- Sunday
- May 10th, 2026
வடக்கில் அபிவிருத்தி முன்னேறிச்செல்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களை பலப்படுத்த வேண்டும். அதற்கு அனைவரும் வெற்றிலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (04) விஜயம் மேற்கொண்டு நாமல் ராஜபக்ஷ பல்வேறு இடங்களில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக்கூட்டங்களில் கலந்துகொண்டார். யாழ்....
ஜனாதிபதி தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுபெறவுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய எந்தவொரு பரப்புரை நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார். இன்று நள்ளிரவுக்கு பின்னர் முன்னெடுக்கப்படுகின்ற சட்டவிரோத தேர்தல் பரப்புரைகளை தடுப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம்...
தமிழ் மக்களை இன ஒடுக்கலுக்கு உள்ளாக்கிய, அவலங்களைத்தரும் மகிந்தவின் ஆட்சியை மாற்றவுண்டியது தமிழர்களின் தலையாய கடமை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நேற்று விடுத்த அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குழப்பமான சூழலில் நாம் தற்போது வாழ்ந்து வருகின்றோம். தமிழ்ப் பேசும் மக்கள்...
ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை சென்றுள்ள சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் இன்று திங்கட்கிழமை 5-ம் திகதி முதல் தங்களின் கண்காணிப்புப் பணிகளைத் தொடங்கவுள்ளனர். நாட்டின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேஷப்பிரியவுடனும் உள்நாட்டுக் கண்காணிப்பாளர்களுடனும் வேட்பாளர்களின் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள சர்வதேச கண்காணிப்பாளர்கள், தங்களின் பணிகள் தொடர்பாக கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளனர். நாட்டின் அனைத்து மாவட்டங்களையும்...
சூப்பர் ஸ்டார் நடித்து சமீபத்தில் வெளியான லிங்கா பலரையும் கவராமல் போனது என்னவோ உண்மை என்றாலும் வசூல் ரீதியில் இன்றும் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் யார் இயக்க போகிறார் என்ற ஒரு கேள்வி கோலிவுட் மத்தியில் எழும்பியுள்ளது, ஒரு தரப்பு மீண்டும் ஷங்கருடன் இணைய போகிறார் என்று கூறி வந்தாலும்...
‘கத்தி’ படத்திற்கு பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், ரசிகர்களும் இப்படத்தின் தலைப்பை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இப்படத்திற்கு முதலில் ‘மாரீசன்’, ‘கருடா’, ‘போர்வாள்’ ஆகிய பெயர்கள் பரிசீலனையில் இருந்து வந்தது. இன்று படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி, படத்திற்கு ‘புலி’...
"தமிழ் பேசும் மக்களுக்கு நீதி, நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் எதிர்காலம் அமைவதற்கு ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை நாம் ஆதரிக்கின்றோம். எனவே, ஜனவரி 8ஆம் திகதி மைத்திரிபாலவின் சின்னமான அன்னத்திற்கு தவறாமல் தமிழ் பேசும் மக்கள் வாக்களிக்கவேண்டும்." - இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட...
தேசிய அரசாங்கத்தை அமைத்து அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு சிலர் அமைச்சர்களாவதன் மூலம் எதையும் சாதித்துவிட முடியாது. எதிர்க்கட்சியாக இருந்தே ஆதரவளிக்க வேண்டும் என வடமகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் சனிக்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்...
எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும் என சமூகநீதிக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சார்பாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் அ.இராசகுமாரன் சனிக்கிழமை (03) தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் சனிக்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது...
எமது மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மட்டுமன்றி அரசியல் உரிமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காண வேண்டுமென்பதே எமது அரசியல் நிலைப்பாடாகும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வடமாகாண முன்பள்ளி ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் சனிக்கிழமை (03)...
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு யாழ். மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கான முகவர்களை தெரிவு செய்வதில், த.தே.கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். எதிர்வரும் 08ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கென யாழ். மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கான, முகவர்களைத் தெரிவு செய்வதில் ஜனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவுக்கு ஆதரவு வழங்கி வரும் ஈழமக்கள்...
வடமாகாண சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட நிதியிலிருந்து வடமாகாண சபை உறுப்பினர் த.சித்தார்த்தன் யாழ். மாவட்டத்திலுள்ள கல்வியற்கல்லூரி உட்பட ஆறு பாடசாலைகளுக்கு ஆறரை இலட்சம் ரூபாயும் ஆறு முன்பள்ளிகளுக்கு 04 இலட்சம் ரூபாயும் மாகாண சபை நிதியிலிருந்து வழங்கியுள்ளார். மிருசுவில் விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயத்திற்கு கரவெட்டி கட்டவேலி அ.மி.த.க பாடசாலைக்கு ஒரு இலட்சம் ரூபாயும்...
