- Thursday
- April 30th, 2026
இங்கிலாந்தில் உள்ள கென்ட் மாகாணத்தில் வேகமாகப் பரவும் பி .1.1.7 கோவிட்-19 புதிய திரிபு வைரஸ் கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, குலியாபிட்டி, வாரியபொல, மாத்தறை, ஹபரதுவா, திசாமஹராம, கராபிட்டி மற்றும் ராகம பகுதிகளைச் சேர்ந்த நபர்களிடம் பெற்றப்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை என்று ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ...
இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தீப்பற்றிய கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் இன்று(வியாழக்கிழமை) காலை மன்னார் வங்காலை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். வங்காலை பொலிஸ் நிலைத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பிலேயே சிறிய பிளாஸ்ரிக் உருண்டைகள் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சிறிய உருண்டைகள் கடற்கரையோரங்கள் முழுவதிலும்...
யாழ்.மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இணைந்து கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு முறைப்பாடு கிடைக்கபெற்றதன் அடிப்படையில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “குறித்த பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மீட்கப்படும் கஞ்சா...
சிறுவர்களுக்கு முகக்கவசம் அணிவதில் எந்த பிரச்சினையும் இல்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் குழந்தை வைத்தியர் பேராசிரியர் குவனி லியனகே தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார். முகக் கவசம் அணிவதைப் போன்று இரு கைகளையும் கழுவி சுத்தம் செய்வதற்கும் அதேபோன்று கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர்...
யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக் களத்தில் (Clinic) வைத்தியசேவை பெறும் நேயாளர்களுக்கான மருந்து வகைகள், நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாக தபால் மூலமாக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “எனவே நோயாளர்கள் தங்களுக்கு தேவையான மருந்து வகைகளை கீழ் குறிப்பிட்ட தெலைபேசி இலக்கங்களுடன்...
தற்போது நடைமுறையிலுள்ள பயணக்கட்டு ஜூன் 14 ஆம் திகதியின் பின்னர் தொடர்வதற்கு எந்த தீர்மானமும் இல்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தற்போது அமுலில் இருக்கும் பயணத் தடை எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 04.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
நாட்டில் மேலும் 54 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. இதுவே, இலங்கையில் ஒரேநாளில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பாகும். இந்த மரணங்கள் கடந்த மே 10ஆம் திகதி முதல் ஜூன் ஏழாம் திகதிவரை நிகழ்ந்துள்ளதுடன் இவ்வாறு உயிரிழந்தவர்களில், 32 ஆண்களும் 22...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்து இது தொடர்பான வர்த்தமானியினை வெளியிட்டுள்ளார். வியாபாரக் கற்கைகள், பிரயோக விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியல் கற்கைகள் என்பனவற்றின் கற்றல் கிளைகளில் உயர் கல்வியை வழங்கும், மேம்படுத்தும் அத்துடன் அபிருத்தி செய்யும்...
சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளை பகிர்வதை தவிர்க்குமாறும் அவ்வாறு செய்பவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படலாம் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது தண்டனைச் சட்டத்தின் 120, 286, 286 ஏ, 291 ஏ, 291 பி, 345, 365 டி, 402, 403, மற்றும் 486 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு...
“முதலீட்டு சபை, கொழும்பு பங்குச்சந்தை மற்றும் இலங்கை வர்த்தக சபை ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள, இணையத்தினூடாக நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். இதனை காலத்திற்கு உகந்ததொரு நடவடிக்கையாக நாம் கருதுகின்றோம். 2006 முதல் 2014 வரையான 9 ஆண்டு காலத்தில் நமது நாடு அபிவிருத்தியடைந்த வேகத்தை நீங்கள்...
ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும் 10ஆம் திகதி ஓய்வூதியம் வழங்கப்பட உள்ள நிலையில் அவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை முப்படையினர் ஏற்படுத்திக் கொடுக்க உள்ளனர். கிராம சேவகர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் குறித்த போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும் அன்றைய தினத்தில் அனைத்து வங்கிகளையும் திறந்து...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் நுண்கலைமாணி (பரதம்), நுண்கலைமாணி (சங்கீதம்), நுண்கலைமாணி (சித்திரமும் வடிவமைப்பும்) ஆகிய நான்கு வருடக் கற்கை நெறிகளின் 2020/2021 ஆம் கல்வியாண்டுக்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கான அனுமதி மற்றும் தெரிவுப் பரீட்சைகள் இணைய வழியாக இடம்பெறவுள்ளன. நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கேற்ப அனுமதி மற்றும் தெரிவுப் பரீட்சைகளை மாற்று ஏற்பாட்டின் படி...
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளனர். இந்த மாதம் 10 ஆம் திகதி,கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்த ஆலய வருடாந்த மகோற்சவத்தை மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன்...
யாழ்ப்பாணத்தில் ஒரு மாதத்திற்கு உட்பட்ட 3 குழந்தைகள் உள்ளிட்ட 5 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்- பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட பிறந்து 12நாட்களேயான குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறந்து 20 நாட்களேயான குருநகர் பகுதியை சேர்ந்த குழந்தை...
நாட்டில் கொரோனா தொற்று அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக நிபுணர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே மதிப்பீடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தற்போதைய பரிந்துரைகளின்படி, பயணக் கட்டுப்பாடுகள் 14 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் என்றும் இராணுவத்...
யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோயினால் இரண்டு நாள்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் 50 பேர் உயிரிழந்துள்ளனர். சனிக்கிழமை கொக்குவிலைச் சேர்ந்த 85 வயதுடைய ஒருவர் கோவிட்-19 சிகிச்சை பிரிவில் உயிரிழந்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை அளவெட்டியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவர்...
கோவிட்- 19 நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கடலுணவு வியாபாரி ஒருவர், வாகன குத்தகைக் கட்டணத்தை செலுத்த முடியாமல் நிதி நிறுவன உத்தியோகத்தர்களின் நெருக்கடி காரணமாக தனது உயிரை மாய்த்துள்ளார். வடமராட்சி கிழக்கு உடுத்துறை – ஆழியவளையைச் சேர்ந்த சிவலிங்கம் சிவதரன் (வயது-34) என்ற 2...
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பாக இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பாக இன்று காலை வரையில் எவ்வித அறிவுறுத்தலும்...
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து எந்த தீர்மானமும் இதுவரை எட்டப்படவில்லை என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார். மேலும் ஜூன் 29 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளரை...
பயணக் கட்டுப்பாடு காரணமாக பல தனியார் வங்கிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சேவைகளைப் பெற்றுக்கொள்ள ஒன்லைன் வங்கியைப் பயன்படுத்துமாறு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளன. பெரும்பாலான தனியார் வங்கிகள் ஜூன் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்பட்டு திங்களன்று மீண்டும் திறக்கப்படும் என அறிவித்துள்ளன. அதன்படி, கொமர்சியல், சம்பத், செலான், DFCC, நேஷன் டிரஸ்ட், அமானா...
Loading posts...
All posts loaded
No more posts
