பயணக்கட்டுப்பாடு நீடிப்பு – புதிய அறிவிப்பை வெளியிட்டார் இராணுவ தளபதி

தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். அதன்படி ஜூன் 14 ஆம் காலை 04 மணி வரை குறித்த பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்றும் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். முன்னர் அறிவிக்கப்பட்ட பிரகாரம் எதிர்வரும் 7 ஆம் திகதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என்றும் அவர்...

வியாபார, தனிநபர் கடன்களுக்கு ஓகஸ்ட் 31ஆம் திகதிவரை சலுகை!!

கோவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலை காரணமாக உரிமம்பெற்ற வங்கிகளின் கடன்பெறுநர்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்களைப் பரிசீலனையில் கொண்டு, பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு 2021 ஓகஸ்ட் 31ஆம் திகதிவரை முதல், வட்டி அல்லது இரண்டினையும் அறவிடுவதைப் பிற்போடுமாறு இலங்கை மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. இந்த சலுகை மே மாதம் 15ஆம் திகதியிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் செயற்படுத்துமாறு மத்திய...
Ad Widget

யாழில் அண்மைய நாட்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்!

பயணத்தடை அமுலிலுள்ள வேளையில் யாழ்.குடாநாட்டில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. யாழ்.குடாநாட்டில் பயணத்தடை காரணமாக வீதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் அற்ற நிலையில் மூடப்பட்டுள்ள கடைகளை உடைத்து திருட்டு கும்பல் கைவரிசை காட்டி வருகின்றது. அத்துடன், வீடுகளுக்குள் சூட்சுமமான முறையில் உள்நுழைந்து, கிணற்றடியில் உள்ள மோட்டார் மற்றும் ஏனைய பெறுமதியான தளபாடங்களை வீட்டுக்குள் ஆட்கள் இருக்கும்...

யாழ்ப்பாணத்தில் மேலும் மூவர் கோவிட்-19 நோயினால் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோயினால் இன்று திங்கட்கிழமை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் 43 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்புத் துறையைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவர் உள்பட மூவரே உயிரிழந்துள்ளனர்.

கோவிட்-19 தடுப்பூசியை மக்கள் அச்சமின்றி பெற்றுக்கொள்ளவேண்டும் – மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளபணிப்பாளர் வலியுறுத்து

யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் தடுப்பூசிக்கு வரவேற்பு குறைவாக காணப்படுகின்றது. எனவே மக்கள் கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து விடுபட அனைவரும் அச்சமின்றி தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவேண்டும். இவ்வாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கோவிட் – 19 உலகளாவிய தொற்றின் மூன்றாவது அலை இன்று இலங்கையில் வெகு தீவிரமாகப்...

தமிழ் அரசியல்வாதிகள் அரசாங்கத்தின் சலுகைகளுக்கு அடிமையானவர்கள்- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

தமிழ் அரசியல்வாதிகள், அரசாங்கத்தின் சலுகைகளுக்கு அடிமையானவர்கள் என்பது பெரும்பான்மையினருக்கு நன்கு தெரியும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரவித்துள்ளார். யாழ்.நூலகம் எரிக்கப்பட்டு 40ஆவது ஆண்டு நினைவு தினம், வவுனியாவில் பிரத்தியேக இடமொன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்டது. இதன்போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின்...

5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவைப் பெறுவதற்கான விண்ணப்படிவம் வெளியீடு!!

அரசாங்கம் வழங்கும் 5000 ரூபாயைப் பெற்றுக்கொள்ள குடும்பங்களால் நிரப்பப்பட வேண்டிய விண்ணப்ப படிவத்தை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினருக்கான கொடுப்பனவை வழங்குவதாக அரசாங்கம் சமீபத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

7ஆம் திகதிக்குப் பின்னரும் பயணத் தடையை நீடிப்பது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை!!

வரும் ஜூன் 7ஆம் திகதிக்குப் பின்னரும் தற்போதைய பயணக் கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். மருத்துவர்கள் உள்ளிட்ட பொறுப்பான தரப்பினருடன் தினசரி அறிக்கைகளை ஆராய்ந்த பின்னர், ஜனாதிபதி செயலணியில் கலந்துரையாடிய பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார். அதன்படி,...

நல்லூர் – அரசடியிலிருந்து வெளியேறிய ஐவரை விளக்கமறியலில் வைத்தது யாழ்ப்பாணம் நீதிமன்றம்!!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து வெளியேறியமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட 5 பேரை 7 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. நல்லூர் அரசடி பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ள நிலையில் அந்த இடத்தைச் சேர்ந்த ஐந்து பேர் யாழ்ப்பாணம் சிவன் கோயிலடியில் வைத்து இன்று அதிகாலை 4...

யாழ். பல்கலை. ஆளணிக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்க ஜனாதிபதி சிறப்பு ஒப்புதல்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் ஆயிரத்து 600 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ச சிறப்பு பணிப்புரை வழங்கியுள்ளார். இதற்கமைய எதிர்வரும் 2ஆம் திகதி புதன்கிழமை, 3ஆம் திகதி வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களும் பல்கலைக்கழக ஆளணியருக்கு சினோபாம் கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இந்தத் தகவலை பல்கலைக் கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு...

