இந்திய மாணவர்களின் தொழில்நுட்பத்தை திருடியது ஆப்பிள் : ரூ.1,400 கோடி அபராதம்

இந்திய ஆராய்ச்சியாளர்கள் இருவர் உட்பட 4 பேர் கொண்ட குழுவின் தொழில் நுட்பத்தை அனுமதியின்றி பயன்படுத்திய ஆப்பிள் நிறுவனம், ரூ.1,400 கோடி இழப்பீடு வழங்க வேண்டுமென அமெரிக்க கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைகழகத்தின் கம்ப்யூட்டர் துறை பேராசிரியர் குரிந்தர் சோஹி, இந்தியாவிலுள்ள பர்டே பல்கலைகழகத்தின் மின்னணுதுறை பேராசிரியர் டெரனி விஜயகுமார். இந்த இருவரும்...

முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவருக்கு த.தே.ம.முன்னணி 300,000ரூபா வாழ்வாதார உதவி வழங்கியது

கடந்த 2009 ற்கு முன்னரான காலத்தில் ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இன அழிப்பு யுத்தத்தின்போது காயமடைந்து முள்ளந்தண்டு பாதிப்பிற்கு உள்ளாகி இடுப்புக்கு கீழ் உணர்வு இழந்த நிலையில் வாழும் இளைஞர் ஒருவருக்கு மூன்று லட்சம் ரூபா நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள தமிழ்ச்சோலைப் பள்ளி நிர்வாகத்தினால் அனுப்பப்பட்ட நிதி தமிழ்த்...
Ad Widget

இந்திய வீடமைப்பு திட்டத்தில் பாலியல் இலஞ்சம்; விசாரணை நிறைவு

இந்திய வீடமைப்பு திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இந்திய தூதரகமும், செஞ்சிலுவை சங்கமும் இணைந்து முன்னெடுத்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நாளை உயர்மட்ட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தகவல் தொடர்பாடல் மற்றும் மனிதவள இராஜதந்திர...

இரும்பு களவாட முயன்ற இராணுவத்தினர் 8 பேருக்கும் பிணை

கைதடி மற்றும் நாவற்குழி பகுதியில் ஏ 9 நெடுஞ்சாலையின் பெரிய அளவிலான வீதி விளம்பரப் பலகைகளின் இரும்புக் குழாய்களையும், இரும்புச் சட்டங்களையும் நள்ளிரவு நேரத்தில் களவாட முற்பட்ட 8 இராணுவத்தினரையும் சாவகச்சேரி நீதவான் தலா 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளார். எதிர்வரும் 29 ஆம் திகதி இவர்கள் சாவகச்சேரி நீதிமன்றத்த்pல் ஆஜராக...

த.தே.கூ எச்சரிக்கை

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் ஜனாதிபதி வழங்கிய உறுதி மொழியை அவர் மீறினால் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

விஷால் மீது சரத்குமார் தரப்பினர் தாக்குதல் – தேர்தலில் பரபரப்பு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், விஷால் மீது எதிர் அணியினர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷால் மீதான தாக்குதல் குறித்து நடிகை சங்கீதா கூறியதாவது, வாக்குசீட்டுகளை என் கையில் இருந்து சரத்குமார் அணியை சேர்ந்தவர்கள் புடுங்கி சென்றனர். 3 நபர்கள் சரத்குமார் பக்கத்திலேயே இருக்கிறார்கள் ஒருவர் கிச்சா ரமேஷ், சிசர்ஸ்...

தமிழினி காலமானார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் பிரிவு அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினி எனப்படும் சுப்ரமணியம் சிவகாமி காலமானார். மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர், இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக, அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு கைதிகளுக்கு தீர்வளித்த வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன்

சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை கவலைக்கிடமான சூழலை எட்டியுள்ள நிலையில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கைதிகளின் நிலைமை தொடர்பிலும் அவர்களின் விடுதலையை துரிதப்படுத்துமாறும் கோரி அவசர கடிதமொன்றை அனுப்பியிருந்தார். சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் அரசியல் கைதிகள் ஜனாதிபதியின் உத்தரவாதம் கிடைக்கும் வரை உண்ணாவிரதத்தை கைவிடமாட்டோம்...

அமிர்தலிங்கம் ஏன் எதற்காக கொல்லப்பட்டார் ?

தமிழர் வரலாற்றில் தமிழீழம் தான் தீர்வென்று மேடைகளில் எழுபதுகளிலேயே முழங்கிய தமிழ் அரசியல் தலைவர் தான் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். தமிழர் வரலாற்றில் இவருக்கென்றும் ஒரு பக்கத்தை காலம் திறந்துள்ளது. மேடைப் பேச்சுக்கும், இவரது செயல் பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை. இவர்கள் போன்றவர்களது ஒரே குறிக்கோள் பதவி நாற்காலியே. (தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் போல) அந்த நேரத்தில்...

எப்படியும் வாழ முடியும் என்ற துர்ப்பாக்கிய நிலைக்குள் எமது சமூகம் – யாழ்.அரச அதிபரின் ஆதங்கம்

எமது சமூகம் மனித விழுமியங்களை இழந்து எப்படியும் வாழலாம் என்ற துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். மாவட்ட ரீதியிலான முதியோர் நலன்பேணும் அமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த புதன்கிழமை யாழ்.சென் ஜோன்ஸ் அன்புலன்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்...

