- Wednesday
- May 20th, 2026
பாடசாலை ஆசிரியைகள் தொப்புள் தெரிய சேலை அணியக்கூடாது என்ற விதியை கொண்டுவரப்போவதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய விடுத்திருந்த அறிக்கை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவிகள் அணியும் நடன ஆடையைக் கூட தொப்புள் தெரிவது போல அணிய அனுமதிக்கப்போவதில்லை என்று முதலமைச்சர் விடுத்திருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. தாம் அணியும் ஆடைகள்...
நடிகர் சங்கத் தேர்தலுக்கு பிறகு தற்போது படங்களிலும் அக்கறை காட்டி வருகிறார் விஷால். தற்போது பாண்டியராஜின் இயக்கத்தில் கதகளி படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் நடிகர் சங்க விஷயத்திலும் அக்கறை காட்டி வரும் விஷால் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய விஷால், நடிகர்...
யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு உட்பட்ட நாகதீபம் என்ற தீவின் பெயரை மாற்றுவதற்கு முடியாது என்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கடந்த 5ம் திகதி வடமாகண சபை அமர்வின் போது பெயர் மாற்றம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிடும் போது அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் நினைவுப் பேருரை யாழ்.சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் நேற்று பிற்பகலில் இடம்பெற்றது. இதன்போது அமரர் ரவிராஜின் உருவப் படத்திற்கு தமிழரசுக் கட்சியின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்றுவரும் மலர்க்கண்காட்சியை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து பார்வையிட்டுச் செல்வதோடு மரக்கன்றுகளையும் வாங்கிச் செல்கின்றனர். அலங்காரப் பூச்செடிகளை மாத்திரம் அல்லாமல் பழமரக்கன்றுகள், தென்னம் நாற்றுகள், தேக்கு, சமண்டலை போன்ற வெட்டுமரக்கன்றுகள், பூச்சாடிகள் போன்றவற்றை வாங்குவதிலும் பொதுமக்கள் அதிக ஆர்வம்காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு மலர்க்கண்காட்சியில் விற்பனையான மரக்கன்றுகளைவிட இந்த...
தம்மை விடுவிக்குமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளில் மூவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இவர்களில் ஒருவர், கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர் என்றும் மற்ற இருவரும் பல்லேகல தும்பர சிறைச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்றும் அறியமுடிகின்றது. தங்களை விடுவிக்குமாறு கோரி இரண்டாவது முறையாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள...
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 32 சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் 24ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அவர்களை பிணையில் விடுதலை செய்வதற்கான அறிவித்தல் கிடைக்கப்பெறவில்லை என்பதனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 32 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிய விண்ணப்பத்தை நீதிமன்றில் இன்று தாக்கல் செய்யுமாறு...
சிரியாவைச் சேர்ந்த 200 சிறுவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் அட்டூழியம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மக்களை ஈவு இரக்கம் இன்றி கொலை செய்வதற்கு பெயர் போனவர்கள். இந்நிலையில் அந்த அமைப்புக்கு எதிரான ஏமனைச் சேர்ந்த ஆர்வலர் ஒருவர் வீடியோ ஒன்றை...
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் அசத்தி வரும் இலங்கை வெற்றிகளை குவித்து வருகிறது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இலங்கை அணி, ஒருநாள் தொடரையும் முழுமையாக 3-0 என்று கைப்பற்றியது. இந்நிலையில் முதல் டி20 போட்டியிலும் அசத்திய இலங்கை அணி, 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் நாங்கள் சிறப்பாக...
தங்கள் சினிமா கதாநாயகனின் திரைப்படம் வெளியாகும் போது தீபாவளி, புதுவருடக் கொண்டாட்டங்கள் போல, பாலபிஷேசம் செய்து பட்டையக் கிளப்பும் ரசிகர்கள் பட்டாளத்திற்கு நடுவில் தீபாவளித்தி திருநாளன்று வெளியாகிய தங்கள் சினிமா கதாநாயகனின் புதுப்படத்தைக் கொண்டாடப்போன யாழ்ப்பாண அஜித் ரசிகர்கள் திரையரங்கு வாயியில் புதியதோர் தொடக்கத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். யாழ் செல்லா திரையரங்கில் விசேட தேவையுடையோரை அழைத்த...