யாழ்ப்பாணம் நாவாந்துறை சந்திப்பகுதியில் புதன்கிழமை(31) நள்ளிரவு இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றதை தொடர்ந்து அப்பகுதியில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார், சனிக்கிழமை (03) தெரிவித்தனர். யாழ். நாவாந்துறை சந்திப்பகுதியில் புதன்கிழமை (31) நள்ளிரவு இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றதை தொடர்ந்து அப்பகுதியில் அதிகளவான இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தில்...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எங்களால் முடிந்தளவுக்கு தோற்கடிக்கவேண்டும் என வடமாகாண ஆளுங்கட்சி உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார். பொது நிறுவனங்களின் 2015ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான முன்மொழிவு கூட்டம், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை கேட்போர் கூட்டத்தில் சனிக்கிழமை (03) இடம்பெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கஜதீபன் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,...
யாழ். மாவட்டத்தில் தொண்டராசிரியர்களாக கடமையாற்றும் அனைவருக்கும் தேர்தலுக்குப் பின்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என, நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரைக்காக நாமல் ராஜபக்ச இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்தார். இதன்போது யாழ்.நகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் தொண்டராசிரியர்களுக்கும் நாமல் ராஜபக்சவிற்குமிடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. அதன்போதே நாமல் ராஜபக்ச மேற்கண்ட உறுதிமொழியினை வழங்கியிருந்தார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,...
யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ள நாமல் ராஜபக்ச தேர்தல் விதிமுறைகளை மீறி பண்டத்தரிப்பில் கட்டப்பட்ட வீடுகளை மக்களிடம் கையளித்துள்ளார். தேர்தல் பரப்புரைக்காக யாழ்ப்பாணம் வந்துள்ள நாமல் ராஜபக்ச இன்று குறித்த வீடுகளை மக்களிடம் கையளித்துள்ளார். கடந்த முறை யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்தபோது யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களில் பண்டத்தரிப்பு பல்லசுட்டி பகுதியில் வசித்து வரும் 20 பேருக்கு வீடுகளைக்...
அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் நான்கு பேர் பலியாகியுள்ளனர், 7 வயதுச் சிறுமி அதிசயிக்கத் தக்க வகையில் உயிர் தப்பியுள்ளாள். விமானம் விழுந்த இடத்தில் இருந்து அருகிலுள்ள வீடொன்றுக்கு நடந்து சென்ற அந்தச் சிறுமி உதவி கோரியுள்ளார். விபத்துக்குள்ளான சிறிய ரக விமானத்தின் சிதிலங்கள் காட்டுப் பகுதியில் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டன. விமானியும்...
நைஜிரியாவின் வட கிழக்குப் பகுதியில் இருந்து சுமார் 40 இளம்வயது ஆண்களும், சிறார்களும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பான போகோ ஹராம் அமைப்பால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. புத்தாண்டு தினத்தன்று இவர்கள் பிடித்துச் செல்லப்பட்டதாக மலேரி என்ற கிராமத்தில் இருந்து மைதுகுரி நகருக்கு தப்பி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். தமது கிராமத்துக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகளில் வந்த...
ஆஸ்திரேலியாவில் தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியா மாநிலங்களில் வேகமாக பரவிவரும் காட்டுத் தீயால் பலரின் வீடுகள் எரிந்து சாம்பலாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ மிகவும் அபாயகரமானது என்றும் அதை கட்டுப்படுத்துவது கடினமாக இருப்பதாகவும் தீயணைப்புத் துறை கூறியுள்ளது. அங்கு அபாய நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அபாயம் உள்ள பகுதிகளில்...
மணிரத்னம் துல்கர் சல்மான், நித்யா மேனன், கனிகா, பிரகாஷ் நடிப்பில் ஓகே கண்மணி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனை அலைபாயுதே படத்தின் இரண்டாம் பாகம் என்றும் சொல்லலாம் என கேமராமேன் பி.சி.ஸ்ரீராம் கூறியுள்ளார். தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்தவேளை மணிரத்னம் எடுத்த படம், அலைபாயுதே. மாதவன், ஷாலினி நடித்த அப்படத்துக்கும் பி.சி.ஸ்ரீராம்தான் ஒளிப்பதிவு செய்திருந்தார். ராவணன்,...
Loading posts...
All posts loaded
No more posts