தடுப்பூசியை அச்சமின்றி பெற்றுக்கொள்ளுமாறு மக்களுக்கு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை!!

யாழ்ப்பாணத்தில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியே வழங்கப்படுகின்றமையினால், மக்கள் அச்சமின்றி தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாமென மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றமை தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது க.மகேசன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு இன்றும் இடம்பெற்று...

அடுத்த கட்ட தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு முதல் கட்ட தடுப்பூசியை விரைவுப்படுத்த வேண்டும்- அங்கஜன்

யாழ்ப்பாணத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள முதல் கட்ட தடுப்பூசியை விரைவாக மக்களுக்கு செலுத்தினால்தான் அடுத்த கட்ட தடுப்பூசியை விரைவாக பெற்றுக்கொள்ள முடியுமென நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கஜன் இராமநாதன் மேலும் கூறியுள்ளதாவது, நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை காரணமாக யாழ்ப்பாணத்திலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை...

அத்தியாவசிய பொருட்களை பொது மக்கள் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறை!

பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள இந்தக் காலப்பகுதியில் பொது மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறப்பு அங்காடிகள், ச.தொ.ச மற்றும் ஏனைய நிறுவனங்களால் இணையத்தளம் ஊடாக பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்தக் காலப்பகுதியில் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ள அதேவேளை, அரச ஒளடத கூட்டுத்தாபனத்தின்...

யாழில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்!!

யாழ்ப்பாணத்தில் 12 மையங்களில், தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திற்கு வழங்கப்பட்டுள்ள 50,000 தடுப்பூசிகளை, அதிக தொற்று ஏற்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்குரிய நடவடிக்கையினை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். மேலும் இந்த தடுப்பூசிகளை எதிர்வரும் 15 நாட்களுக்கு வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும் மிகத் துரிதமாக வழங்குவதற்குரிய...

வட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தியை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் !!!

கொரோனா தடுப்பூசியை பெறுவதாக தெரிவித்துவரும் வட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தியை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்யுமாறு சுகாதார அமைச்சினால் இதுவரை எந்த நடைமுறையும் முன்னெடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். சில நிறுவனங்கள் இதுபோன்ற பதிவு...

நல்லூர் அரசடி பகுதி தனிமைப்படுத்தப்பட்டது!!

யாழ்ப்பாணம் நல்லூர் அரசடிப் பகுதியை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நேற்று மாலை முதல் மறு அறிவித்தல்வரை முடக்கப்பட்டுள்ளது. நல்லூர் அரசடியில் கடந்த ஒரு வாரத்தில் 22 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதனால் அரசடியில் வதியும் மக்களை சுயதனிமைப்படுத்துவதுடன் அந்தப் பகுதியை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நல்லூர் ஜே 103 கிராம அலுவலகர் பிரிவில் ஒரு...

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணி ஞாயிறன்று ஆரம்பம்

யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பிரதமரின் இணைப்புச் செயலாளர், கீதநாதன் காசிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 16 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளிலும் கிராம அலுவலக பிரிவு ரீதியில் கோவிட்-19 தடுப்பூசி மருந்து வழங்கும் பணி முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்....

பயணத்தடையை தளர்த்துவதில் பயனில்லை – ஜனாதிபதி

கடந்த 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணத்தடை தளர்த்தப்பட்டவேளையில் பொதுமக்கள் செயற்பட்ட விதம் நோய்த்தொற்று மேலும் பரவுவதற்கு இடமளித்ததைப் போன்றதாகும். நோய்த்தொற்று பரவுவதை தடுப்பதற்கு அரசு எடுக்கும் முயற்சிகள் இதன்மூலம் தோல்வி அடைய கூடுமென்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனவே ஜூன் மாதம் 07ஆம் திகதி வரை பயணத்தடையை மேலும் நீடிப்பதற்கு ஜனாதிபதி...

வடக்கு- கிழக்கு மக்களுக்கு கோவிட் – 19 தடுப்பூசி மருந்துகளை இந்தியா வழங்கவேண்டும் – விக்னேஸ்வரன்

வடக்கு – கிழக்கு மக்கள் கோவிட்-19 நோய்த்தொற்று ஆபத்திலிருந்து விடுபட இந்திய அரசு தடுப்பூசி மருத்துகளை வழங்கவேண்டும் என்று அந்த நாட்டின் யாழ்ப்பாணம் துணைத் தூதுவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் அவசர கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதுதொடர்பில் இந்திய துணைத் தூதுவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும்...

கோப்பாயில் ட்ரோன் கமரா ஊடாக கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

கோப்பாய் பொலிஸ் பிரிவில், ட்ரோன் கமரா ஊடான கண்காணிப்பு நடவடிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில், இலங்கை விமானப் படையின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நடைமுறையிலுள்ள பயணத் தடை காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறி செயற்படுவோரை கைது செய்வதற்காக, ட்ரோன் கமரா கண்காணிப்பு நடவடிக்கையினை ஏனைய பகுதிகளில்...
Loading posts...

All posts loaded

No more posts