- Saturday
- June 13th, 2026
ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றில், 3-2 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழத்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சென்னையின் எஃப்சி. இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி, கடந்த அக்.3-ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை...
இந்தோனேஷியாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேஷியாவின் உள்ள போர்னியோ தீவுப்பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால், பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் ஏதும் இல்லை. சுனாமி ஏற்படுவதற்கான...
சிம்பு எழுதி பாடி அனிருத் இசையமைத்திருப்பதாக கூறப்படும் பீப் சாங், பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இந்த பாடலுக்கு பல்வேறு அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பாடல் பற்றி நடிகர் சங்கம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘‘முறையாக வெளியிடப்பட்டதா?, திருட்டுத்தனமாக...
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் ‘தெறி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியின் படப்பிடிப்பு சென்னை ஒமேகா தொழிற்சாலையில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய்யுடன் 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சண்டை...
நடிகர் சிம்பு எழுதி, பாடியதாக வெளிவந்த ‘பீப் சாங்’ பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்த பீப் பாடல் வெளியானது குறித்து நடிகர் சிம்பு தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிம்புவின் அப்பாவும், பிரபல இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தரும் இந்த பாடலுக்கு விளக்கம் அளிக்கும்விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது, இந்தப் பாடல்...
இந்திய இராணுவத்தின் யாழ் வைத்தியசாலை படுகொலை தொடர்பில் Tears of Gandhi என்ற பெயரில் ஆவணப்படம் வெளியாகி உள்ளது. அமைதிப்படையாக வந்த இந்திய இராணுவம் 1987 யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பொதுமக்கள் மீது புரிந்த படுகொலைகளின் சாட்சியமாக உடகவியலாளர் ஜெராவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆவணப்படம் இதுவாகும்
அரச நத்தார் கொண்டாட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (20) பிற்பகல் யாழ் மாநகர சபை மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில். அரசாங்கம் முன்னெடுக்கும் கொள்கையை புத்திஜீவிகள் புரிந்து கொண்டுள்ளனர். மக்களும் புரிந்துகொண்டுள்ளனர். புரிந்துகொள்ள முடியா சில அடிப்படைவாதிகள் கொழும்பில் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி எதுவேணுமென்றாலும் விமர்சனங்களை முன்வைக்கலாம்...
தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கம். பலவிதமான மக்கள் குழுக்களும், ஒன்றியங்களும், கட்சிகளும் சேர்ந்து நல்லை ஆதீனம் போன்ற மதாச்சாரியார்கள் உள்ளடங்கலாகத் தொடங்கியுள்ள ஒரு மக்கள் இயக்கம் அது என முதலமைச்சர் இன்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார் இதற்கு தலைமை வகிக்க ஏற்பாட்டாளர்கள் குழு என்னை அழைத்தார்கள். உண்மையில் இணைத்தலைவராகத் தான் என்னை...
அரசதுறை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவில் 2500 ரூபா எதிர்வரும் ஜனவரி முதல் அவர்களின் அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வரவுசெலவுத்திட்ட இறுதியுரையில் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை வரவுசெலவுத்திட்ட சமர்ப்பிப்பின் பின்னர் இடம்பெற்ற குழுநிலை விவாதங்களின் போது மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி 35,500 மில்லியன் ரூபாய்கள் மேலதிக...
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்யுமாறு கூட்டு எதிர்கட்சியினர் அழுத்தம் கொடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தனவினால் எழுப்பப்பட்ட வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து தெரிவித்துள்ள அவர், அரசியல் மற்றும் சிவில் அமைப்புக்கள் சுயேச்சையாக...
மாகாணசபைக்கு பகிரப்பட்டுள்ள அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் 'கிராம இராஜ்ஜியம்' திட்டம் அமைந்துள்ளதால் அதை தாம் கடுமையாக எதிர்ப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். எனவே, இந்தத் திட்டத்தை அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பொருளாதார...
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வன் தலைமையில் 'தமிழ் மக்கள் பேரவை' என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான செய்திகள் வெள்ளிக்கிழைமை இரவு தெரியவந்திருந்தது எனினும் கூட்டவிபரங்கள் இரகசியமாகவே பேணப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை இடம்பெற்ற இரகசிய கூட்டத்திலேய இந்தக்...
2016 வரவுசெலவுக்கான இறுதி வாக்கெடுப்பு நேற்று (19) 109 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது. ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக51 வாக்குகளும் கிடைத்துள்ளன.13 பேர் சமூகமளிக்கவில்லை. எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது வரவுசெலவு திட்டம் கடந்த நவம்பர் 20ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் 11 அத்தியவசிய பொருட்களின் விலை குறைப்புடன் சமர்ப்பிக்கப்பட்டது. ஐக்கிய...
வடக்கில் இராணுவத்தினரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் பல விடுவிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இராணுவத்தினரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னரும் வடக்கில் இராணுவத்தினரினால்...
வடக்கு மாகாண சபையின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடும் மோதல் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது, இதன் போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி, ரெலோ ஆகிய கட்சித் தலைமைகளின் கடந்தகால வண்டவாளங்கள் உறுப்பினர்களால் பரஸ்பராமாக உறுப்பினர்களால் சபையில் பலர் முன்நிலையில் முன்வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் வரவு - செலவுத் திட்டத்தின் இறுதி நாள் விவாதம்...
எதிர்வரும் சில மாதங்களில் நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வு கூறியுள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பற்ற பொருளாதார திட்ட கொள்கை காரணமாகவே இந்த நிலை ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார். லங்கா சமசமாஜக் கட்சியின் 80வது ஆண்டு நிறைவு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்...
இவை வித்தியாசமான சுவர்கள். தன்மீது சிறுநீர் கழிப்பவர்களை நோக்கி அந்தச் சிறுநீரை திருப்பியடிக்கும் சுவர்கள் இவை. இந்த சுவர்களின் சிறப்பு மேல்பூச்சு இந்த “திருப்பிக்கொடுக்கும்” வேலையைச் செய்கிறது. இந்தச் சுவர்கள் தற்போது லண்டனில் உள்ள உள்ளூராட்சி நிர்வாகத்தால் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. தன்மீது படும் எந்த திரவத்தையும் திருப்பியடிக்கும் வகையான பிரத்யேக சுவர்ப்பூச்சு தான் இந்த சுவர்களின்...
வரவு செலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரி காரணமாக சிறிய நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. கம்பனி பதிவாளர் திணைக்களத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாக பதிவு செய்து கொண்டுள்ள அனைத்து நிறுவனங்களும் வருடாந்தம் 60 ஆயிரம் ரூபாவை வரியா செலுத்த வேண்டும் என்று வரவு செலவுத்திட்டத்தில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இவ்வாறான சிறு நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் இயங்கி...
சர்வதேச தலையீடுகளின் மூலமாக எமக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை நாம் கொண்டுள்ளோம். அதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது. அதில் முஸ்லிம்களும் எம்முடன் ஒன்றிணைந்து பயணிக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதை முஸ்லிம்கள் இழந்துவிடக் கூடாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மறைந்த முன்னாள் செனட்டர் மசூர் மௌலானவின்...
போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்து காணாமல் போனவர்களுக்கு இராணுவத்தினரே பொறுப்புக் கூறவேண்டும். என்று காணாமல்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் கடந்த 11ம் திகதியிலிருந்து 16ம் திகதி வரை நடைபெற்ற காணாமல்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வில் சாட்சியமளிப்பதற்காகச் சென்ற காணாமல்போனோரின் உறவினர்கள் பலர், இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்கால், வட்டுவாகல்...
Loading posts...
All posts loaded
No more posts
