Ad Widget

யாழில் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன!!

யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த மூன்று கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டப்பட்டிருந்த தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இரண்டு கிராம சேவகர் பிரிவும் காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஒரு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 2 கிராம அலுவலர் பிரிவுகள் மற்றும் ஜே189, 190 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் ஒரு சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் அரசடிப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு அரசினால் வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை நேற்று இரவு கிடைத்த பீ.சீ.ஆர்.பரிசோதனைகளில் முடிவுகளின்படி யாழ்ப்பாணத்தில் 59 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts