Ad Widget

66 நாட்கள் கடலில் தவித்தவர் உயிருடன் மீட்பு

சுமார் இரண்டு மாதங்களாக கடலில் தன்னந்தனியாகத் தவித்துவந்த ஒருவர் தற்போது மீட்கப்பட்டுள்ளார். மீன்களை உண்டும் மழை நீரைக் குடித்தும் அவர் உயிரைத் தக்கவைத்திருந்தார். வியாழக்கிழமையன்று நார்த் கரோலினாவுக்கு 200 மைல் தொலைவில் தவித்துக்கொண்டிருந்த லூயிஸ் ஜோடர்ன் என்ற 37 வயது நபரை அந்த வழியாகச் சென்ற ஜெர்மன் நாட்டு டேங்கர் கப்பல் ஒன்று பார்த்தது. அவர்...

கென்ய பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிதாரிகள் தாக்குதல்; உள்ளே பணயக் கைதிகள்

கென்யாவின் வடகிழக்கே முகமூடியணிந்த துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்திய பல்கலைக்கழக மாணவர் விடுதியை பாதுகாப்புப் படைகள் சூழ்ந்துள்ளன. கரிஸ்ஸா என்ற ஊரிலுள்ள பல்கலைக்கழகத்திற்குள் எத்தனை பணயக் கைதிகள் பிடித்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்பது இன்னும் தெரியவில்லை என பொலிசார் கூறுகின்றனர். நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர்...
Ad Widget

கணினி தாக்குதல்களை நடத்துபவர்கள் மீது பொருளாதாரத் தடை – ஒபாமா

அமெரிக்க இலக்குகள் மீது சைபர் தாக்குதல்களை நடத்துபவர்கள் மீதும், அந்தத் தாக்குதல்களால் பலன் அடைபவர்களையும், தண்டிக்க உள்ள பொருளாதாரத் தடைகளை பிரயோகிப்பதை, அந்நாட்டின் அதிபர் ஒபாமா அங்கீகரித்துள்ளார். அதிகரித்துவரும் இத்தகைய சைபர் தாக்குதல்களை, தேசிய அவசர நிலையாக விவரித்துள்ளார். அமெரிக்கவை எதிர்நோக்கியிருக்கும் மிக மோசமான பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு சவால்களுள், இந்த சைபர் தாக்குதல்களும்...

விமானிக்கு பயணி எழுதிய உருக்கமான கடிதம்

இங்கிலாந்தில் இருந்து ஸ்பெயினுக்கு விமானத்தில் சென்ற பெண் ஒருவர் தன்னை பத்திரமாக அழைத்துச் சென்றதற்கு நன்றி தெரிவித்து விமானிக்கு எழுதிய கடிதம் ட்விட்டரில் தீயாக பரவியுள்ளது. பெத்தனி என்ற பெண் இங்கிலாந்தில் இருந்து ஸ்பெயினுக்கு விமானம் மூலம் சென்றுள்ளார். விமானம் ஸ்பெயினில் பத்திரமாக தரையிறங்கியதும் பெத்தனி ஒரு பேப்பரை எடுத்து விமானிக்கு நன்றி தெரிவித்து கடிதம்...

மஹிந்த கூட்டத்தால் நாடு பாதாளத்தில் – சந்திரிகா

போரை வெற்றி கொண்டதாகத் தம்பட்டமடித்த முன்னைய அரசு அதன் பலாபயனை மக்களுக்குப் பெற்றுத்தரவில்லை. நாட்டை பெரும் கடனில் மூழ்கடித்துச் சென்றுள்ளது இவ்வாறு குற்றஞ்சாட்டினார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. "போர் நிறைவுபெற்று ஆறு ஆண்டுகளின் பின்னர் தேர்தல் தோல்வியையடுத்து வீடு சென்ற முன்னைய ஆட்சியாளர்கள் திறைசேரியை வங்குரோத்து நிலையில் விட்டுச்சென்றுள்ளனர். அத்துடன் நாட்டைப் பத்தாயிரம்...

தற்கொலையை தடுக்க புதிய வழி

அன்றாட வாழ்வில் சிக்கலை சந்திக்கும் பெரும்பாலானோர், அதிலிருந்து மீள வழி தெரியாத போது தற்கொலையை தான் தங்களின் ஒரே தீர்வாக தேர்ந்தெடுக்கிறார்கள். இதை தடுக்க கவுன்சிலிங், சேவை மையங்கள் என பல வழிகளை அரசுகள் பயன்படுத்தி வந்தாலும், தற்கொலையை கட்டுப்படுத்த முடியவில்லை. தென்கொரியாவில் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் மாணவர் தற்கொலை சம்பவங்கள், அரசுக்கும், பெற்றோருக்கும் பெரும்...

