- Tuesday
- April 28th, 2026
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் குறைந்த விலையில் எரிபொருள் வழங்க முடியாது. எனவே பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஐ.ஒ.சி நிறுவனம் ஆகியன அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளனர். அரசாங்கத்தின் அனுமதியை பெற்று எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் என்ற தேவைப்பாடு இல்லாத போதிலும்...
விவசாயிகள் தற்போது முகங்கொடுத்துள்ள உரத் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. வடக்கு, கிழக்கில் உள்ள சகல கமநல சேவை நிலையங்களுக்கு முன்பாகவும் இன்று காலை 9 மணிமுதல் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையிலான போராட்டம் தற்போது...
நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு இராணுவ தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா அறிவுறுத்தியுள்ளார். மித்ரா சக்தி இராணுவப் பயிற்சியை அவதானித்த பின்னர் இராணுவ தளபதி இன்று ஊடகங்களுக்கு இந்தக் கருத்தை வெளியிட்டார். “கோவிட் -19 தொடர்பான ஜனாதிபதி செயலணி இன்று ஜனாதிபதி கோத்தாபய...
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 90 ஆவது ஜனனதினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அப்துல் கலாமின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், வடக்கு...
பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய உற்பத்தியான ஹைலன்ட் பால் மாவின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக MILCO தனியார் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அதன்படி, 400 கிராம் ஹைலன்ட் பால் மாவின் விலை 90 ரூபாவினாலும், ஒரு கிலோ கிராம் ஹைலன்ட் பால் மாவின் விலை 225 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 400 கிராம்...
கொரோனா தொற்று பரவல் அபாயம் காரணமாக வீடுகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் சாதாரண நோயாளர்கள் வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெறலாம். என பணிப்பாளர், வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும்கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவல் அபாயம் தற்சமயம் ஓரளவு குறைவடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மட்டுப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் வழமைக்கு திரும்பி கொண்டிருக்கின்றது. வைத்தியசாலையின்...
வவுனியாவில் தீயில் எரிந்து குடும்ப பெண் ஒருவர் மரணமடைந்த நிலையில், சந்தேகத்தில் குறித்த பெண்ணின் கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (14) காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கற்பகபுரம், நான்காம் ஒழுங்கையில் வீடு ஒன்றின் கூரை மற்றும் யன்னல் தூவரம் ஊடாக நெருப்பு மற்றும் புகை...
ஏழாலையில் வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவர்களை, அயலவர்கள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில், அவர்களை காவல்துறையினர் தப்பிக்கவிட்ட நிலையில் ஒருவர் காவல்துறையினரினால் மீளவும் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொருவர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார் என தமக்கு சுன்னாக காவல்துறையினர் அறிவித்து உள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வட பிராந்திய இணைப்பாளர் த....
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் அரச ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதி நிதியிலிருந்து இழப்பீடுகளை பெற்றுக் கொடுக்கும் வகையிலான திட்டமொன்றை வகுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது...
புதிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைய சில கட்டுப்பாடுகளுடன் திருமண நிகழ்வுகளை நாளை (15) முதல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மண்டபவங்களின் அளவில் 25 சதவீதம் பூர்த்தியடைய கூடிய விதத்தில் அதிகபட்சமாக 50 பேர் கலந்து கொள்ளும் அளவில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வௌிப்புற திருமணங்கள் வரவேற்கப்படுவதாகவும் அவற்றில் மது பாவனைக்கு அனுமதி இல்லை...
அனைத்து அலைபேசி இணைப்பு சந்தாதாரர்களும் தங்கள் அலைபேசி எண்ணை மற்றொரு சேவை வழங்குநரின் இணைப்புக்கு (Number Portability) மாற்றும் சேவைக்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற்றுள்ளனர். இந்தத் தகவலை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷாத சேனாநாயக்க தெரிவித்தார். இன்று காலை ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார். அனைத்து...
வாள்வெட்டு சம்பவங்கள், வன்முறைச் சம்பவங்களுக்கு முடிவு கட்டுவேன். என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், என்னுடைய பதவிக்காலத்தில் வடமாகாணத்தில் வாள்வெட்டு மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு இடமளிக்கப்போவதில்லை. வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான நடவடிக்கை...
நாட்டின் முன்னணி எரிவாயு நிறுவனங்களில் ஒன்றான லிற்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் சமீபத்தில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ .1270 ஆல் உயர்த்தியது. விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்த லிற்ரோ நிறுவனத்தின் தலைவர் டெஷாரா ஜெயசிங்க, இந்த உயர்வு உடனடியாக குறைக்கப்படும் என்று பொதுமக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளிக்க தேவையில்லை என்று கூறினார்....
யாழ்.மாவட்டத்தில் 19 பேர் உட்பட வடக்கில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் 147 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 27 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். இதன்படி யாழ்.மாவட்டத்தில் 5 சிறுவர்கள் உட்பட 19 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்து 4 மாதங்களேயான சிசுவுக்கும்,...
வடக்கு மாகாண இளையோருக்கு வேலையில்லாப் பிரச்சினை காரணமாகவே வன்முறைச் சம்பவங்களும் போதைப்பொருள் பாவனையும் அதிகரித்து காணப்படுகின்றன என்று பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தன்னிடம் தெரிவித்தார் என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர், அதிவண, கலாநிதி ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் தெரிவித்தார். வடக்கிற்கு பயணம் மேற்கொண்ட பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயரை நேற்று மாலை...
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களை தடுக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில் அதனை நடைமுறைப்படுத்தாது மீனவர்களை வன்முறைக்கு தூண்டும் மீன்பிடித்துறை அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.எ.சுமந்திரன், கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மீன்பிடி சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் வலியுறுத்துகின்றார். யாழ்ப்பணத்தில் நேற்று இடம்பெற்ற...
இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாட்டினை புரிந்து கொள்வதாக இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் இந்திய அரச தலைவர்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்....
அத்தியாவசியமற்ற எந்தவொரு நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, கட்டுப்பாடுகளை மீறி நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைவாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், பிற்போடப்பட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கான...
மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை விரைவில் நீக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 21ஆம் திகதி வரை தற்போது மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை அமுலில் உள்ளது. இந்தநிலையில், பயணத்தடையை மேலும் நீட்டிப்பது குறித்து கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான செயலணி தீர்மானிக்கும். எனினும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம்,...
வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பில் நேரில் ஆராய்வதற்கு பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன நாளை கிளிநொச்சியில் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ள நிலையில் இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். இன்று நண்பகல் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அவர் வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுரம் ஆழ்வார் ஆலயம், தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்....
Loading posts...
All posts loaded
No more posts
