Ad Widget

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக ஊடகங்களை ஒடுக்கும் நடவடிக்கைகள்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஊடகங்களை ஒடுக்கும் நடவடிக்கை மீள ஆரம்பித்துள்ளமை குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அச்சம் வெளியிட்டுள்ளது.

Caffe

கடந்த வாரம் இணைய ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு தடுத்து நிறுத்தப்பட்டதை சுட்டிக்காட்டி இந்த கருத்தை வெளியிட்டுள்ள கபே அமைப்பு, இது கருத்துவெளிப்பாட்டின் மீதான தாக்குதல் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த சகல முக்கிய இணையத் தளங்களையும் சோந்த 20 ஊடகவியலாளர்கள் கலந்துகொள்ளவிருந்த இந்த செயலமர்வு நீர்கொழும்பு பொலிஸாரும், பொலிஸ் தலைமையகமும் குறிப்பிட்ட ஹோட்டல் நிர்வாகத்துக்குக் கொடுத்த அழுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டது.

கடந்த காலங்களிலும் இதே தந்திரோபாயம் பின்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை நாங்கள் 2015 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஊடகங்களை ஒடுக்கும் பெரும் தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாக கருதுகிறோம்.

இவ்வாறு இணையத்தளச் செய்தியாளர்களை ஒடுக்கினால், பெருமளவு மக்களுக்கு முக்கியமான தகவல்கள் சென்றடைவதை தடுக்கலாம் என அரசாங்கம் கருதுகிறது. குறிப்பாக இளைஞர்களுக்கு தகவல்கள் சென்றடைவதை தடுக்கலாம் என அது எதிர்பார்க்கிறது.

இதன் மூலமாக தகவல்கள் பரவுவதை தனது ஆதிக்கத்தில் – கட்டுப்பாட்டில் வைத்திருக்க அது விரும்புகிறது. கடந்த காலங்களில் சமூக ஊடகங்களே முக்கியமான தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. மக்கள் மத்தியில் அவை குறித்த கருத்தை உருவாக்கியுள்ளன. – என்று கபே குறிப்பிட்டுள்ளது.

Related Posts