சுனாமியால் பாதிக்கப்பட்ட மருதமுனையைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவருக்கு மருதமுனை சுனாமி வீடமைப்புத் திட்டத்தில் வீடு ஒன்றை ஒதுக்கிக் கொடுக்குமாறு, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்டு கல்முனை மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குறித்த பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்மணி தாக்கல் செய்த உறுதிகேள் எழுத்தாணை வழக்கு விசாரணைக்கென பிரதம நீதியரசரால் நியமனம் செய்யப்பட்ட யாழ்ப்பாணம்...
சிறைச்சாலையில் தாங்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் தெரிவித்தனர். புங்குடுதீவி மாணவி கொலை வழக்கு திங்கட்கிழமை (09) நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்களிடம் ஏதாவது சொல்ல விரும்புகின்றீர்களா என நீதவான் கோரியபோதே, சந்தேகநபர்கள் இவ்வாறு கூறினர். அடுத்த அமர்வில் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்...
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும்மழை காரணமாக முக்கிய குளங்கள் வான் பாயும் நிலையில் இருப்பதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்;ப்பாசன பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்தது. 10 அடி 6 அங்குலம் கொள்ளளவுள்ள கனகாம்பிகைக்குளத்தின் நீர் மட்டம் 10 அடியாகவும் 9 அடி 6 அங்குலம் கொள்ளளவுள்ள வன்னேரிக்குளத்தின் நீர் மட்டம்...
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள பூரண ஹர்த்தாலுக்கு மக்களை ஒத்துழைக்குமாறு கோரியுள்ளார் வடக்கு மாகாண அமைச்சர் பா. டெனிஸ்வரன். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- "கடந்த மாதம் தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் ஜனாதிபதியின்...
தமிழ் மக்கள் நேற்று தீபாவளித் திருநாளை கொண்டாடிய நிலையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கின் பல இடங்களில் நேற்றய தினம் கரிநாளாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும்,பொது அமைப்புக்களும் நேற்றய தினத்தை கரிநாளாக அனுஷ்டித்துள்ளனர். இலங்கை சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தீபாவளிக்கு முன்னதாக விடுதலை செய்யப்படுவார்கள் தொடர்பில் தாங்கள் ஏமாற்றம்...
தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் இதுவே வடக்கு மாகாண சபையின் எதிர்பார்ப்பு எனத் தெரிவித்துள்ள வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிய அரசாங்கம இதய சுத்தியுடன் செயற்படுவதாக தெரியவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: போர் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்து விட்டபோதும், தமிழ் அரசியல்...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சேர்மன் பதவியிலிருந்து என்.சீனிவாசன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகர், புதிய சேர்மனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசியில் சேர்மன் பதவி வகிக்கும் இந்தியாவின் முறை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தோடு நிறைவடைகிறது. அதுவரை சஷாங்க் மனோகர் அந்தப் பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்...
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2017-ஆம் ஆண்டு இறுதிக்குள் புதிய கட்டடம் கட்டப்படும் என்று சங்கப் பொதுச் செயலர் விஷால் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: படப்பிடிப்பு நேரம் போக, சங்கப் பணிகளில் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். சங்க உறுப்பினர்களின் பட்டியல் வரையறை செய்யப்படுகிறது. நடிக்காதவர்கள் பலர் உறுப்பினர்களாக உள்ளனர். நடிப்பவர்கள் பலருக்கு உறுப்பினர்கள் அட்டைகள்...
அடுத்த மக்களுக்கு உதவும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 8வது இடம் பிடித்துள்ளது. Charity aid Foundation என்ற அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் இலங்கை 9வது இடத்தில் காணப்பட்டது. 2014ம் ஆண்டை விட இலங்கை ஒரு இடம் முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தப் பட்டியலில் அதிக செல்வந்த நாடுகளை விட...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்து விட்டு அரசியல் பயிற்சி பெறுவதற்குச் சென்று வர வேண்டுமெனத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளார் வீ.ஆனந்தசங்கரி நேற்றுத் திங்கட்கிழமை தெரிவித்தார். யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் பகுதியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அச்சந்திப்பின்...
Loading posts...
All posts loaded
No more posts
