Ad Widget

கிளிநொச்சியிலுள்ள குளங்கள் வான் பாயவுள்ளன

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும்மழை காரணமாக முக்கிய குளங்கள் வான் பாயும் நிலையில் இருப்பதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்;ப்பாசன பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்தது.

10 அடி 6 அங்குலம் கொள்ளளவுள்ள கனகாம்பிகைக்குளத்தின் நீர் மட்டம் 10 அடியாகவும் 9 அடி 6 அங்குலம் கொள்ளளவுள்ள வன்னேரிக்குளத்தின் நீர் மட்டம் 8 அடி 3 அங்குலமாகவும், 19 அடி கொள்ளளவுள்ள புதுமுறிப்புக் குளத்தின் நீர் மட்டம் 15 அடி 11 அங்குலமாகவும், 12 அடி கொள்ளவுள்ள பிரமந்தனாறு குளத்தின் நீர்மட்டம் 5 அடியாகவும், 34 அடி கொள்ளளவுள்ள இரணைமடுக்குளம் 20 அடி 2 அங்குலமாகவும், 10 அடி கொள்ளவுள்ள கரியாலை நாகபடுவான் குளம் 4 அடி 6 அங்குலமாகவும், 24 அடியாகக் காணப்படும் கல்மடுக் குளத்தின் நீர்மட்டம் 16 அடி 8 அங்குலமாகவும், 8 அடி 9 அங்குலம் கொள்ளளவுள்ள குடமுறுட்டிக் குளத்தின் நீர்மட்டம் 6 அடி 11 அங்குலமாகவும், 24 அடி கொள்ளவுள்ள அக்கராயன் குளத்தின் நீர் மட்டம் 16 அடி5 அங்குலமாகவும் காணப்படுகின்றன.

தொடர்ந்து வரும் நாட்களில் மழை தொடர்ந்து பெய்தால் இந்தக் குளங்களில் வான் பாயும் எனவும் வான் பாயும் போது வான் பாயும் பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வைத்திருக்குமாறும் அலுவலகம் அறிவித்தது.

Related Posts