தேர்தல் பிரசார கூட்டத்தில் கைகலப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், அங்கஜன் இராமநாதனின் நீலப்படையணிக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் கைகலப்பு இடம்பெற்றுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

presiden visit  01 04

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (02) தேர்தல் பிரசார கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர், நீலப்படையணிக்கு வழங்கப்படும் உடையை பகிர்ந்தளிக்கும் போதே இக்கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இரு தரப்பிலிருந்தும் தலா ஒருவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts