இலங்கை தோல்வி : விடை பெற்றார் சங்கா

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 278 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றது. இதில் முன்னதாக இடம்பெற்ற முதல் டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கடந்த 20ம் திகதி கொழும்பு...

வடமாகாண சபைக்கு மூன்று புதிய உறுப்பினர்கள் தெரிவு

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலையடுத்து வடமாகாண சபைக்கு மூன்று புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதன்படி வடக்கு மாகாண சபை உறுப்பினர்களாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தர்மலிங்கம் சித்தார்த்தன், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர். சிவமோகன் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் ஆகியோர்...
Ad Widget

மூன்று அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் மங்கள சமரவீர வௌிவிவகார அமைச்சராகவும் நீதி அமைச்சராக விஜயதாஸ ராஜபக்ஷவும் டி.எம்.சுவாமிநாதன் மீள்குடியேற்ற அமைச்சராகவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழ் அரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் விவரம்

இரண்டு தேசியப்பட்டியல் உறுப்பினர்களை தனதாக்கிக்கொண்ட அகில இலங்கை தமிழ் அரசுக் கட்சி அந்த இரண்டு உறுப்பினர்களின் பெயர்களையும் அறிவித்துள்ளது. அதன் பிரகாரம் கே. துரைரட்ணசிங்கம் (திருகோணமலை), சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா( வன்னி) ஆகிய இருவருமே நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருத்தப்பட்ட புதிய கட்டமைப்பின் கீழ் நவம்பரில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்!

திருத்தப்பட்ட புதிய கட்டமைப்பின் கீழ் நவம்பரில் 335 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிய வருகின்றது அது தொடர்பிலான அறிவித்தல் சனாதிபதியால் வெளியிடப்பட உள்ளது என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே 210 சபைகள் பதவிக்காலம் முடிந்துள்ளன மிகுதி ஒக்டோபர் 31ம்திகதி பதவிக்காலம் பூர்த்திசெய்கின்றன.

நாம் எமது கொள்கையில் உறுதியாக நின்று மக்களது வாழ்வாதரத்தை கட்டிஎழுப்ப உழைப்போம்- கஜேந்திரகுமார்

நடைபெற்ற முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவாக வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவக்கும் மக்கள் சந்திப்பு வட்டுக்கோட்டைத் தொகுதியில் குக்கிராமம் ஒன்றில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு ஆதரவாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் அவர்கள் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான...

அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்களது விடுதலைக்காக நாம் தொடர்ந்து குரல்கொடுப்போம்-கஜேந்திரகுமார்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்ட கட்சியின் ஒரு தொகுதி செயற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (22) வடமராட்சியில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேற்படி சந்திப்பில் கட்சியின் முக்கியஸ்த்தர்களான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்...

ஒரே மகனை கருணா குழுவினரே பிடித்துச் சென்றனர்! – ஆணைக்குழு முன் தாய் கண்ணீர்

மேசன் வேலைக்குச் சென்ற எனது மகன் இன்றுவரை வீடு திரும்பிவரவில்லை என தாயார் ஒருவர் கண்ணீர் சிந்தியவாறு ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார். வடிவேல் சிவகுமார் என்ற 27 வயதான எனது மகன், கடந்த 2007.11.09 அன்று எமது வீட்டிலிருந்து காத்தான்குடிக்கு மேசன் வேலைக்காகச் சென்றார். அவர் இன்றுவரை வீடு வந்து சேரவில்லை.அவர் வேலைக்குச் சென்ற இடத்திலும்,...

ஆலயத்தில் நிதிமோசடி

நீர்வேலி, வாய்காற்றரவை பிள்ளையார் ஆலய பூசகர்களினால் பாரியளவு நிதி மோசடி இடம்பெறுவது தொடர்பாக கோப்பாய் பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகப்பழமை வாய்ந்த ஆலயமான வாய்காற்றரவை பிள்ளையார் கோயில் பொதுமக்களுக்கு உரிய ஆலயமாக காணப்படினும் இங்கு பூசை செய்யும் பூசகர்கள் மூவர் தமது பெயர்களுக்கு வெளிப்படுத்தல் உறுதி மூலம் முகாமைத்துவ...

மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாத விதத்திலேயே நாம் ஆட்சி செய்கிறோம்! – சம்பூரில் ஜனாதிபதி

எமது புதிய அரசாங்கம் இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாமல் இருக்கும் விதத்திலேயே ஆட்சி செய்கிறது எனத் தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. நேற்று சம்பூரில் மக்களின் காணிகளை கையளிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றிருந்தார். இதன்போது அவர் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தனது உரையில் யுத்தம் சத்தியத்தை இல்லாமல்...

வடமராட்சி மீனவரின் வலையில் சிக்கிய சடலம்!

பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் மீனவர்களின் வலையில் சடலம் ஒன்று சிக்கியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கற்கோவளம் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர்களின் வலையில் இந்தச் சடலம் அகப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. சடலத்தை அடையாளம் காண்பதற்காக பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தண்ணீரை சுத்திகரிக்கும் புத்தகம் அறிமுகம்!

