- Saturday
- June 13th, 2026
தேசிய நத்தார் கொண்டாட்டம் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது என்று சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். கத்தோலிக்க திருச்சபையின் தேசிய உற்சவம் எதிர்வரும் 20ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதியும் கலந்து கொள்வார்....
பாதுகாப்பான ரயில்வே கடவையை அமைத்துத் தரக் கோரி கிளிநொச்சியில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி ரயில் நிலையத்திற்கு முன்பாக காலை 9.30 மணியளவில் மேற்படி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட எல்லைக்குட்பட்ட முறிகண்டி முதல் முகமாலை வரையான பகுதியில் பாதுகாப்பான புகையிரத கடவை இல்லாததனால் இதுவரை 19 பேர் ரயிலில் மோதி பலியாகி...
யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் அறியத்தருமாறு யாழ். பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். போதைப் பொருள் விற்பனை, சட்டவிரோத செயல்களை தடுக்கும் நோக்கிலும், இவ்வாறான செயற்பாடுகளை முற்றாக ஒழிப்பதற்கு உதவி வழங்குமாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்தோடு, குறித்த விடயங்கள் தொடர்பில் 076-6633750 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர். கடந்த...
'வைத்தியர்கள் மக்களின் வரிப்பணத்தில் இலவசக் கல்வியைப் பயின்று வைத்தியர்களாக வருகின்றனர். அவ்வாறு வரும் வைத்தியர்கள் அந்தந்தப் பிரதேசங்களில் சிறிது காலம் பணியாற்றுவதை வடமாகாண சுகாதார அமைச்சு கட்டாயப்படுத்த வேண்டும்' என வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார். வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் சுகாதார அமைச்சுக்கான நிதி...
யாழ்ப்பாணம் மாநகரக்குப்பட்ட பகுதிகளில் மோசமான சுகாதார சீர்கேடுகள் காணப்படுகின்றன. இதனை மாநகர சபை கவனத்தில் எடுத்து சீர்செய்யாவிட்டால் மாநகர சபை மீது நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்' என வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்தார். வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் சுகாதார...
இலங்கையிலுள்ள சகல ஊடகவியலாளர்களுக்கும் இலவசமாக ஸ்மார்ட் அலைபேசிகள் மற்றும் சிறப்பு சலுகைகளுடன் கூடிய இணைப்பும் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொலைதொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் வரவு- செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும் போது இவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நேற்று வியாழக்வடமாகாண சபையைப் பற்றி கொழும்பிலிருந்து ஓநாயொன்று ஊளையிட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பசுபதிப்பிள்ளை தெரிவித்தார். வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தின் சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் நேற்று வெள்ளிக்கிழமை (18) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லை என்பது...
"புலிகளுடன் தொடர்புடைய தவறுகளுக்காக தண்டனை பெற்றவர்கள் அரசியல் கைதிகள் அல்லர்'' என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தில் ஜயந்த சமரவீர எம்.பி. எழுப்பிய கேள்விக்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த...
நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டுனெடினில் நடைபெற்று வருகிறது. இதில் நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அதன்படி முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 292ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. அணி சார்பாக மெத்திவ்ஸ் 77...
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றின்போது, ஆட்டநிர்ணய சூதாட்டத்தில் ஈடுபடுமாறு சூதாட்டத் தரகர் ஒருவர் அந்நாட்டு வீரர்களை அணுகியிருப்பதாக இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி கடந்த அக்டோபர் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, இந்த ஆட்ட நிர்ணய சூதாட்ட முயற்சி நடந்துள்ளதாக இலங்கையின் கிரிக்கெட் வாரியம்...
நீண்ட இடைவேளைக்குப் பிறகு மாதவன் நடிப்பில் வெளிவரவுள்ள படம் ‘இறுதிச்சுற்று’. தமிழ் மற்றும் இந்தியில் இப்படம் தயாராகியுள்ளது. இந்தியில் ‘சால காதூஸ்’ என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது. ‘துரோகி’ படத்தை இயக்கிய சுதா.கே.பிரசாத் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இதில் மாதவன் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலரை நேற்று சிவகார்த்திகேயன் வெளியிட்டார். இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல...