தீப்பற்றியது மோட்டார் சைக்கிள் ; இளைஞன் பலி

நெல்லியடி கப்பூது பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (16) மதியம் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததில் குறித்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞன், இன்று சனிக்கிழமை (17) சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் கரவெட்டி பகுதியை சேர்ந்த குமாரசாமி நிரோஜன் (வயது 25) என்ற இளைஞனே தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். கரவெட்டியில்...

இலங்கை அணிக்கு இன்னிங்க்ஸ் வெற்றி

காலி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்க்ஸ் மற்றும் 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் முன்னதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 484 ஓட்டங்கள் பெற்றது. முதல் இன்னிங்ஸில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன 186 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 151 ஓட்டங்களையும்...

உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் நவம்பர் மாதம் 7 ஆம் திகதிவரை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று (17) சென்று கைதிகளுடன் உரையாடினார். அதன் பின்னரே தங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதற்கு...

மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்ததில் இளைஞர் படுகாயம்

மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.சோனப்பு கப்பூது வீதியில் நேற்று காலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் கரவெட்டி மத்தொனியைச் சேர்ந்த குமாரசாமி –நிரோஜன் (வயது 25) என்பவரே தீக்காயத்துக்குள்ளாகியுள்ளார். மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்ததுடன் தலைக்கவசமமும் எரிந்த நிலையில் சம்பவ இடத்தில் காணப்படுகின்றது. படுகாயமடைந்த நபர் மந்திகை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக...

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பயிலும் யாழ். மாணவன் விபத்தில் பலி

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பயிலும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவன், விபத்தொன்றில் பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பயலும் மாணவர்கள் இருவர் பயணம் செத்த மோட்டார் சைக்கிள், ஜீப் வண்டியுடன் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் ஒருவர் மரணமடைந்துவிட்டதாகவும் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்...

இலங்கைப் பிரஜை அவுஸ்திரேலியாவில் மாயம்

அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் ஈஸ்ட்லேக்ஸ் பகுதியிலிருந்து ஒரு வாரங்களுக்கு முன்னர் காணாமற்போன இலங்கையரான ராஜா தங்கராஜாவை அவுஸ்திரேலிய பொலிஸார் தேடிவருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 62 வயதான குறித்தநபர், கடந்த வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் வீட்டில் இருந்ததாக அவரது மகள் காயத்திரி தங்கராஜா தெரிவித்துள்ளார். அவர் தனது அலைபேசி, கடனட்டை மற்றும் பணம்...

சுட மறுத்த சிறுவனை 450 அடி பள்ளத்தில் தள்ளி கொலை செய்த காடையர் குழு

குவாண்டமாலா என்னும் நாட்டில் உள்ள கிராமம் ஒன்றில், அங்கேல் என்னும் 12 வயதுச் சிறுவன் தாய் தந்தையோடு வசித்து வந்தான். அவனது தந்தையார் பஸ் ஓட்டுனர். சிறுவன் பாடசாலைக்கு நடந்து சென்று பின்னர் வீடு திரும்புவது வழக்கம். சில தினங்களுக்கு முன்னர் அவன் வீடு திரும்பிக்கொண்டு இருந்தவேளை, காட்டுப் பாலம் ஒன்றில் வைத்து ஒரு காடையர்...

ஆறு வருடங்களாக காணாமல் போயிருந்த புலிகளின் தளபதிகளில் ஒருவரான விநாயகம் என்பவரின் குடும்பம் திரும்ப வந்தனர்

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது வட்டுவாகலில் இராணுவத்திடம் சரணடைந்து பின்னர் கடந்த ஆறு வருடங்களாக காணாமல் போனார்கள் என்று அறியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் தளபதிகளில் ஒருவரான விநாயகம் என்பவரின் மனைவி மற்றும் பிள்ளைகளை இனந்தெரியாத நபர்கள் யாழ்ப்பாணம் வரணியில் வைத்து இறக்கி விட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவராக இருந்த...

இரும்பு திருடிய இராணுவத்தினர் பொலிஸாரினால் கைது : பொலிஸ் நிலையம் இராணுவத்தினரால் முற்றுகை!!!

யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் ஊடக நிறுவனமொன்றின் விளம்பர பதாகையை விளம்பர நிறுவனமொன்று நாவற்குழிப் பிரதேசத்தில் அமைத்து இருந்தது. விளம்பர பதாகைகளை அமைக்கும் போது அவை காற்றால் விழாமல் இருக்க பாரிய இரும்பு கேடர்கள் கொண்டே அமைக்கப்பட்டு வருகின்றன. குறித்த விளம்பர நிறுவனம் அமைத்திருந்த ஏனைய நிறுவனங்களின் விளம்பர பதாகைகள் தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்துள்ளன. அந்த இரும்புகளை...

விண்ணப்பங்கள் கோரல்

அரச மொழிகள் திணைக்களத்தில் மொழிப்பெயர்ப்பு அதிகாரிகள் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. (சிங்களம்/ ஆங்கிலம்- தமிழ்/ ஆங்கிலம்- சிங்களம்/ தமிழ்) ஆகிய மூன்று பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. குறித்த வெற்றிடங்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று (16.10.2015) வௌியான வர்த்தமானில் வௌியிடப்பட்டுள்ளது.
Loading posts...

All posts loaded

No more posts