விவாகரத்தின் பின்னர் தாலி யாருக்கு சொந்தம்?விசித்திர வழக்கில் விநோத தீர்ப்பு !

யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு ஒன்றுக்கு எதிராக சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, அம்மி மிதித்து, அருந்ததி காட்டி, மந்திரம் ஓதி பெரியோர் முன்னிலையில் கட்டப்பட்ட தாலி, விவாகரத்தின் பின்னர் யாருக்கு சொந்தம்? – என்ற கேள்வி எழுந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு...

பேஸ்புக் குழுவுடன் ஜனாதிபதி மைத்திரி சந்திப்பு

முகநூல் (Facebook) சமூக வலைதளத்தின் தெற்காசியாவவுக்கான பொதுக்கொள்கைப் பணிப்பாளர் அன்கி தாஸ் தலைமையிலான ஒரு முகநூல் குழுவினர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து, நாட்டின் முன்னேற்றத்திற்கான ஜனாதிபதியின் முயற்சிகளை முன்னெடுப்பதில் முகநூலை வினைத்திறன்மிக்க வகையில் பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடினர்.
Ad Widget

புறக்கோட்டையில் பயணப் பொதியில் தமிழ் பெண்ணின் சடலம் – அடையாளம் காண பொது மக்களிடம் உதவி கோரல்

கொழும்பு - புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் ஒரு தமிழ் பெண் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் குறித்த சடலம் பயணப் பொதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது. பேருந்து நிலையத்தில் அனுராதபுரம் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் இருந்து இந்த சடலம் மீட்கப்பட்டது. எனினும் சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை....

பெரும்பான்மை சமூகத்தின் தேவையை நிறைவேற்றும் அதிகாரம் எமது கைக்கு வரும் – சம்பந்தன்

எதிர்காலத்தில் பெரும்பான்மை சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான அதிகாரம், எமது கைக்கு வருமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மூதூரில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதற்கான முதல் அடியை அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென அவர் குறிப்பிட்டார்....

பிள்ளைகளின் செயற்பாடுகளை உன்னிப்பாக கவனியுங்கள் , பெற்றோர்களுக்கு பொலிஸாரின் ஆலோசனை

யாழ்.குடாநாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாராகிய நாம் என்றும் தயாராக இருக்கின்றோம் என யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யு.கே.வூட்லர் தெரிவித்தார். சிறுவர் துஸ்பிரயோகத்திலிருந்து பிள்ளைகளை பாதுகாப்பது தொடர்பில் விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் இடம்பெற்றது. அதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர்...

ஓகஸ்ட் 2 வரை ரயில் சேவைகள் ஸ்தம்பிதம்

ரயில் திணைக்கள தொழிற்சங்க கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தம் காரணமா, நாடு பூராகவும் உள்ள ரயில் சேவைகள் ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி வரை ஸ்தம்பிதமடையும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ரயில்வே திணைக்கள தொழிலாளர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வொன்றை பெற்றுத்தருமாறு கோரியே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கொடி விவகாரம்: யட்டிநுவர பி.சபை முன்னாள் தலைவர் கைது

கண்டி - யட்டிநுவர பிரதேச சபையின் முன்னாள் தலைவர் துஷிதகுமார வலகெதர கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எதிர்கட்சி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் தேசிய கொடியை ஒத்த திரிபுபடுத்தப்பட்ட கொடி போடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் முன்னாள் பிரதேச சபைத் தலைவரை கைது செய்துள்ளனர்.

முழு அரசு மரியாதைகளுடன் கலாம் உடல் நல்லடக்கம்

மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பூவுடல் முழு அரசு மரியாதையுடன் ராமேஸ்வரம் பேக்கரும்பு கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த கல்வியாளருமான அப்துல் கலாம் அவர்கள் மேகாலயாவின் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கிடையே பேசிக் கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக ஷில்லாங்கின்...

வாக்காளர் அட்டை விநியோகம் இன்று முதல் ஆரம்பம்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம், இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கென தேர்தல்கள் செயலகத்திடமிருந்து நேற்றைய தினம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள், தபால் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. இன்று ஆரம்பிக்கப்படும் இவ் விநியோக நடவடிக்கையானது, எதிர்வரும் 10ஆம் திகதியுடன் நிறைவடையுமென தபால் மா அதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார். குறிப்பாக...

சூரியனில் பெரும் வெடிப்பு !! தொலைத்தொடர்பு சாதனங்களில் பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை!!

இன்றையதினம் சூரியனில் பெரும் வெடிப்பு ஒன்று ஏற்படலாம் என்றும் , அதில் இருந்து தோன்றும் துகள்கள் பூமிக்குள் பிரவேசிக்க இருப்பதால் சில பிரச்சனைகள் தோன்றலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சூரியனில் இதுபோன்ற வெடிப்புகள் அவ்வப்போது நிகழ்வது வழக்கம். ஆனால் இது வழமைக்கு மாறாக பெரிய வெடிப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் துகள்கள் பூமியை அடைய இருப்பதனால்...

இ.போ.ச. – தனியார் பஸ் சேவையினர் பருத்தித்துறையில் மோதல்!

