Ad Widget

தண்ணீரை சுத்திகரிக்கும் புத்தகம் அறிமுகம்!

வழமையாக புத்தகங்கள் மனிதர்களுக்கான அறிவூட்டல்களையே வழங்குகிறது. மனிதனும் புத்தகங்களிலிருந்து வேறுபட்ட அறிவுகளையே பெற்றுக் கொள்கிறான். ஆனால் தற்போது அமெரிக்காவிலுள்ள ஆய்வாளர்கள் புத்தகமானது நீரை சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்த உதவும் என தெரிவித்துள்ளனர்.

book-clean-watter

குடிக்கக்கூடிய புத்தகம் (‘Drinkable book’) என்ற பெயரிலான இந்த புத்தகத்தில் ஒவ்வொரு பக்கமும் வௌ்ளி, செப்பு மற்றும் நனோ துகள்களால் ஆக்கப்பட்டுள்ளது. கழிவு நீரை ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொண்டு இப் புத்தகத்திலிருந்து ஒற்றை ப்பக்கத்தினை கிழித்து இதன் மூலம் கழிவு நீரினை வடிகட்ட வேண்டும். அவ்வாறு வடிகட்டி வேறொரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டால் சுத்தமான குடிக்கூடிய நீரினை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.

இப்புத்தகத்திலுள்ள ஒவ்வொரு பக்கமும் உலோகத்துகள்களால் ஆக்கப்பட்டமையால் அவை கழிவு நீரிலுள்ள பக்டீரியா பங்கசு போன்ற வைரஸ்களை அழிக்க உதவுகிறது. அத்துடன் ஒவ்வொரு பக்கத்திலும் அனைத்து மக்களுக்கும் விளங்க கூடிய வகையில் வழிகட்டுவதற்கான வழிமுறைகள் அவரவரது சொந்த மொழியில் அச்சிடப்பட்டுள்ளது.

அவற்றுள், “உங்கள் கிராமங்களிலுள்ள நீரானது உங்களுக்கு மரணத்தினை விளைவிக்கின்ற உயிர்கொல்லி நோய்களை உண்டு பண்ணலாம். ஆனால் இந்த புத்தகத்திலுள்ள ஒவ்வொரு பக்கமும் நீரை சுத்திகரித்து உங்களுக்கான பாதுகாப்பான நீரினை வழங்கும்” என்ற ஒரு வாசகத்தினை உதாரணமாக குறிப்பிடலாம்.

கார்னேஜ் மெலோன் பல்கலைக்கழகத்தினை சேர்ந்த (Carnegie Mellon University) பட்ட மேற்படிப்பு ஆய்வாளர் தெரேசா டங்வோச்சி (Theresa Dankovich) இந்த புத்தகத்தினை தனது மேலதிக ஆய்வுக்காக இதனை கண்டுபிடித்து்ளளார். அவர் இப்புத்தகத்திற்கு குடிக்கக்கூடிய புத்தகம் (‘Drinkable book’) எனப் பெயரிட்டுள்ளார்.

இது குறித்து ஆய்வாளர் தகவல் தெரிவிக்கும் போது – நான் எமது சூழலை சுத்திகரிக்கும் நோக்கிலேயே இந்த திட்டத்தினை ஆரம்பித்தேன். இது பல்வேறுபட்ட மக்களுக்கு பல்வேறான வழிகளில் உதவும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

Related Posts