- Wednesday
- May 13th, 2026
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொன்டிங் பொறுப்பேற்றுள்ளார். 2013ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக ரிக்கி பொன்டிங் விளையாடி இருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் டுவெண்டி-20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர், பயிற்றுவிப்பு துறையில் கால் பதித்துள்ளார்....
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடமாகாண முதல்வர் சி. வி. விக்னேஸ்வரன் ஆகிய இருவருக்கும் இடையிலான முரண்பாடுகள் முடிவுக்கு வர வேண்டும். இந்நாட்டில் கடந்த காலத்தில் நடைபெற்ற ஆயுத போரை மனதில் கொண்டு இந்த பனிப்போர் நின்றிட வேண்டும் என தேசிய நிறைவேற்று சபை உறுப்பினரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார். தேசிய...
முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் தலைக்கவசம் அணியும் சட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து அந்த தடைச்சட்டத்தை எதிர்வரும் மே மாதம் முதல் அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த சட்டம் கடந்த மார்ச் 21ஆம் திகதி அமுல்படுத்தப்படவிருந்த நிலையில், பொதுமக்கள் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால், பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய அத்திட்டத்தை...
கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி, சிகிரியாவிலுள்ள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு, தம்புள்ளை நீதிமன்றத்தால் 2 வருடம் சிறைத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அனுராதபுரம் சிறையில் வாடும் உதயசிறிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கும் பத்திரத்தில் புதன் கிழமை இரவு கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழை யுவதியான உதயசிறி, அனுராதபுரம் சிறையிலடைக்கப்பட்டு இப்பொழுது ஒன்றரை மாதம் கழிந்து...
பாண்டியராஜ் அவர்களின் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் தயாராகி வரும் படம் இது நம்ம ஆளு. சிம்பு, நயன்தாரா காதல் பிரிவிற்கு பிறகு இணையும் படம் என்பதால் ரசிகர்களிடையே படத்தின் மேல் அதிக எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பி குறளரசன் அவர்கள் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். தற்போது வந்த தகவலின் படி...
உதயநிதி நடிப்பில் தற்போது வெளிவர உள்ள படம் ‘நண்பேன்டா’. இப்படத்தை அடுத்து எமி ஜாக்சனுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி. அதன்பின்னர் அஹமத் இயக்கவிருக்கும் ‘இதயம் முரளி’ படத்திலும் நடிக்கவுள்ளார். அஹமத் ஏற்கனவே ‘என்றென்றும் புன்னகை’ படத்தை இயக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிக்கும் ‘இதயம் முரளி’ படத்தில் உதயநிதிக்கு...
படத்துக்கு பெயர் வைப்பதிலிருந்தே தங்களின் கிரியேட்டிவிட்டியை காட்ட ஆரம்பிக்கிறார்கள் இயக்குனர்கள். பல நேரம் இந்த பெயர் வைக்கும் விஷயத்திலேயே பெரும்பாலானவர்களின் கிரியேட்டிவிட்டி கரைந்துவிடுகிறது. புலி படத்துக்கு ஒளிப்பதிவு செய்துவரும் நட்டி என்கிற நடராஜன் சுப்ரமணியன் அடுத்து இரு இந்திப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்கிறார். அத்துடன் நான்கு படங்களில் நடிக்க வாய்ப்பும் வந்திருக்கிறது. இந்த நான்கில் ஒரு...
அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள 11 ஆணைக்குழுக்களுக்கு மேலதிகமாக, இன மற்றும் மத நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு" ஒன்று அமைக்கப்பட வேண்டும். இன, மத முரண்பாடுகளை வளர்ப்போர் மீது விசாரணை செய்து, சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய அதிகாரம் உள்ளதாக இருத்தல் வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முன்மொழிந்துள்ளது. உத்தேசிக்கப்பட்டுள்ள 19வது அரசியல் அமைப்புச்...
நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளுக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடல் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் இரண்டு விடயங்களில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. இதில் முதலாவதாக ஒரு யாப்பின் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இயங்க வேண்டும் என்றும், அதற்கான...
இங்கிலாந்தில் இருந்து ஸ்பெயினுக்கு விமானத்தில் சென்ற பெண் ஒருவர் தன்னை பத்திரமாக அழைத்துச் சென்றதற்கு நன்றி தெரிவித்து விமானிக்கு எழுதிய கடிதம் ட்விட்டரில் தீயாக பரவியுள்ளது. பெத்தனி என்ற பெண் இங்கிலாந்தில் இருந்து ஸ்பெயினுக்கு விமானம் மூலம் சென்றுள்ளார். விமானம் ஸ்பெயினில் பத்திரமாக தரையிறங்கியதும் பெத்தனி ஒரு பேப்பரை எடுத்து விமானிக்கு நன்றி தெரிவித்து கடிதம்...
வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக கடமையாற்றியோருக்கு இன்று ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட இடமாற்றம் வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்காரவின் உத்தரவுக்கமைய இடைநிறுத்தப்பட்டுள்ளது. வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய இ.ரவீந்திரன் கல்வி அமைச்சின் செயலாளராகவும், கல்வி அமைச்சின் செயலாளராக பணிபுரிந்த எஸ்.சத்தியசீலன் மீன்பிடி அமைச்சின் செயலாளராகவும், மீன்பிடி அமைச்சின் செயலாளராக...
பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை கொண்டுள்ள முன்னேற்றங்களை ஆராயும் பொருட்டு கொழும்பு வந்துள்ள ஐ.நா.வின் சிறப்பு நிபுணர் பப்லோ டி கிரெய்ப் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் பயணம் மேற்கொண்டு இங்குள்ள நிலைமைகள் குறித்து ஆராய்ந்தார். இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் வந்த அவர், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இதன்போது வடக்கில்...
வடமாகாணத்தில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த பொலிஸார், விசேட அதிரடி படையினர் ஆகியோர் இணைந்து செயற்படவுள்ளதாக வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்தார். யாழ். மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை(31) நடைபெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டத்தில், யாழில் போதைபொருள் விற்பனை அதிகரித்து காணப்படுகின்றது. பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தும் போதைப்பொருட்கள், போதையூட்டப்பட்ட பாக்கு என்பன...
சமூக சேவைகள் அமைச்சின் முதியோர் செயலகத்தால் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையை கணவன், மனைவி இருவரும் பெறுவதற்கான புதிய சுற்றுநிரூபத்தை அமைச்சின் செயலாளர் டீ.கே.றேணுகா ஹேரத் மாவட்டச் செயலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். 70 வயதை கடந்த முதியவர்களுக்கு மாதாந்தம் 2,000 ரூபாய் வழங்கும் திட்டம், சமூக சேவை அமைச்சால் முன்னெடுக்கப்பட்டது. 2012ஆம்...
யாழ்.வருகை தந்த ஜேர்மன் நாட்டின் தூதுவர் ஜோர்கான் மூர் காட்டுக்கும் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகைக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது. இன்று காலை 10மணியளவில் யாழ்.ஆயர் இல்லத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது. மேலும் குறித்த சந்திப்பு தொடர்பில் யாழ்.ஆயர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஜேர்மன் தூதுவர் யாழ்ப்பாணம் வந்ததன் நோக்கம் இங்குள்ள நிலமைகளை...
யாழ்ப்பாணம் திருநகர் பரராஜசிங்கம் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை பெற்றோல் ஊற்றி எரித்த குற்றச்சாட்டில் அதேயிடத்தைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களை செவ்வாய்க்கிழமை(31) கைது செய்ததாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். 4 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான முச்சக்கரவண்டி, செவ்வாய்க்கிழமை(31) அதிகாலை பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முச்சக்கரவண்டியின் உரிமையாளர் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்களின் பகிஷ்கரிப்புப் போராட்டம் காரணமாக நுண்கலைப்பீட வளாகத்துக்குள் தடுத்துவைக்கப்பட்ட விரிவுரையாளர்களை, அங்கு சென்ற கலைப் பீடாதிபதி வி.பி.சிவநாதன் உறுதிமொழி வழங்கி மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். மருதனார்மடத்தில் உள்ள நுண்கலைப் பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான பரீட்சைகள் கடந்த காலத்தில் சீராக நடைபெறவில்லை, ஏனைய பீடங்களுக்கு பரீட்சைகள் முடிவுற்றுள்ள போதிலும்...
ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய குடிநீர் தாங்கியில் விஷம் கலந்த சம்பவம தொடர்பில் புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்தார். யாழ். மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை(31) நடைபெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்ட வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், தண்ணீர் தாங்கியில் கிருமி நாசினி கலந்தமை...
யாழ்ப்பாணம், ஆனைப்பந்தியில் அமைந்துள்ள தியாகி அறக்கொடை சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமியை காணவில்லையென இல்ல உத்தியோகத்தரால், யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (31) முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. நிஷாந்தன் திலக்கி (வயது 11) என்ற சிறுமியே இவ்வாறு காணாமற்போயுள்ளார். செவ்வாய்க்கிழமை (31) மதியம் மலசல கூடத்துக்குச் சென்ற சிறுமியே இவ்வாறு காணாமல்போயுள்ளார் என்று பொலிஸ் முறைப்பாட்டில்...
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால், நேற்று செவ்வாய்க்கிழமை (31) உயர்நீதிமன்றத்தில் தலையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த 19ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக, ஏற்கெனவே பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே, சுமந்திரன் எம்.பி.யினால் மேற்படி திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது...
Loading posts...
All posts loaded
No more posts
