Ad Widget

தந்தையின் கரங்களை பலப்படுத்துங்கள்: நாமல் எம்.பி.

வடக்கில் அபிவிருத்தி முன்னேறிச்செல்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களை பலப்படுத்த வேண்டும். அதற்கு அனைவரும் வெற்றிலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Namal-rajabaksha

யாழ்ப்பாணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (04) விஜயம் மேற்கொண்டு நாமல் ராஜபக்ஷ பல்வேறு இடங்களில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக்கூட்டங்களில் கலந்துகொண்டார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடமபெற்ற நீலப்படையணியின் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் ஜனாதிபதி பல அபிவிருத்திகளை முன்னெடுத்தார். இனியொரு யுத்தம் வரப்போவதும் இல்லை வரவிடவும் மாட்டோம். தொடர்ந்து இந்த அபிவிருத்திகள் இடம்பெறுவதற்கு வெற்றிலையில் புள்ளடியிட்டு மஹிந்த ராஜபக்ஷவை வெற்றியடையச் செய்வோம்.

ஏனைய பகுதிகளைவிட வடக்குக்கு கல்விக்காக அதிக பணம் வழங்கப்பட்டுள்ளது. தொழில்வாய்ப்பு தரக்கூடிய தொழிற்சாலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன, வடக்கில் உள்ளவர்கள் எந்தக்கட்சி சார்ந்தவர்கள் என்று பார்க்கப்படுவதில்லை அனைவரும் பொதுமக்களாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்.

இந்தநாடு நமது நாடாகும் இதை நாமே கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு வெற்றிலைச் சின்னத்துக்கு உங்கள் வாக்குகளை வழங்கி ஒத்துழைப்பு தருவீர்கள் என்று தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் உரையாற்றுகையில்,

இங்குள்ள இளைஞர், யுதிகள் அனைவரும் ஜனாதிபதி படம் பொறிக்கப்பட்ட டிசேர்ட்டுடன் படம் எடுத்து முகப்புத்தகத்தில் பிரசுரித்து மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு காட்ட முன்வரவேண்டும்.

தமிழ்மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அந்த வேட்பாளர் தோல்வியடைவார்கள் என்று வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. இதனை இம்முறை மக்கள் மாற்றியமைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Related Posts