யாழில் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன!!

யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த மூன்று கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டப்பட்டிருந்த தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இரண்டு கிராம சேவகர்...

கிளிநொச்சியில் கொரோனா தொற்றினால் இருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் கரைச்சி சுகாதார வைத்திய பிரிவில் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். கண்டாவளை சுகாதாரப் பிரிவில் கண்ணகிபுரம், புன்னைநீராவி என்ற முகவரியைச் சேர்ந்த 67 வயதுடைய நல்லதம்பி சிவபாக்கியம் என்பவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை, கரைச்சி...

யாழ் போதனா வைத்தியசாலையில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் இட நெருக்கடி!! பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை பதில் பணிப்பாளர், மருத்துவர் ச.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார். அதனால் தற்போது இரண்டு கோவிட்-19 சிகிச்சை விடுதிகள் காணப்படும் நிலையில் மேதிகமாக மூன்றாவது விடுதியில் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது; யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக இரண்டு விடுதிகள்...

யாழ்.போதனா வைத்தியசாலையில் தொலைபேசியை திருட்டு கொடுத்தவர்களை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை!

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர், ஊழியர்களின் பெறுமதி வாய்ந்த கைத்தொலைபேசிகள் திருடப்பட்டமை தொடர்பில் கடந்த மார்ச் மாதம் 24 ம் திகதி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 7 கைத்தொலைபேசிகள் மீட்கப்பட்டன. எனினும் அவற்றில் இரண்டு தொலைபேசிகள் தொடர்பில் மட்டுமே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து அவைகள் உரியவர்களிடம் நீதிமன்றம் மூலம்...

அரச வைத்தியசாலைகளில் மாதாந்த பரிசோதனைக்கு செல்வோருக்கான அறிவிப்பு!

அரசு மருத்துவமனைகளில் மாதாந்த பரிசோதனைக்கு (கிளினிக் – Clinic) பதிவுசெய்யப்பட்ட நோயாளிகளுக்கான வீட்டு விநியோக திட்டம் நெற்று (வியாழக்கிழமை) முதல் செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணக் கட்டுப்பாடு காரணமாக மருத்துவமனைகளில் நடத்தப்படும் மாதாந்த பரிசோதனையில் கலந்துகொள்ள முடியாத நோயாளிகளின் வசதிக்காக சுகாதார அமைச்சகம் மற்றும் தபால் துறை இணைந்து இந்த திட்டத்தை செயற்படுத்துகின்றன. அதன்படி, அரச...

யாழில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் தனிமைப்படுத்தலில்!!

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் சுகாதார பிரிவினரால் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் மக்கள் ஒன்று கூடுவது, வீதியில் பயணிப்பது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் உள்ள பச்சை பள்ளியில் 14 பேர் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்....

கொரோனா தடுப்பூசியை கர்ப்பிணி தாய்மார்களும் அச்சமின்றி பெற்றுக்கொள்ள முடியும்- வைத்தியர் உதயகுமார்

கொரோனா தடுப்பூசியை கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அச்சமின்றி பெற்றுக்கொள்ள முடியுமென சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பணிப்பாளர் வைத்தியர் இளையதம்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் இளையதம்பி உதயகுமார் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை...

யாழில் தாதியர்கள் அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தில்!!

யாழ். மாவட்ட தாதியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்னால் இன்று (03) கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். நாடு பூராகவும் 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 9 மாவட்டங்களில் தாதியர்கள் காலை 7 தொடக்கம் நன்பகல் 12 மணி வரை அடையாள பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அந்த வகையில் யாழ்ப்பாணம் போதனா...

யாழ்ப்பாணத்தில் இன்று மாலை வரை 49, 280 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கல்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை மாலை வரை 49 ஆயிரத்து 280 கோவிட்-19 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கோவிட்- 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 50 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு...

இலவச சூம்(zoom) வகுப்புக்களை குழப்பும் விசமிகள் – ஆசிரியர்கள் கவலை

மாணவர்களுக்கு இலவச கற்றல் செயற்பாடுகளை சூம் செயலி ஊடாக முன்னெடுக்கும் போது , போலி இணைப்புக்களில் ஊடுருவும் விசமிகள் கற்றல் செயற்பாடுகளை குழப்புவதாக ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கோரோனா பெருந்தொற்று காரணமாக நாடுமுழுவதும் பயண தடை அமுலில் உள்ளது. இதனால் மாண்வர்களின் கல்வி செயற்பாடுகளுக்கு பெரும் தடங்கல் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் சூம் செயலி ஊடாக கற்றல்...

இணுவில் – கலாஜோதி கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது!!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு கிராம அலுவலர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் ஏற்கனவே அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட மூன்று கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இணுவில் கிராமத்தில் ஜே190 கலாஜோதி கிராம சேவகர் பிரிவில் அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இணுவில் கிராமத்தின் ஒரு பகுதியினை நேற்று இரவு முதல்...

யாழ்.மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட முதலாம் கட்ட 50ஆயிரம் தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவடைந்தன!

யாழ்.மாவட்டத்திற்கு முதற்கட்டமாக வழங்கப்பட்ட தடுப்பூசிகள் இன்றுடன்(புதன்கிழமை) நிறைவடைந்ததாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். அடுத்த கட்ட தடுப்பூசிகள் வார இறுதியில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே ஏற்கெனவே தடுப்பூசி வழங்க தயாராக இருந்த கிராம சேவகர் பிரிவுகளில் நாளைய தினம் தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது எனவும் அந்த குறித்த பகுதி மக்களுக்கான தடுப்பூசிகள்...
Loading posts...

All posts loaded

No more posts