Ad Widget

ஆலயத்தில் நிதிமோசடி

நீர்வேலி, வாய்காற்றரவை பிள்ளையார் ஆலய பூசகர்களினால் பாரியளவு நிதி மோசடி இடம்பெறுவது தொடர்பாக கோப்பாய் பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிகப்பழமை வாய்ந்த ஆலயமான வாய்காற்றரவை பிள்ளையார் கோயில் பொதுமக்களுக்கு உரிய ஆலயமாக காணப்படினும் இங்கு பூசை செய்யும் பூசகர்கள் மூவர் தமது பெயர்களுக்கு வெளிப்படுத்தல் உறுதி மூலம் முகாமைத்துவ நிர்வாகம் என ஒன்றினை உருவாக்கி, நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், தீர்த்தத் திருவிழா உபயகாரரான அ.நடராஜா என்பவர் மேற்படி விடயத்தினை வெளிப்படுத்தியதால், அவரால் 40 வருடமாக மேற்கொள்ளப்பட்டு வந்த தீர்த்தத் திருவிழாவை நடத்துவதற்கு ஆலய பூசகர்கள் தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருகின்றனர் என்றும் ஆலயம் தொடர்பில் பல்வேறு கடித தலைப்புக்களை பாவித்து ஆலயத்தை புனருத்தாரணம் செய்வதாக கூறி பெரும் நிதி மோசடி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலயம் தொடர்பில் நான்கு தீர்மானங்களை மேற்கொண்டு அவற்றின் அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலாளருக்கு யாழ். மாவட்டச் செயலாளரினால் அறுவுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஆலயத்துக்கு புதிய நிர்வாக சபையினை உருவாக்குதல், ஆலயம் தொடர்பாக பல்வேறு கடிதத்தலைப்புக்கள் பாவிப்பதை தடை செய்தல், ஆலய கணக்குகள் சொத்துக்கள், நகைகள் மற்றும் என்பவற்றின் கணக்கு தொடர்பில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தல் போன்ற தீர்மானங்கள் குறிப்பிடப்பட்டு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Related Posts