- Saturday
- May 16th, 2026
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியை அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்தும் வற்புறுத்தி வந்தபோதும் அவரது உடல் நிலையை காரணம் காட்டி அவரிற்கு இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை அதனால் தனது சார்பாக இன்னும் ஒரு சட்டத்தரணிக்கு வேட்பாளர் நியமனம் வழங்குமாறு தமிழ் தேசிய...
யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் விவசாயபீட மாணவனொருவன் அரிய கண்டுபிடிப்பொன்றை கண்டுபிடித்துள்ளார். தானியங்கி முட்டை பொரிக்கும் இயந்திரமொன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். விவசாயபீடத்தின் இறுதியாண்டு விவசாய இயந்திரவியல்துறை மாணவனான வாகீசன் டிவாகர் இதனை கண்டுபிடித்துள்ளார். இவர் யாழ்ப்பாணத்தின் கோப்பாய் பகுதியை சேர்ந்தவர். இதுவரை பாவனையில் உள்ள தானியங்கி முட்டைபொரிக்கும் இயந்திரங்கள் அனைத்தையும் விட தொழில்நுட்பத்தில் மேம்பட்டதாகவும், அதிக வசதிகளை கொண்டதாகவும்,...
கடந்த காலங்களில் எதற்கும் அஞ்சாத தோரணையில் கம்பீரமாக தனது பிரதிமையை காண்பித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, ராஜபக்ஷ தேர்தல் மேடையில் மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. பிலியந்தலவில் கூட்டமொன்றில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் கைத்தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. ஐக்கிய மக்கள்...
பாராளுமன்றத் தேர்தலில் இரு பிரதான கூட்டணிகளும் தமது தேசியப் பட்டியலுக்கான வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் "கருணா" என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் பெயர் இல்லை. கடந்த பாராளுமன்றத்தில் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமனம் பெற்று அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தார். இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்...
தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்க மறுத்த தமிழரசுக் கட்சியின் அநீதிக்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள மற்ற தமிழ்க் கட்சிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதனாலேயே, தான் சுயேச்சையாக போட்டியிடவில்லை என வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழரசு கட்சி வாய்ப்பளிக்காமல் தனக்கு அநீதி இழைத்துவிட்டதாகவும், ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில்...
பழம்பெரும் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார். உடல் நலக் குறைவால் சென்னையிலுள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், அதிகாலை 4.15- அளவில் இவ் உலகை விட்டு நீங்கினார். அவருக்கு வயது 84. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 1,200 படங்களுக்கு இசையமைத்துள்ளார். ராமமூர்த்தியுடன் சேர்ந்து 700 படங்களுக்கும், தனியாக 500...
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திற்குள் த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் சுமந்திரன் தொலைபேசியில் உரையாடியமை ஊடாக தேர்தல் திணைக்களத்திற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் தொடர்புகள் உள்ளதாகவும், முறைகேடுகள் நடைபெறும் எனவும் ஈ.பி.டி.பி சுமத்திய குற்றச்சாட்டை கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. இன்றைய தினம் வேட்புமனுத் தாக்கல் செய்ததன் பின்னர் வேட்புமனுக்கள் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்கும் நேரத்தில், தேர்தல் திணைக்களத்திலிருந்து...
யாழ்மாவட்ட தேர்தலில் கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் ஒரே பார்வையில் இலங்கை தமிழரசு கட்சி 1.மாவை சேனாதிராஜா 2.மதியாபரணம் சுமந்திரன் 3.கந்தையா பிரேமசந்திரன் 4.தர்மலிங்கம் சித்தார்த்தன் 5.சிவஞானம் சிறிதரன் 6.ஈஸ்வரபாதம் சரவணபவன் 7.அருந்தவபாலன் கந்தையா 8.மதினி நெல்சன் 9.ஆணந்தராஜ் நடராஜா 10. கந்தர் நல்லதம்பி ஸ்ரீகாந்தா அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1.கஜேந்திரகுமார் காங்கேயர் பொன்னம்பலம் 2.செல்வராசா...
கறைபடியாத கைகளுடன் நாங்கள் இளம் கல்விமான்களுடன் களத்தில் இறங்கியுள்ளோம்.என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதம வேட்பாளரான அங்கஜன் ராமநாதன் தெரிவித்தார். அனைவரும் மாற்றம் தேவை என்பர். நாம் கேட்கும் மாற்றம் வித்தியாசமானது.ஆனால் நாம் கேட்கும் மாற்றம் எங்களை போன்ற சாதாரண அரசியல் பின்புலம் இல்லாத கறைபடியாத கைகளுடன் யாழ்.மாவட்டத்தைச்...
