Ad Widget

லாகூரில் கிறிஸ்தவ தேவலாயங்கள் மீது தாக்குதல்: 14 பேர் பலி

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இரண்டு கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளில் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தபோதே இத்தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இத்தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் என்று கருதப்படும் இத்தாக்குதல்கள், லாகூர் நகரில் கிறிஸ்தவ மக்கள் செறிவாக வாழும் புறநகர்ப் பகுதியான யௌஹனாபாதில் நடைபெற்றுள்ளது....

மனுஸ் தீவு முகாமில் அவலநிலை: ஊடகவியலாளர் ஆய்வு

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரச் சென்றவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பப்புவா நியு கினீயின் மனுஸ் தீவு அகதி முகாமில் மிகவும் கஷ்டமான சூழ்நிலை காணப்படுவதாக, அங்கு சென்று தகவல் சேகரித்துள்ள ஊடகவியலாளர் இயய்ன் பிளாக்வெல் கூறுகிறார். மனுஸ் தீவில் உள்ள இந்த அகதிகள் தடுப்பு முகாமில் ஆயிரத்துக்கும் அதிகமான அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அது சுகாதாரக்...
Ad Widget

இந்தியாவின் மகள் ஆவணப்படம் அமெரிக்காவில் திரையிடப்பட்டது

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த மருத்துவ மாணவி கற்பழிப்பு தொடர்பாக ‘இந்தியாவின் மகள்’ என்ற பெயரில் ஆவணப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியின் பேட்டியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் இந்த ஆவணப்படம் நேற்று திரையிடப்பட்டது....

சிரியாவில் உளவாளியை சுட்டுக் கொல்லும் 10 வயது சிறுவன்!

சிரியாவில் இஸ்ரேல் நாட்டிற்கு உளவு பார்த்ததாகக் கூறி பாலஸ்தீனியர் ஒருவரை, 10 வயது சிறுவன் சுட்டுக் கொலை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனிய நாட்டை சேர்ந்த முகமது சயீது இஸ்மாயில் முசாலாம் என்ற 19 வயதான இளைஞர், கடந்த 2014 ஆம் ஆண்டு சிரியாவுக்குச் சுற்றுலா செல்வதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டு ஐஎஸ் தீவிரவாத...

பிரஞ்சு விளையாட்டு பிரபலங்கள் அர்ஜெண்டினா விபத்தில் பலி

அர்ஜெண்டினாவில் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட சம்பவத்தில், பிரான்சின் முன்னாள் முன்னணி விளையாட்டு நட்சத்திரங்கள் மூன்று பேர் உட்பட பிரஞ்சு பிரஜைகள் எட்டு பேர் உயிரிழந்திருப்பது தன்னை தாளாத் துயரத்தில் தள்ளியிருப்பதாக பிரஞ்சு அதிபர் ஃபிரான்ஸுவா ஒல்லாந்த் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் பலரும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர். தொலைதூரத்து இடங்களில் பிரபலங்கள் கஷ்டப்பட்டு உணவு...

கேட்கும் திறன் குறைபாடுள்ளவருக்கு உயரிய இசை விருது

உலகளவில் இசைத்துறையில் நோபல் பரிசு என்று கருதப்படும் போலார் மியூசிக் விருது இந்த ஆண்டு இரண்டு பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்தின் பிரபல தாள வாத்தியக் கலைஞரான டேம் எவ்லின் க்ளெனி மற்றும் அமெரிக்காவின் நாட்டுப்புற இசைக் கலைஞர் எமிலோ ஹாரிஸ் ஆகியோரே இந்த ஆண்டுக்கான விருதுக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். [caption id="attachment_41671" align="aligncenter" width="2400"] எவ்லின் க்ளெனி[/caption]...

சிட்னியில் இந்தியப் பெண் குத்திக்கொலை: இருநாடுகளும் கண்டனம்

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் இந்தியப் பெண் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டமையை இரண்டு நாடுகளின் அதிகாரிகளும் கண்டித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மிக்பெரிய நகரமான சிட்னியில் பூங்கா ஒன்றில் பிரபா அருண் குமார் என்ற பெண் சனிக்கிழமை குத்திக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவங்கள் தொடர்பில் ஆஸ்திரேலியப் பொலிஸார் யாரையும் இதுவரைக் கைதுசெய்யவில்லை. ஆனால், இனத்துவேஷத்துடன் சம்பந்தப்பட்ட தாக்குதலாக இதனைக் கருதுவதற்கான...

