- Sunday
- May 10th, 2026
தாங்கள் பிடித்து வைத்துள்ள ஜோர்டானைச் சேர்ந்த விமானியை எவ்வாறு கொலை செய்வது என்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ட்விட்டரில் மக்களிடம் கருத்து கேட்டுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோர்டானைச் சேர்ந்த விமானி முவாத் அல் கசீஸ்பெஹ்(26) என்ற மாவோஸை பிணையக் கைதியாக பிடித்தனர். விமானப் படை விமானியான அவர் தனது விமானத்தில் கோளாறு...
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்குட்பட்ட சமுர்த்திப் பயனாளிகளை, சமுர்த்தி முத்திரை, வீடமைப்பு திட்டம் வழங்குவதாகத் தெரிவித்து பிரதேச செயலகத்துக்கு அழைத்த சிலர் அவர்களிடம் மஹிந்தவுக்கு வாக்களிக்குமாறு கோரியுள்ளனர். தேர்தல் பிரசாரம் நடப்பதாக அறிந்துகொண்ட பிரதேச செயலக நிர்வாகத்தினர் சம்பவம் குறித்து அரச அதிபருக்குத் தெரியப்படுத்தி, அவரின் அனுமதியுடன் கூட்டத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம்...
நாம் ஈழத்தை கேட்கவில்லை. மாறாக சுயமரியாதையுடன் வாழ்வதையே விரும்புகின்றோம். என மன்னார் ஆயர் ராயேப்பு ஜோசேப்பு ஆண்டகை தெரிவித்தார். பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மன்னார் ஆயரை செவ்வாய்க்கிழமை (30) சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். இந்த சந்திப்பு குறித்து ஆயர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது, 'இந்த நாடு பல இன, சமய,...
சைவ மகா சபையின் ஏற்பாட்டில் ஈழத்துச் சிதம்பரம் நோக்கிய பாத யாத்திரை கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்த யாத்திரையில் மழையையும் பொருட்படுத்தாமல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து வருகை தந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் இணைந்துகொண்டனர். சைவ சமயத்தின் ஆன்மீக எழுச்சியாக இந்த பாத யாத்திரை அமைந்திருந்தது. காலை 7.30 மணியளவில் சம்பில்துறை சம்புநாதஈஸ்வரத்தில் இருந்து ஆரம்பான...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்த கணவன் மனைவியான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்களால் செவ்வாய்க்கிழமை (30) இரவு தாக்குதல் நடத்தப்பட்டதாகபருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் நடராசா நிறஞ்சன், அவரது மனைவியான பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் நிறஞ்சன் ஜெயசாந்தி ஆகியோரது...
யாழ்ப்பாணம், நல்லூர் சங்கிலியன் பூங்காவில் (கிட்டுப் பூங்கா) செவ்வாய்க்கிழமை (30) மாலை இடம்பெற்ற எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்துக்கு சென்ற இருவர் மீது கொலை அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டம் முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, வல்லைச் சந்தியில் இலக்கத் தகடு...
வடமாகாண சபை உறுப்பினர்கள், தமக்கு பாதுகாப்புத் தேவை என்று கோரும் பட்சத்தில் அவர்களுக்கான பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவிடம் கோரியுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் இன்று புதன்கிழமை (31) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் வடமாகாண சபை...
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணித்தலைவர் டோனி திடீரென ஓய்வை அறிவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி சமன் செய்தது. இதையடுத்து தனது ஓய்வை அறிவித்தார் இந்திய அணித்தலைவர் டோனி. ஒருநாள், ருவென்ரி-20 போட்டிகளில் கவனம் செலுத்தவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற்றார். சிறந்த...
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அபிவிருத்திக்கு 180 கோடி ரூபாய்களை ஒதுக்கிய அரசாங்கம், தேர்தல் பிரசாரத்துக்காக ஹிந்தி நடிகர் சல்மான்கானுக்கு 200 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. இதுதான் நாட்டில் தமிழ் மக்களின் நிலை என வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில்,...
கிளிநொச்சி ஜெயந்தி நகரைச் சேர்ந்த நா.வை.மகேந்திராசா என்ற மின் பொறியியலாளர் தமிழர் எழுத்துக்களுடன் கூடிய நாட்காட்டியை (கலண்டர்) 2015ஆம் ஆண்டுக்கு வெளியிட்டுள்ளார். திருவள்ளுவர் ஆண்டு 2046 எதிர்வரும் தைத்திருநாளில் பிறக்கின்றது. இதனையே தமிழ்ப் புதுவருடமாகக் கொள்வோரும் உள்ளனர். தமிழ் மாதங்களான சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி,...
