- Wednesday
- May 7th, 2025

வரலாற்றில் இருந்து பாடம் படிக்காத இலங்கை அரசாங்கம், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மூலம் மீண்டும் கடந்த காலத்திற்கு அழைப்பு விடுக்கின்றதா என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.வடக்கில் நடைபெற்றுள்ள வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், (more…)

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ள சுதந்திர ஊடகக் குரல் இந்த நடவடிக்கை ஐனநாயக விரோத நடவடிக்கையாகும் என்று தெரிவித்துள்ளது. (more…)

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து இன்றைய தினம் யாழ் குடாநாட்டை சேர்ந்த மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். (more…)

உதயன் ஆசிரியரைத் தாக்கியவர்களை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணி அரசை வலியுறுத்தியுள்ளது. (more…)

யாழ். பல்கலைக்கழகச் சூழலில் நேற்றுக் காலை ( 28.11.2012 ) படையினரும் பொலிஸாரும் இணைந்து பல்கலைக்கழக மாணவர்களை கலைத்துக் கலைத்து மிலேச்சத்தனமாகத் தாக்கி அட்டகாசம் புரிந்தனர்.இந்த அராஜகத்தால் பல்கலைக்கழக மாணவிகள் உட்பட பலர் காயமடைந்தனர். இவர்களில் 10 பேர் யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். (more…)

வடமாகாணத்திலேயே கூடுதலான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படு வருகின்றன என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். (more…)

தொற்றுநோய் அல்லாத நோய்களினால் இறப்புக்கள் அதிகரிப்பதாக புற்றுநோய் வைத்திய நிபுணர் என்.ஜெயக்குமார் தெரிவித்தார்.மருத்துவ சங்கத்தின் மாநாடு தொடர்பான ஊடகவியலாளர்கள் சந்திப்பு யாழ். போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் விடுதியில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. (more…)
இராவணனால் கடத்தப்பட்ட சீதை அசோகவனத்தில் அடைக்கப்பட்டாள். அவளைச் சுற்றி அசுரர் கூட்டம். கூடவே வேல், அம்பு, ஈட்டி என்ற ஆயுதங்களையும் அவர்கள் தரித்திருத்தனர். திரிசடை என்பாளைத் தவிர மற்றெல்லோரும் சீதையைப் பயமுறுத்துபவர்களே. (more…)

மாவீரர் நாளினை மையமாக கொண்டு யாழ் பல்கலைக்கழக மாணவ சமூகத்தினர் மீது சிறிலங்கா அரச படைகளினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் தொடர்பில் ஐ.நா உயர் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைத்தீவுக்கு அவசரமாக செல்ல வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர கோரிக்கையொன்றினை விடுத்துள்ளது. (more…)

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.புலனாய்வுப்பிரிவினர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளனர். (more…)

யாழ்ப்பாணத்தில், ஸ்ரீடெலோ காரியாலயம் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலியிலுள்ள காரியாலயம் மீதே இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…)

பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல், உதயன் ஆசிரியர் மீதான தாக்குதல், மற்றும் செய்தி சேகரித்த ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் என்பன வடக்கில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் இல்லை என்பதை நிரூபிக்கின்றன. (more…)

யாழ். குடாவில் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினமும் சர்வாலய தீபத்தினை ஏற்றவிடாது இராணுத்தினரும் புலனாய்வாளர்களும் மிரட்டியதுடன் மக்களால் ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீபங்களை எடுத்து வீசியதாகவும் தெரியவருகின்றது. (more…)

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் பல்வேறு தாக்குதல் சம்பவங்களைக் கண்டிக்கும் முகமாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் (03.12.2012 ) திங்கட்கிழமை அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற கலவரத்தினை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது எனவும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது. (more…)

பொலிஸாரின் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், வீதியிலிறங்கி ஊர்வலம் செல்ல முற்பட்டதை அடுத்தே அவர்களை பொலிஸார் அங்கிருந்து கலைத்தனர் என்று யாழ். பிரதி பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். (more…)

பாடசாலை அனுமதிக்கான கட்டணத்தை பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக நன்கொடையாக வழங்குமாறு வற்புறுத்தினால், இது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடியும் என்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். (more…)

All posts loaded
No more posts