சூரிய சக்தியின் துணையுடன் உலகம் சுற்றும் விமானம்

சூரியசக்தியில் இயங்கும் விமானம் ஒன்று உலகைச் சுற்றிவரும் அதன் ஐந்து மாதப் பயணத்தில் முதல்கட்டத்தில் உள்ளது. ஒரு துளி எரிபொருளையும் பயன்படுத்தாமல் தனியே சூரிய சக்தியை மட்டுமே கொண்டு இந்த விமானம் இயங்கக்கூடியது. சோலார் இம்பல்ஸ் டூ- என்ற பெயருடைய இந்த விமானம் தனியொரு நபர் மட்டுமே அமர்ந்து பயணிக்கக்கூடியது. அபு தாபியிலிருந்து ஒமான் நோக்கி...

ஐநாவின் கருத்துக்கள் எரிச்சலூட்டுகின்றன – ஆஸ்திரேலிய பிரதமர்

தஞ்சம் கோரி வருபவர்களை ஆஸ்திரேலியா நடத்தும் விதம் குறித்து ஐநாவின் சித்ரவதைகளுக்கான சிறப்புத்தூதுவர் கூறியிருக்கும் கருத்துக்கள் தம்மை எரிச்சலூட்டுவதாக இருப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் டொனி அபொட் கூறியுள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலியாவின் நாட்டுக்கு வெளியேயான தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கான தடுப்பு முகாம்களில் இருப்பவர்கள் நடத்தப்படும் விதம், சித்ரவதை குறித்த சர்வதேச சட்டங்களை மீறுவதாக இருப்பதாக ஐநா கூறியுள்ளது. மனுஸ்...

இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக லண்டன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

மூன்றுநாள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டு லண்டன் வந்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பிரிட்டிஷ் புலம்பெயர் தமிழர் அமைப்புகளால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு முன்பாக வெஸ்ட்மின்ஸ்டர் அபே முன்றலில் பிரித்தானிய தமிழர் பேரவை ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, காமன்வெல்த் தலைமையகமான மார்ல்பரோ ஹவுஸ் முன்றலில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் தமிழ்...

MH-370: காணாமல்போன விமானம் பற்றி மலேசியா ஆய்வறிக்கை

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH-370 ஓராண்டுக்கு முன்னால் காணாமல் போனது சம்பந்தமாக மலேசிய அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில், இந்த விமானத்தில் இயந்திரக் கோளாறோ, அல்லது அதன் அதன் விமானி அல்லது சிப்பந்திகளில் எவர் மீதும் சந்தேகமோ இல்லை என்று தெரிவித்துள்ளது. ஆனால் விமானம் நீருக்கடியில் விழுந்துவிட்டால் சமிக்ஞை அனுப்பி இருப்பிடத்தை காட்டிக்கொடுக்கும் கருவியில் இந்த...

‘போக்கோ ஹராம் கடுமையான நெருக்கடியில்’ – நைஜீரியா

இஸ்லாமிய அரசு இயக்கத்தின் வழியில் பற்றுறுதி கொண்டுள்ளதாக போக்கோ ஹராம் அறிவித்திருப்பது, அந்த இயக்கத்தினர் நெருக்கடியை சந்தித்துவருவதையே காட்டுகின்றது என்று நைஜீரிய அரசாங்கம் கூறியுள்ளது. நைஜீரிய மற்றும் பிராந்திய இராணுவப் படைகளின் தாக்குதல்களின் விளைவாக, போக்கோ ஹராம் ஆயுததாரிகள் தமது வல்லமைகளை இழந்து, கடுமையான சேதங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார். போக்கோ ஹராமின்...

காணாமல்போன எம்எச்370 விமானம் கண்டுபிடிக்கப்படும்

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்சிற்குச் சொந்தமான எம்எச்370 விமானம் இந்தியப் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்படும் என நம்புவதாக மலேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார். அந்த விமானம் தொடர்பான எந்தத் தகவலையும் மலேசிய அதிகாரிகள் மறைக்கவில்லையென்றும் லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார். 239 பேருடன் காணாமல் போன அந்த விமானத்தைத் தேடும் பணியை...

