யாழ்ப்பாணம் நாவாந்துறை சந்திப்பகுதியில் புதன்கிழமை(31) நள்ளிரவு இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றதை தொடர்ந்து அப்பகுதியில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார், சனிக்கிழமை (03) தெரிவித்தனர்.
யாழ். நாவாந்துறை சந்திப்பகுதியில் புதன்கிழமை (31) நள்ளிரவு இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றதை தொடர்ந்து அப்பகுதியில் அதிகளவான இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட முறுகலே குழுச்சண்டையாக உருவெடுத்திருந்தது.
சந்தியின் அருகிலுள்ள கடைகளின் வெளியில் வைக்கப்பட்டிருந்த குளிர்பானப் போத்தல்களை ஒருவர் மீது ஒருவர் எறிந்ததால், 5 பேர் வரையில் காயமடைந்து சிகிச்சை பெற்றனர்.
கைது செய்யப்பட்டவர்களை யாழ். நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக வருவதாக பொலிஸார் மேலும் கூறினர்.