ஹரி இயக்கத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்த சிங்கம், சிங்கம்–2 படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இதையடுத்து ‘சிங்கம்–3’ படம் தயாராக இருக்கிறது. சிங்கம் 2 பாகங்களிலும் போலீஸ் அதிகாரியாக சூர்யாவுடன் நடித்த அனுஷ்கா, இந்த படத்திலும் ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் சுருதிஹாசன் சி.ஐ.டி. போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். எந்தெந்த நாடுகளில் படப்பிடிப்பு நடத்துவது என்பது...
ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவந்த படம் ‘எந்திரன்’. இப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று வசூலில் பெரிய சாதனையையும் படைத்தது. தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இந்த படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். ஐஸ்வர்யா ராய், கருணாஸ், சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க ஷங்கர்...
யாழ்ப்பாணம் கடலால் மூல்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக வட மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். உலக வெப்பமயமாதல் விளைவாக காலநிலையில் ஏற்படும் மாற்றங்களால் குறிப்பாக யாழ்ப்பாணம் கடலால் மூழ்கும் அபாயம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஐங்கரநேசன், 2004 ஆண்டில் வடக்கு மற்றும் கிழக்கு...
தமது நிலை குறித்து அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மத தலைவர்களுக்கு தமிழ் அரசியல் கைதிகள் அவசர கடிதம் ஒன்றை நேற்று அனுப்பி வைத்துள்ளனர். நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாம் அரசாங்கத்தினால் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டமை தொடர்பிலும், தமது விடுதலை தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக...
வேலணையில் பாடசாலை மாணவியை மோதிக் கொன்ற கடற்படையினரின் வாகனச்சாரதியை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெலின்குமார் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிவான் இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார். கடந்த 4 ஆம் திகதி வேலணைப் பகுதியில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது கடற்படையினரின் வாகனம் மோதியதில்...
தற்போதுள்ள அரசாங்கத்தில் நாங்கள் எதிர்க்கட்சியாகவே உள்ளோம். நாங்கள் அரசாங்கத்தின் அங்கம் இல்லையென வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் விவசாய, கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் நேற்று வியாழக்கிழமைவடமாகாண சபையில் நடைபெற்ற போதே, அவர்...
வலிகாமம் பகுதியிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமை தொடர்பில் நிபுணர் குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையானது தெளிவாக வெளியிடப்படவேண்டுமென வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார். வடமாகாண சபையின் 2016ஆம் ஆண்டு வரவு - செலவுத்திட்டத்தின் விவசாய, கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் கைதடியில்...
தொல்லியல் பாதுகாப்பு இடமான திருகோணமலை, கோணேஸ்வரம் கோவிலில், அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற சகல கட்டுமானங்களையும், உடன் அமுலுக்கு வரும்வகையில் இடைநிறுத்துமாறு, கோணேஸ்வரம் கோவிலின் நிர்வாக சபைக்குப் பணித்துள்ளதாக தொல்பொருளியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழ், இந்தப் பாதுகாப்பு இடத்தில், 372 ஏக்கர் அடங்குகின்றது என்றும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில், தொல்பொருளியல் திணைக்களத்தின்...
கொழும்பு-10 இல் உள்ள, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், பத்தரமுல்லையில் அமைந்துள்ள செத்சிறிபாயவுக்கு, அடுத்தவருடம் ஜனவரி மாதம் முதல் மாற்றப்படும் என, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி நாவின்ன, நேற்று வியாழக்கிழமை(17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். குறித்த திணைக்களத்தில், சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவது தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண கேள்வியெழுப்பியபோதே அமைச்சர் நாவின்ன இவ்விடயத்தைத் தெரிவித்தார். குடிவரவு...
Loading posts...
All posts loaded
No more posts
