நான் கொலைகாரன், பிரபாகரன் மிஸ்டரா? – மகிந்தவின் ஆதங்கம்

பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாத்த என்னை கொலையாளி என்று சித்தரிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் பல உயிர்களை கொன்று குவித்த விடுதலைப் புலிகளின் தலைவரை மிஸ்டர் பிரபாகரன் என்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குருநாகல் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் கடந்த காலத்தில் பயங்கரவாதம் காணப்பட்ட...

போதைப் பொருளுடன் பிள்ளைகள் பிடிபட்டால் பெற்றோரையும் கைதுசெய்யவும் – நீதிபதி

போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் அதேவேளை, பிள்ளைகள் பிடிப்பட்டால் அவர்களுடைய பெற்றோர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், வெள்ளிக்கிழமை (07) உத்தரவிட்டார். கஞ்சா வழக்கு தொடர்பிலான விசாரணை வெள்ளிக்கிழமை (07) நடைபெற்றபோதே நீதிபதி இவ்விடயத்தை தெளிவுபடுத்தினார். 'போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும்...
Ad Widget

வாக்காளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு பொருத்தமானவர்களை மட்டுமே தெரிவு செய்ய வேண்டியது நாட்டில் உள்ள எல்லா வாக்காளர்களினதும் மிகப்பெரும் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் நற்பெயரை மதித்து பாதுகாக்கின்ற நாட்டுக்காக பணி செய்யக்கூடிய மிகப் பொருத்தமான வேட்பாளர்களை மட்டுமே தேர்தலில் தெரிவுசெய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். மக்கள் தங்களது...

10ஆவது தடவையாக கசிப்புடன் கைதானவருக்கு விளக்கமறியல்

சுழிபுரம் குடாக்கனை பகுதியில் கசிப்பு காய்ச்சுதல் மற்றும் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக 10 ஆவது தடவையாகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான், கறுப்பையா ஜீவராணி வெள்ளிக்கிழமை (07) உத்தரவிட்டார். கசிப்பு காய்ச்சும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இவரை, வியாழக்கிழமை (06) வட்டுக்கோட்டைப் பொலிஸார் கைது செய்திருந்தனர்....

ஐ.நாவுக்கு எவ்வாறு பதிலளிப்பது! கூட்டமைப்பை நாடுகிறது அரசு!! பேச்சுகளும் நடந்தன என்கிறார் ரணில்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செப்ரெம்பர் மாதம் முன்வைக்கப்படவுள்ள சர்வதேச விசாரணை அறிக்கைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:- "நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வே எமக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இருந்தது. வேறு எந்தவித...

புதிய அரசியல் சாசனம் மூலமாக தேசிய பிரச்சினைக்கு முழுமையான தீர்வு வேண்டும்! – சம்பந்தன்

"இலங்கையின் தற்போதைய அரசியல் சாசனம் நீக்கப்படவேண்டும். புதிய அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட வேண்டும். அந்தப் புதிய அரசியல் சாசனத்தின் மூலம் தேசியப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிட்டவேண்டும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே...

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய ஆடிக்கார்த்திகை பெருவிழா!

மாவிட்டபுரம் ஶ்ரீ கந்தசுவாமி கோவில் ஆடிக் கார்த்திகை பெருவிழா இன்று (08) சனிக்கிழமை அதிகாலை 05 மணிக்கு நடைபெறவுள்ளது. உசத் கால பூசையுடன் ஆரம்பமாகி இரவு 09 மணிவரை இப்பூசை நிகழ்வு நடைபெறவுள்ளது. அவ்வகையில், காலை 07 மணிக்கு ஸ்நபனாபிஷேகமும் விசேட மேளக்கச்சேரியும் நடைபெற்று, 08 மணிக்கு காலை சந்திப்பூசை விசேட மேளக் கச்சேரியும் 08.30...

அரச பொதுச் சேவைகளுக்கென 7500 பட்டதாரிகள் உள்ளடக்கப்படுவர்!

அரசின் பொதுச் சேவை நிறுவனங்களிலுள்ள வெற்றிடங்களை நிரப்பும் முகமாக 7500 பட்டதாரிகளை உள்வாங்கி வேலை வாய்ப்பினை வழங்கவுள்ளதாக அரசு தீர்மானித்துள்ளது. ஏற்கனவே தகுந்த அமைச்சரவை அமைச்சர்களால் இது தொடர்பில் எடுக்கபட்ட முடிவுகளை தொடர்ந்து எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் இந்த உள்வாங்கல்கள் இடம்பெறவுள்ளது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பினை வழங்குவது தொடர்பில் வௌியிட்ட அறிக்கையில்...

மஹிந்தவின் காலத்தில் 700 பில்லியன் ரூபா வரி வருமானம் காணமல் போயுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியினால் அரச சொத்துக்கள் தனியார் மயப்படுத்தப்படுவதாக கூறி பொய்யான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், மஹிந்த ராஜபக்‌ஷ காலத்தில் செல்வந்தர்கள் வரி அறவிடுவதில் இருந்து பாதுகாக்கப்பட்டனர். உயர் வருமானம் பெறக்...

கல்வி பொதுத்தராதர உயர் தரப்பரீட்சை வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகியது?

நாளை(8) நடைபெறவிருக்கும் கல்வி பொதுத்தராதர உயர் தரப்பரீட்சை  பொறியியல் தொழில்நுட்ப பகுதி 2 க்கான வினாத்தான் கம்பகா மாவட்டத்தில் இன்று மாலை வெளியாகியுள்ளது .அதை வெளியிட்டவர் சம்பந்தமான விபரங்கள் இல்லை ஆனால் 5 லட்சம் ரூபாய்க்கு விட்கப்பட்டதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன. கம்பகா மாவட்டத்தில் உள்ள ரத்னவலி பாலிக வித்தியாலய மாணவர்களிடமே இந்த வினாத்தாள்...