இன்று வேட்பு மனு பரிசீலனை யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வேளை ஈபிடிபி கட்சியின் தவராஜாவினால் ஆட்சேபனை ஒன்று தெரிவிக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக்கட்சி என்ற பெயரை திருத்தி எழுதி அதன் மீது விண்ணப்பித்த கட்சியின் செயலாளருக்கு பதில் கட்சியின் தலைவர் கையாப்பமிட்டிருந்தார் என்பதே அது. இருப்பினும் பின்னர் வேட்பு மனு ஏற்கப்பட்டது. குழுத்தலைவரால் மாற்றம் செய்வதில் தவறில்லை...
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை, யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றும் பல முக்கிய கட்சிகள் தாக்கல் செய்துள்ளன. குறிப்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் முன்னாள் நீதிபதி விக்னேஷ்வரராஜாவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதம வேட்பாளராக அங்கஜன் ராமநாதனும், மக்கள் விடுதலை முன்னணி கட்சி சார்பில் சந்திரசேகரனும்,...
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பாக போட்டியிடுவதற்காக மாணவர்களை உள்ளடக்கிய சுயேட்சைக் குழவொன்று யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (13) வேட்புமனுத் தாக்கல் செய்தது. சுந்தரலிங்கம் சிவதர்ஷன், ஜெயரத்தினம் யதீசன், மங்களேஸ்வரன் கஜன், சுந்தரலிங்கம் சுதர்சன், இராசகுமார் கிரிஷாந், பந்துசேனா அருண்ராஜ், பரம்சோதிநாதர் பிரேந்திரா, சிவலிங்கம் லவகீசன், தங்கவேல் கிரிவேந்தன்...
வித்தியாவின் வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவில்லை. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இருப்பினும் இன்று நாடாளுமன்றத் தேர்தல்களின் வேட்பு மனுத் தாக்கல் செய்வதன் இறுதிநாள் என்றமையால் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் பகுதிகளுக்கு அதிகளவான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே சந்தேக நபர்களை...
1980 களில் நிலவிய பனிப்போர் மற்றும் புவிசார் உலக அரசியலை அப்போதைய போராளித்தலைமைகள் சரியாகவும் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் கையாண்டதால், எமக்கான ஒரு மிக முக்கியமான வரலாற்று பிரகடனம் ஒன்றிற்கு செல்லக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. 1976 இல் வட்டுக்கோட்டை பிரகடனம் செய்து , விஞ்ஞாபனத்தில் அதற்கு 1977 இல் ஆணை கேட்டுவிட்டு, பின்னர் அரசியல் தலைமைகள் இணங்கிபோய்...
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்த முன்னாள் ஜனாதிபதி உட்பட பல்வேறு விமர்சனங்களுக்குள்ளான பலருக்கு வேட்மனு வழங்கவேண்டியேற்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையொன்றை இன்று ஆற்றவுள்ளார்.
பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவது தெரியவந்தால் அவர்களை கடுமையாக தண்டிக்காது சுகாதார வைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்தால் அவர்கள் மாணவர்களை சரியான முறையில் கையாள்வார்கள் என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இ.தேவநேசன் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் எதிர்ப்பு மாதத்தினை முன்னிட்டு யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...
முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் அணிவதற்கான தடை உத்தரவை செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் நீடித்துள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பாக போட்டியிடுவதற்காக ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் தலைமையிலான ஜனநாயகப் போராளிகள் அமைப்பு, யாழ் மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் சுயேட்சைக் குழுவாக இன்று திங்கட்கிழமை (13) வேட்புமனுத் தாக்கல் செய்தது. நடேசப்பிள்ளை வித்தியாதரன் தலைமையில். கணேசலிங்கம் சந்திரலிங்கம், இராசையா தர்மகுலசிங்கம், சிவநாதன் நவீந்திரா,...
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறது. ஏற்கனவே அம்பாறை திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் இன்னும் சற்றுநேரத்தில் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் வேட்புமனு தாக்கல் செய்கிறது,நேற்றிரவு முன்னணியின் தலைவர் சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேட்புமனுவில் கைச்சாத்திடார் யாழ்ப்பாணப்பட்டியல் வருமாறு (1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்...
Loading posts...
All posts loaded
No more posts