தொழில் போட்டி காரணமாக இ.போ.ச பஸ் சேவையினருக்கும் தனியார் பஸ் சேவையினருக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த மோதல் சம்பவம் நேற்று புதன்கிழமை 7 மணியளவில் யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை பஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை - முல்லைத்தீவு போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட இ.போ.ச. பஸ், தனியார் பஸ்ஸை முந்திச் சென்றதாலேயே இந்த மோதல்...

கூட்டமைப்புக்கு ஆதரவில்லை – தேர்தலில் பக்கச்சார்பற்ற நிலை – விக்கினேஸ்வரன்

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தான் நடுநிலைவகிக்கப்போவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் விக்கினேஸ்வரன், இங்கிலாந்தில் உரையாற்றும்போது கூறியது போல், வள்ளுவன் வாக்கிற்கிணங்க, நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய மனோபாவம், தூர நோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் விலைபோகாத மனோதிடம் கொண்ட அரசியல்வாதிகளே எமக்குத் தேவைப்படுகின்றார்கள். அத்துடன், தமிழர்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தி, அவர்களின்...

பேரினவாத கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் – சிவாஜிலிங்கம்

சிங்கள பேரினவாத கட்சிகளுக்கோ அல்லது சுயேட்சைக் குழுக்களுக்கோ வாக்களிக்க வேண்டாம் என்றும் தமிழ் தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்குமாறும் வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள்...

ஐ.நா ஆவணம் கசிவு – பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா? சனல் 4 கேள்வி!

ஐ.நாவில் இருந்து கசிந்து தமக்கு கிடைத்துள்ள ஆவணம் ஒன்று, இலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம் தெரிவித்துள்ளது. நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்படும், இலங்கையின் 26 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போது, இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஐ.நா விசாரணை குறித்து வரும் செப்ரெம்பரில்...

பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை அதிபர்களுக்கான வேண்டுகோள்

இந்த முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை சுட்டெண் அடங்கிய சுற்றறிக்கை இதுவரை கிடைக்கப் பெறாத பாடசாலை அதிபர்கள் உடனடியக அறியத் தருமாறு பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிடுகின்றது. இம்முறை பரீட்சை வரும் ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி நாடுபூராகவும் உள்ள 2907 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது. பரீட்சையில் தோற்றுவதற்காக 340,930...

இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரி பலி

தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான லக்ஷர் இ ஜாங்வி அமைப்பின் தலைவர் மாலிக் இஷாக் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. கடந்த வாரம் மாலிக் இஷாக் மற்றும் அவரது இரு மகன்களும் கைதுசெய்யப்பட்டனர். இவர்களை பஞ்சாப் மாகாணத்திற்கு ஆயுதங்களை மீட்கும் பொருட்டு அழைத்துச் சென்று பின் செவ்வாய்க்கிழமை திரும்பி வருகையில், ஆயுதம் தாங்கிய குழுவினர் அவர்கள்...

முருகன், சாந்தன், பேரறிவாளன் தண்டனை ரத்து சரியான தீர்ப்பே!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரணதண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக இந்திய மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை இந்திய உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரணதண்டனை ரத்துச் செய்தும், அவர்களுக்கான தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்தும், உச்சநீதிமன்ற தலைமை...

வடமாகாண கூட்டுறவு அமைச்சின் ஏற்பாட்டில் பனை அபிவிருத்தி ஆய்வரங்கு

வடமாகாண கூட்டுறவு அமைச்சின் ஏற்பாட்டில் பனை அபிவிருத்தி தொடர்பான ஆய்வரங்கு செவ்வாய்க்கிழமை (28.07.2015) யாழ் நகரில் உள்ள கிறீன் கிறாஸ் விடுதியில் நடைபெற்றுள்ளது. வடமாகாண கூட்டுறவு அமைச்சு கடந்த 22 ஆம் திகதி தொடங்கி 28 ஆம் திகதி வரையான பனை அபிவிருத்தி வாரத்தில் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே,...

மக்களின் சுய நிர்ணய அங்கீகாரம் பெறுவதன் மூலம் மட்டுமே தியாகங்களிற்கு பெறுமதி கிடைக்கும் – செல்வராசா கஜேந்திரன்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று ஜூனியன்குளம் அக்கராயனில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் யாழ் மாவட்டத்தில் இலக்கம் 10 இல் போட்டியிடும் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் நடை பெற்றது. இக் கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் கிளிநொச்சியை பிரதிநிதிப்படுதும் இலக்கம் 9 இல் பேட்டியிடும் முன்னை நாள் போராளியும்...

இறுதி யுத்தகாலத்தில் திட்டமிட்டே கூட்டமைப்பினர் இந்தியா சென்றனர்!-கிசோர்

இறுதி யுத்தம் நடைபெற்ற போது சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் திட்டமிட்டே இந்தியா சென்றிருந்ததாகவும் அதனை தடுக்கும்படி புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார் என கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி சிவநாதன் கிசோர் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, ஊடகவியலாளர் இறுதி யுத்தம் நடைபெற்ற போது கூட்டமைப்பின்...
Loading posts...

All posts loaded

No more posts