யுத்தம் புரிந்த போது மக்கள் எவருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே படை நடவடிக்கைகளை முன்னெடுத்தோம் என்று முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்தார். யாழ். நல்லூர் சங்கிலியன் பூங்காவில் (கிட்டு பூங்கா) செவ்வாய்க்கிழமை (30) மாலை இடம்பெற்ற, பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பரப்புரைக்...
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் காணிப்பிரச்சினை தொடர்பான விஷேட கலந்துரையாடலொன்று செவ்வாய்க்கிழமை (30) கட்டைக்காடு கடற்றொழிலாளர் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டம், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் மற்றும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுற்குட்பட்ட கட்டைக்காட்டு கிராமத்தில் உள்ள மக்கள் எதிர்நோக்கிவரும் காணிப்பிரச்சினை தொடர்பில் விரிவாக...
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியுள்ள வாக்காளர்கள் தேசிய அடையாள அட்டைக்கு மேலதிகமாக செல்லுபடியாகும் கடவுச் சீட்டையும் எடுத்துவருவது கட்டாயம் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வெளிநாடு சென்றுள்ள வாக்காளர்களின் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளும் 2014 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பில் காணப்படும் அவர்களது வழமையான வதிவிட முகவரிகளுக்கு அனுப்பி...
பிரபாகரன் பெயர் கேட்டதும் பரப்புரைக்கூட்டத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரித்த சம்பவம் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் கிட்டு பூங்காவில் பொதுவேட்பாளர் மைத்திபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தனது உரையில் பிரபாகரன் என்ற பெயரை கூறியதுமே கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியில் விண்ணதிரக் கோஷமிட்டனர்....
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணி வேட்பாளர் மைத்திபாலவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை எனில் அவர்களுக்கு எதற்காக ஆதரவளிக்கவேண்டும். இருதரப்புக்கும் இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை வெளியிடப்பட்டால் சிங்கள மக்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என எதிரணி அஞ்சுகிறதா? அப்படி ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை எனில் ஏன் அவர்கள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவளித்திருக்கக்கூடாது. மைத்திரிக்கு ஆதரவளிப்பதன் மூலம் மீண்டும்...
இந்த நாட்டில் உள்ள எந்த மக்களாக இருந்தாலும் சமாதானமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்பதற்கான நான் பாடுபடுவேன் என பொதுவேட்பாளர் எப்போதும் கூறுவார். எனவே புதிய ஜனாதிபதி மைத்திரிபால உங்கள் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைக்கு சரியாக முறையில் தீர்வு காண்பார்.அதற்கு நாமும் ஒத்துழைப்பு வழங்குவோம். ஒரு நாட்டில் அதன் எல்லைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தன. அதேபோல...
டக்ளஸ் தேவானந்தா இந்த மக்களுக்கு என்ன செய்துவிட்டார். அமைச்சரவையில் வாயில் புட்டு அடைந்தவர் போல் இருப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்தின தெரிவித்தார்.வவுனியா வைரவ புளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் பிரசார கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர். பாதுகாப்பு செயலாளரும் ராஜபக்ச...
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்தவர்களில் 40 பேரின் உடல்கள் சிங்கப்பூருக்கு தென் பகுதியில் களிமன்தன் தீவு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய கடற்படை தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிறன்று 162 பயணிகளுடன் சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா விமானம் ஜாவா கடல் பகுதியில் மாயமானது. மோசமான வானிலை காரணமாக பாதை மாறிச் சென்ற விமானம் விபத்தில்...
தமிழ்த் தேசியக் கூட்டடைப்பு எந்தவிதமான ஒப்பந்தங்கள், நிபந்தனைகள் இன்றி எங்களுக்குஆதரவு வழங்கியுள்ளனர். நாம் எந்தவொரு அரசியல் கட்சிகளுடனும், அமைப்புக்களுடன் இரகசிய ஒப்பந்தங்கள் செய்து கொள்ளவுமில்லை, கைச்சாத்திடவுமில்லை. நாம் அனைவரும் மிகவும் புரிந்துணர்வுடன் செயற்படுகின்றோம்.என பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்றைய தினம் மாலை 4 மணியளவில் யாழ்.வருகை தந்த மைத்திரிபால சிறிசேன கிட்டுப்பூங்காவில் நடைபெற்ற பொது...
இலங்கையில் உள்ளவர்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கற்கவேண்டும். நான் தமிழ்மொழியை கற்க விருமபுகிறேன் நான் இன்னுமொரு தமிழ் மாணவன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் தந்தி தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அளித்த பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கேள்வி: நீங்கள் தேர்தல் பிரசார கூட்டங்கள் மற்றும் பொது...
Loading posts...
All posts loaded
No more posts
