திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த 234 குடும்பங்களுக்கு காணி உறுதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்றுமுன்தினம் (22) கையளிக்கப்பட்டன.
இறுதி யுத்தத்தின் பின்னர் கடந்த அரசினால் விசேட வர்த்தமானி அறிவித்தலினூடாக முதலீட்டுச்சபைக்கு கையளிக்கப்பட்ட 818 ஏக்கர் காணியை புதிய அரசு மீண்டும் அரசுடையாக்கி மீண்டும் ஆரம்ப உரிமையாளர்களுக்கு கையளிக்கப்பட்டது. அந்த காணிகளுக்கான காணி உறுதிகளே ஜனாதிபதியினால் நேற்றுமுன்தினம் கையளிக்கப்பட்டன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரனதுங்க, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாண்டோ, முதலமைச்சர் நஸீர் அஹமட், ரவுப் ஹக்கீம், லஷ்மன் கிரியெல்ல, தயா கமகே, டி.எம்.சுவாமிநாதன், ஆர். சம்பந்தன் உட்பட பல பிரதானிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.