லண்டனில் “யாழ் வுட்” என்னும் ரகசிய தடுப்பு முகாம்!

லண்டனில் "யாழ் வுட்" என்னும் ரகசிய தடுப்பு முகாம் ஒன்று இயங்கிவருவதாக சனல் 4 தொலைக்காட்சி ஆவணம் படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் எவரும் கமராவோடு அங்கே செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. ஆனால் முதன் முறையாக ரகசிய கமராக்களோடு சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் உள்ளே நுளைந்து நடக்கும் கொடுமைகளை படம்பிடித்துள்ளார்கள். "யாழ் வுட்"...

நைஜீரியாவில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் படுகொலை

நைஜீரியாவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர், நடத்திய தாக்குதலில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நஜாபா என்ற அந்தக் கிராமத்திற்குள் புகுந்த துப்பாக்கிதாரிகள், வீடுகளைப் பார்த்துச் சுட்டனர். பிறகு கிராமத்திற்குத் தீ வைத்தனர் என இந்தத் தாக்குதலில் தப்பியவர்கள் தெரிவித்தனர்....

உலக பணக்காரர் பட்டியலில் பில் கேட்ஸ் முதலிடம்

உலகின் மிகப்பெரும் பணக்காரர் பட்டியலில் பில்கேட்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.போப்ஸ் இதழ் வருடாந்தம் வெளியிடும் உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலிலேயே இவர் முதலிடத்தில் உள்ளார். உலகின் மிகப்பெரும் பணக்காரர் பட்டியலை போப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், பேஸ்புக்ஸ் நிறுவுனர் மாக் ஜூக்கர்பேக் முதல் 20 இடத்துக்குள் வந்துள்ளார். அத்துடன், கூடைப்பந்தாட்ட நட்சத்திர விளையாட்டு வீரர் மைக்கல்...

அதிக சத்தத்துடன் இசை கேட்டால் செவித் திறன் பாதிக்கும்

ஒரு நாளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் இசையை கேட்பதால் கேட்கும் திறன் பாதிப்படைவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆகவே ஒரு நாளைக்கு ஒரு மணித்தியாலத்திற்கு மேல் இசையை கேட்பதை தவிர்ககுமாறு அந்த நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இசையை அதிகமாகவும் பெரிய சத்தமாகவும் கேட்பதால் 1.1 பில்லியன் இளைஞர்கள் தமது கேட்கும் திறனை நிரந்தரமாக இழக்கும்...

இலங்கையர் 85 பேர் இந்தோனேஷியாவில் தடுத்துவைப்பு

கடவூச்சீட்டுக்களோ அல்லது சட்ட ரீதியான ஆவணங்களோ எதுவுமின்றி இந்தோனேஷியாவினுள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் சுமார் 85 இலங்கையர்கள் வட சுமத்திராவின் பெலவான், மேதன் குடிவரவு தடுப்பு நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நிறப்புதிருக்கு விடை என்ன ?

சிலருக்கு இது நீலம் மற்றும் கறுப்பாகத் தெரியும். – அதுதான் உண்மையான நிறம். – ஆனால், சிலருக்கு இது பொன் நிறம் மற்றும் வெள்ளையாகத் தெரியும். ஒளியை நாம் பார்க்கும் விதம் குறித்த எமக்குள் இருக்கும் முரண்பாடே இதற்கு காரணம். இந்தப் படத்தில் இருக்கும் உடை வெள்ளையும், பொன்னிறமும் என்று நீங்கள் கூறினால், அது முழுப்...

“ஜிகாதி ஜான்” யாரென்று தெரிந்தது

இஸ்லாமிய அரசு தீவிரவாத அமைப்பிடம் பிடிபட்ட மேற்குலக பணயக்கைதிகளை சிரமறுத்துக்கொல்லும் காணொளிகளில் அவற்றை செய்தவராக அடையாளப்படுத்தப்பட்ட “ஜிகாதி ஜான்” யார் என்கிற அடையாளம் தெரியவந்திருக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த இவரது பெயர் மொஹம்மத் எம்வாசி என்று தெரியவந்திருக்கிறது. மேற்கு லண்டனைச் சேர்ந்த இவர் குறித்து பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைப்புகளுக்கு சிலகாலமாகவே தெரிந்திருந்தது. இவரது அடையாளம் மற்றும் பெயர்...
Loading posts...

All posts loaded

No more posts