Ad Widget

கோப்பாயில் ட்ரோன் கமரா ஊடாக கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

கோப்பாய் பொலிஸ் பிரிவில், ட்ரோன் கமரா ஊடான கண்காணிப்பு நடவடிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கை கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில், இலங்கை விமானப் படையின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நடைமுறையிலுள்ள பயணத் தடை காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறி செயற்படுவோரை கைது செய்வதற்காக, ட்ரோன் கமரா கண்காணிப்பு நடவடிக்கையினை ஏனைய பகுதிகளில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று முன்தினம், யாழ்ப்பாணத்தில் ட்ரோன் கமரா ஊடான கண்காணிப்பு நடவடிக்கை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று, கோப்பாய் பொலிஸ் பிரிவில் இந்த ட்ரோன் கமரா ஊடான கண்காணிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts