- Sunday
- May 10th, 2026
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவதூறு செய்யும் பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து பொலிஸார் தற்போது ஐக்கியதேசிய கட்சி தலைமையகமான சிறிகோத்தாவில் தேடுதலை மேற்கொண்டுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரை அவமதிக்கும் பிரசுமொன்று தொடர்பாக தேடுதலை மேற்கொள்வதற்கு கங்கொடவில நீதிவான் நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை அவ்வாறான பிரசுரம்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் மைத்திரிபால சிறிசேனவின் குழுவினருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இன்று சனிக்கிழமை மு.ப.11 மணியளவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவும் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பிரசார நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. மைத்திரி குழுவினருடனான இந்தச் சந்திப்பில்...
தேர்தல் விதிமுறைக்கமைய யாழ்ப்பாணப் பொலிஸாரால் மறைக்கப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதாகைகள், ஜனாதிபதி வெள்ளிக்கிழமை (02) யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த வேளையில் மறைப்பு எடுக்கப்பட்டு இருந்தமையை அவதானிக்க முடிந்தது. யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபம், செல்வா சதுக்கம் அருகில், பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள சுற்றுவட்டத்துக்கு அருகில், பலாலி வீதி ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், அங்கஜன் இராமநாதனின் நீலப்படையணிக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் கைகலப்பு இடம்பெற்றுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (02) தேர்தல் பிரசார கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர், நீலப்படையணிக்கு வழங்கப்படும் உடையை பகிர்ந்தளிக்கும் போதே இக்கைகலப்பு ஏற்பட்டுள்ளது....
வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை ஏசுவதாக நினைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஏசிய சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்றது. கூட்டத்துக்கு ஜனாதிபதி வருகை தர தாமதமாகியதால் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை...
கடலுக்குள் விழுந்த ஏர் ஏசியா விமானத்தின் 2 முக்கிய பாகங்கள் மற்றும் 46 பயணிகள் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏர் ஏசியா நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ரகத்தை சேர்ந்த 8501 விமானம், இந்தோனேஷியாவின் சுரபவாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி கடந்த 28-ந் தேதி சென்று கொண்டிருந்தது. 155 பயணிகள் 7 விமான ஊழியர்களுடன் இந்த விமானம் நடுவானில் மாயமானது....
கப்பல் படத்தில் கரகாட்டக்காரனில் இடம்பெற்ற ஊருவிட்டு ஊரு வந்து பாடலைப் பயன்படுத்தியதற்காக அதன் தயாரிப்பாளரான இயக்குநர் ஷங்கருக்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இயக்குநர் ஷங்கர் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில் கப்பல் என்ற படம் வெளியாகியுள்ளது. கார்த்திக் ஜி கிரீஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நடராஜன் சங்கரன் என்பவர் இசையமைத்துள்ளார். படத்தில் இடம் பெறும்...
இலங்கை, பங்களாதேஷ் நாடு களின் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையில் இம்மாதம் நடை பெறவுள்ள இரண்டு நாள் கிரிக்கெட் தொடர்கள் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை முன்னிட்டு 31 வீரர்கள் கொண்ட இலங்கையின் முன்னோடி கிரிக்கெட் குழாம் பெயரிடப்பட்டுள்ளது. கனிஷ்ட தேசிய தெரிவாளர்களினால் பெயரிடப்பட்டுள்ள இக் குழாமில் வட பகுதியைச் சேர்ந்த இரண்டு கிரிக்கெட் வீரர்கள்...
தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் பல வாக்குறுதிகளை கொடுப்பார்களே தவிர, செய்து முடிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. நான் பொய்யான வாக்குறுதிகளை கொடுக்கமாட்டேன். சொல்வதை செய்வேன், அதனை கடந்த 9 வருடங்களில் செய்தும் காட்டியுள்ளேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தொழில் வல்லுநர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று யாழ். ரில்கோ விடுதியில்...
யாழ்.நாவாந்துறைப் பகுதியில் வைத்து இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் காலில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேயிடத்தை சேர்ந்த சந்திரகுமார் சஞ்சீவன் (வயது 30) என்பவரே படுகாயமடைந்தார். இரு குழுக்களுக்கிடையில் வெள்ளிக்கிழமை (02) இரவு இடம்பெற்ற கைகலப்பை கட்டுப்படுத்த சென்ற இராணுவத்தினரே நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். நாவாந்துறை சந்தியில் இரு குழுக்களுக்கிடையில்...
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு என்பது தொடர்பாக தேர்தல்கள் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது. தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் தங்களுக்குரியவரை புள்ளடியிட்டு வாக்களிப்பதா? அல்லது ஒன்று, இரண்டு, மூன்று என இலக்கமிட்டு வாக்களிப்பதா? என்பது குறித்து வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகின்றது. இது தொடர்பான விபரம் வருமாறு: வாக்காளர்கள் தனியொருவருக்குத் தமது வாக்கை அளிக்கலாம். அல்லது...
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு இன்று அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி குறித்த அரச ஊழியர்கள் அருகில் உள்ள மாவட்ட தேர்தல்கள் செயலகத்திற்குச் சென்று வாக்களிக்க முடியும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாஸ தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு – குறிகட்டுவான் படகு சேவையில் ஈடுபட்ட சமுத்திராதேவி படகு 3 மாதங்களின் பின்னர் மீண்டும் வெள்ளிக்கிழமை (02) சேவையில் ஈடுபடத் தொடங்கியது. நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் சமுத்திராதேவியின் படகு சேவையை மீண்டும் ஆரம்பித்து வைத்தார். சமுத்திராதேவி படகு கடந்த 2014ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் அடித்தளம் சேதமடைந்ததால் சேவையில் ஈடுபடாமல் ஒதுங்கியது. பாரம்பரிய...
பாகிஸ்தானில் இருந்து வந்த ஒரு மீன்பிடிப் படகை இந்தியக் கடலோரக் காவல்படையினர் மடக்கிப் பிடிக்க முயன்றதை அடுத்து, அப்படகு கடலில் வெடித்துச் சிதறியது என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. அந்தப் படகில் பயணித்தவர்கள் படகுக்கு தீ மூட்டினர் என்றும் அதன் காரணமாக படகு வெடித்தது என்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த மீன்பிடிப்...
பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14 திரைக்கு வரும் என்று தயாரிப்பாளரால் அறிவிக்கப்பட்ட அஜீத்தின் என்னை அறிந்தால் படம் திடீரென பொங்கல் ரேஸிலிருந்து விலகிக் கொண்டது. பொங்கல் தினத்தில் தொடர்ச்சியாக விடுமுறை வருவதால் பெரிய படங்கள் பொங்கல் தினத்தில் வெளியாக ஆர்வம் காட்டும். ஷங்கரின் ஐ ஜனவரி 9 -ஆம் தேதியே திரைக்கு வருகிறது. ஜனவரி 14...
யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இன்றைய தினம் (02) நடைபெற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அழைப்பின் பேரில் எதிர்பாராத வகையில் கலந்து கொண்டிருந்த பெருந்திரளான எமது மக்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அதேநேரம், தாம் எதிர்பார்த்ததைவிட பன்மடங்கு அதிகமாக மக்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டு...
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜோன் ரங்கின் இன்று (02) யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். இன்று காலை யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜோன் ரங்கின் யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களை சந்தித்து தேர்தல் தொடர்பான நிலைப்பாடுகள் குறித்து கலந்துரையாடினார். இதன் போது வாக்களிப்பு நிலையங்கள்...
மன்னார் மடு தேவாலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. தேர்தல் பரப்புரைக்காக மன்னார் மாவட்டத்திற்கு இன்று மாலை சென்றிருந்த மகிந்த ராஜபக்ச மடு தேவாலயத்திற்குச் சென்று மடு அன்னையை வழிபட்டுள்ளார். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஜனாதிபதியை வரவேற்றதுடன் அங்கு இடம்பெற்ற ஆராதனையிலும் கலந்து கொண்டு அன்னையை வழிபட்டார். மேலும் வழிபாடுகளை முடித்துக்...
யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி கலந்து கொண்டிருந்தார். எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் தேர்தல் பரப்புரைக்கூட்டம் இன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது . இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறியும் தேர்தல்...
சந்தாதாரர்களின் சம்மதமின்றி அலைபேசி வலையமைப்புகளூடாக தேர்தல் பிரசாரம் செய்வதை தவிர்க்குமாறு சகல வேட்பாளர்களிடமும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார். வாக்களிப்புக்கு 48மணிநேரத்துக்கு முன்னளர் செய்யப்படும் இவ்வாறான பிரசாரங்கள் தேர்தல் சட்டங்களை மீறியதாக கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். அரசியல் கட்சிகளையும் வேட்பாளர்களையும் ஆதரிக்கும் குறுஞ்செய்திகளை அனுப்பும் திட்டமிட்ட செயற்பாடுகள் பற்றி முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மஹிந்த...
Loading posts...
All posts loaded
No more posts