தமிழ் மக்கள் த.தே.கூட்டமைப்புக்கே வாக்களியுங்கள்: கருணா வேண்டுகோள்

தேசிய கட்சிகளுக்கு வாக்களித்து மாற்றுத்தலைவர்களை உருவாக்காமல், தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே வாக்களிக்க வேண்டும் என முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நடைபெறப்போகும் தேர்தல் தமிழ் மக்களுக்கு முக்கியமான தேர்தலாகும். எமது உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு மீண்டும் ஒருவாய்ப்புக் கிடைத்துள்ளது.  ...

 எல்லாவற்றிலும் இனவாதத்தை கலக்கிறார் மஹிந்த – சிவாஜிலிங்கம்

'நாய்க்கு கல்லெறிந்தால் அது காலைத் தூக்குவது போல, எதைச் செய்தாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதற்குள் இனவாதத்தை கொண்டுவருகின்றார்' என எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியிடும் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து...

உ/த பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் வழங்காததால் மாணவி தற்கொலை

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்தை பாடசாலை அதிபர் வழங்காததால், மாணவியொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. வவுனியா, பண்டாரிக்குளம், விபுலானந்தா வித்தியாலயத்தைச் சேர்ந்த 19 வயது மாணவியொருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது தற்கொலைக்கான காரணத்தை கடிதமொன்றில் எழுதிவைத்துவிட்டே அம்மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என...

ஈழத்து முதல் தமிழ்ப் பெண் இசைக் குயிலின் “குயின் கோப்ரா”… சென்னையில் வெளியானது

ஈழத்தின் முதல் தமிழ்ப் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரிய பிரபாலினி பிரபாகரனின் ‘குயின் கோப்ரா' இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கங்கை அமரன், பாடகர் மாணிக்க விநாயகம், ஸ்ரீகாந்த் தேவா, பரமேஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். குயின் கோப்ரா இசை ஆல்பத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன....

அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சி தேர்தல்விதி முறைகளை மீறினர் என்ற குற்றம் சாட்டு வழக்கு ஒத்திவைப்பு

அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சாவச்சேரி நீதிமன்ற அழைப்பாணைக்கு அமைவாக நேற்று (06-08-2015) சாவச்சேரி நீதிமன்றத்தில் ஆஜரானார். 31-07-215 அன்று சாவகச்சேரி பகுதிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு 25 பேர் கொண்ட குழு சென்ற வேளை அவர்களில் சிலரை பொலிஸார்...

சிலாபம் ரயிலுக்குள் இடம்பெற்ற வெடிப்பின் மர்மம் என்ன? ISIS தீவிரவாதிகள் காரணமா??

சிலாபம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அலுவலக ரயிலில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த சஞ்சீவ ரணசிங்க என்பவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ரயில் திணைக்கள ஊழியர் என்றும் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று...

தபால்மூல வாக்களிப்பு: யாழில் 90 வீதமான வாக்குகள் பதிவு

யாழ்.மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பில் 90 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் அலுவலகத்தின் உத்தியோகப்பூர்வ தகல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் திணைக்கள கண்காணிப்பாளர்கள் மற்றும் ஏனைய கண்காணிப்பு அமைப்பாளர்களின் காண்காணிப்புடன் எந்தவிதமான குழப்பங்களும் இல்லாமல் அமைதியான முறையில் தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெற்றுள்ளது என்றும் அலுவலகத் தகவல்கள்...

இந்திய மீனவர்களும் தென்னிலங்கை மீனவர்களும் வடமராட்சி கிழக்கு பகுதியில் அடாவடி!!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மீனவர்களின் கரைவலை மற்றும் இதர வலைகளை இந்திய மீனவர்களும் தென்னிலங்கை மீனவர்களும் அறுத்தெறிவதாகவும், கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் 8 மீனவர்களுடைய சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் இவ்வாறு அறுக்கப்பட்டுள்ளதாக கட்டைக்காடு மீனவர் சங்கத் தலைவர் அருளப்பு யோசப் எட்வேர்ட் தெரிவித்தார். கடலட்டை பிடிப்பில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்கள்...

அழிவடையும் நிலையில் கீரிமலைக் கேணி!

இந்து மக்களின் வரலாற்றுப் மகிமை வாய்ந்த கீரிமலைக் கேணி அழிவடையும் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனை உடனடியாக திருத்தி அதனுடைய வரலாற்றையும் மற்றும் இந்து கலாசார மரபுகளையும் காப்பாற்ற வேண்டிய அவசியமும் தேவையும் தற்போது எழுந்துள்ளது. சுனாமி அனர்த்தத்தினால் கீரிமலைக் கேணியும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. அந்த வேளையில் கேணியின் சுவர்கள் உடைந்து சேதமடைந்ததுடன் கேணியின்...

கூட்டமைப்பின் கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை வாளால் துரத்திய வயோதிபர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அங்கு திடீரெனப் புகுந்து கலகம் விளைவிக்க நினைத்த வேறு கட்சியின் உறுப்பினர்களை மக்கள் விரட்டியடித்த சம்பவம் நேற்று நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்றைய தினம் வேட்பாளர் சித்தார்த்தனுக்கு ஆதரவாக புங்குடுதீவில் பிரச்சாரம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அங்கே வந்த...
Loading posts...

All posts loaded

No more posts