மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாத விதத்திலேயே நாம் ஆட்சி செய்கிறோம்! – சம்பூரில் ஜனாதிபதி

எமது புதிய அரசாங்கம் இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாமல் இருக்கும் விதத்திலேயே ஆட்சி செய்கிறது எனத் தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

maithri vist sampoor

நேற்று சம்பூரில் மக்களின் காணிகளை கையளிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றிருந்தார்.

இதன்போது அவர் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தனது உரையில் யுத்தம் சத்தியத்தை இல்லாமல் செய்துவிடுகின்றது. இதேபோல கருணை, அன்பு, இரக்கம் என்பவற்றையும் அழித்து விடுகிறது. எனவே யுத்தம் நாட்டுக்கும் மக்களுக்கும் பொருத்தமானது இல்லை – என்றார்.

சம்பூருக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். அத்துடன் நினைவுக்கல்லும் நாட்டி வைத்தார். இந்நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சீ.யோகேஸ்வரன் ஆகியோரும் உடனிருந்தார்.

Related Posts