வழமையாக புத்தகங்கள் மனிதர்களுக்கான அறிவூட்டல்களையே வழங்குகிறது. மனிதனும் புத்தகங்களிலிருந்து வேறுபட்ட அறிவுகளையே பெற்றுக் கொள்கிறான். ஆனால் தற்போது அமெரிக்காவிலுள்ள ஆய்வாளர்கள் புத்தகமானது நீரை சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்த உதவும் என தெரிவித்துள்ளனர். குடிக்கக்கூடிய புத்தகம் (‘Drinkable book’) என்ற பெயரிலான இந்த புத்தகத்தில் ஒவ்வொரு பக்கமும் வௌ்ளி, செப்பு மற்றும் நனோ துகள்களால் ஆக்கப்பட்டுள்ளது. கழிவு...

சம்பூரில் இடம்பெயர்ந்த 234 குடும்பங்களுக்கு காணி உறுதி

திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த 234 குடும்பங்களுக்கு காணி உறுதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்றுமுன்தினம் (22) கையளிக்கப்பட்டன. இறுதி யுத்தத்தின் பின்னர் கடந்த அரசினால் விசேட வர்த்தமானி அறிவித்தலினூடாக முதலீட்டுச்சபைக்கு கையளிக்கப்பட்ட 818 ஏக்கர் காணியை புதிய அரசு மீண்டும் அரசுடையாக்கி மீண்டும் ஆரம்ப உரிமையாளர்களுக்கு கையளிக்கப்பட்டது. அந்த காணிகளுக்கான காணி உறுதிகளே ஜனாதிபதியினால்...

18 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் விடை கொடுத்தார் சங்கா

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நேற்று இடம்பெற்று வருகின்றது. இந்தப் போட்டியே இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார கலந்துகொள்ளும் இறுதி சர்வதேச டெஸ்ட் போட்டியாகும். எனவே இரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய அவர் 18 ஓட்டங்களுடன் அஸ்வினின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து...

கூட்டமைப்பு தேசியப்பட்டியல் இடங்களை பிரிச்சு வழங்க முடிவு! சுரேசுக்கு இல்லை?

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் தெரிவுக்காக இன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஒன்று திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களுக்கு முதல் இரண்டரை வருடம் என்றும் பின்னர் சாவகச்சேரி க.அருந்தவபாலனுக்கு இரண்டரை வருடம் எனவும் , மற்றையது திருகோணமலை திரு. க. துரைரெட்ணசிங்கம் அவர்களுக்கு என்றும் கூட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து வெளிவந்த இரகசிய தகவல்கள் தெரிவிக்கின்றன ....

கூட்டமைப்பு தேசியப்பட்டியல் உறுப்பினர்களில் ஒன்று முடிவாகியது மற்றது விவாதத்தில்

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களை தீர்மானிக்கும் உயர்மட்ட கலந்துரையாடல் தற்பொழுது திருகோணமலையில் நடந்து கொண்டிருக்கிறது. இதுவரையான கலந்துரையாடல்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவில் போட்டியிட்டு தோல்வியடைந்த பெண் வேட்பாளரான சாந்தி சிறிஸ்கந்தராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மற்றவரை தேர்வு செய்யும் கலந்துரையாடல் தொடர்ந்து நடந்து வருகிறது. அதுபெரும்பாலும் கிழக்கு மாகாணத்திற்கே வழங்கப்படும் என எதிர்பார்க்கபப்டுகின்றது .

யாழில் இரு சடலங்கள் மீட்பு!

யாழ்.நகர் மற்றும் திருநெல்வேலிப் பகுதிகளிலிருந்து இரு சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி கேணியடி வைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து எரிந்த நிலையில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தனித்து வசித்து வரும் இவருக்கு இன்று சனிக்கிழமை காலை உணவு கொடுப்பதற்காக அவரது மருமகன் அங்கு சென்ற போது வீட்டில் எரிந்த நிலையில் மூதாட்டியின்...

நல்லூர் ஆலயத்திற்கு செல்வோருக்கு பொலிஸாரின் அறிவுரை

நல்லூர் ஆலயத்திற்கு செல்லும் போது வீட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி விட்டு செல்லுமாறு யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.வூட்லர் தெரிவித்துள்ளார். தற்போது நல்லூர் திருவிழாக் காலம் ஆரம்பித்து உள்ளமையால் இந்துக்கள் அனைவரும் கோயில்களுக்கு சென்று வருவது வழமை. இரவு,பகல் மற்றும் அதிகாலை என பல நேரங்களில் கோவில் களுக்கு சென்று வருகின்றனர். இவ்வாறு செல்லும் போது வீட்டில்...

தேசியப் பட்டியல் குறித்து முறுகல் நிலை : ஆதரவாளர்களால் சம்பந்தன் வீடு முற்றுகை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டினை கட்சி ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் தொடர்பில் தொடர்ச்சியாக இழுபறி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தேசிய பட்டியல் தொடர்பில் இன்று அறிவிக்கப்படவுள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே தற்போது இரா.சம்பந்தனின் வீட்டினை வடக்கு மற்றும் கிழக்கினைச் சேர்ந்த கட்சி ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது, தேசிய பட்டியல்...

இந்திய றோலர்களைக் கட்டுப்படுத்த சரியான நடவடிக்கை வேண்டும்

இலங்கை கடற்பரப்புக்குள் குறிப்பாக வடபகுதி கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்திய றோலர் படகுகளைக் கட்டுப்படுத்த சரியான நடவடிக்கையை இலங்கை மத்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தங்கள் கொடுக்க வேண்டும் என இலங்கை கடலுணவுகள் ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்தது. அந்தச் சங்கத்தின் கடலுணவு ஆய்வாளர் ஸ்ரீவ்...
Loading posts...

All posts loaded

No more posts