‘ஜெர்மன்விங்ஸ் விமானம் இரண்டாம் விமானியால் வேண்டுமென்றே வீழ்த்தப்பட்டது ‘

பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் இரண்டாம் விமானி " வேண்டுமென்றே விமானத்தை அழிக்க" விரும்பியதாக பிரெஞ்சுப் புலனாய்வாளர்கள் கூறியிருக்கின்றனர். [caption id="attachment_42430" align="aligncenter" width="625"] டுவிட்டரில் இருந்து எடுக்கப்பட்ட இரண்டாம் விமானி அந்த்ரேயாஸ் லுபிட்ஸ் புகைப்படம். படம் உறுதிசெய்யப்படவில்லை. [/caption] கீழே விழுந்த விமானத்தின் விமானியறை ஒலிப்பதிவுக் கருவியில் இருந்து கிடைக்கப்பெற்ற...

148பேருடன் பயணித்த விமானம் வீழ்ந்து நொருங்கியது

ஆறு விமான ஊழியர்கள் மற்றும் 142 பயணிகள் அடங்கலாக 148பேருடன் பயணித்த விமானம் தெற்கு பிரான்ஸில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பிரான்ஸின் ஐ டெலி செய்தி வெளியிட்டுள்ளது. பார்ஸிலோனாவிலிருந்து டுசெல்டோர்ஃப்க்கு சென்ற லுஃப்தான்ஸா விமான சேவையின் இணை நிறுவனமான ஜேர்மன்விங்க்ஸ் விமான சேவையின் ஏ 320 ரக பயணிகள் விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது. தெற்கு பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலையிலேயே இந்த...

சிங்கப்பூரின் தேசத் தந்தை லீ குவான் யூ காலமானார்!

சிங்கப்பூரின் தேசத் தந்தை எனப் புகழப்படும் லீ குவான் யூ இன்று திங்கட்கிழமை அதிகாலை மரணமானார் என அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் அறிவித்தது. 91 வயதான லீ குவான் யூ கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் அவர் இறந்தார் என அந்நாட்டின் ஊடகம் ஒன்று செய்தி...

நோபல் பரிசு பெற்ற தமிழ் விஞ்ஞானி ராயல் சொசைட்டியின் தலைவராகிறார்

பிரிட்டனின் பிரசித்தி பெற்ற அறிவியல் கழகமான, ராயல் சொசைட்டியின் அடுத்த தலைவராக, தமிழ்நாட்டில் பிறந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானியான, வெங்கி ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார். வெங்கி ராமகிருஷ்ணன் தமிழ் நாட்டின் சிதம்பரத்தில் பிறந்தவர். பரோடா பல்கலைக் கழகத்தில் இயல்பியல் துறையில் பட்டம் பெற்ற இவர், பின்னர் அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ்...

சிங்கப்பூரின் நிறுவுனரும் முதல் பிரதமருமான லீயின் உடல்நிலை கவலைக்கிடம்!

சிங்கப்பூரின் நிறுவுனரும் முதல் பிரதமருமான லீ குவான் ஜியூ வின் உடல்நிலை தொடர்ந்தும் மோசமான நிலையில் உள்ளதாகவும் தற்போதும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 91 வயதாகும் லீ சிங்கப்பூர் பொது வைத்தியசாலையில் கடந்த பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து ஆறு வாரங்களாக...

உலகின் சிறந்த ஆசிரியருக்கு 1 மில்லியன் பரிசு

உலகின் சிறந்த ஆசிரியராக அமெரிக்காவை சேர்ந்த நான்ஸி அட்வேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கிடைக்கும் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை தான் உருவாக்கிய பள்ளியின் வளர்ச்சிக்கே கொடுக்க போவதாக அறிவித்துள்ளார். ஆசிரியர் பணியை சிறப்பிக்கும் வகையிலும், அதன் மதிப்பை உயர்த்தும் நோக்கத்துடனும் ‘உலக ஆசிரியர் விருது’ உருவாக்கப்பட்டு, இந்த ஆண்டு முதல் சிறந்த ஆசிரியர்களை...

லாகூரில் கிறிஸ்தவ தேவலாயங்கள் மீது தாக்குதல்: 14 பேர் பலி

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இரண்டு கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளில் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தபோதே இத்தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இத்தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் என்று கருதப்படும் இத்தாக்குதல்கள், லாகூர் நகரில் கிறிஸ்தவ மக்கள் செறிவாக வாழும் புறநகர்ப் பகுதியான யௌஹனாபாதில் நடைபெற்றுள்ளது....

மனுஸ் தீவு முகாமில் அவலநிலை: ஊடகவியலாளர் ஆய்வு

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரச் சென்றவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பப்புவா நியு கினீயின் மனுஸ் தீவு அகதி முகாமில் மிகவும் கஷ்டமான சூழ்நிலை காணப்படுவதாக, அங்கு சென்று தகவல் சேகரித்துள்ள ஊடகவியலாளர் இயய்ன் பிளாக்வெல் கூறுகிறார். மனுஸ் தீவில் உள்ள இந்த அகதிகள் தடுப்பு முகாமில் ஆயிரத்துக்கும் அதிகமான அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அது சுகாதாரக்...

இந்தியாவின் மகள் ஆவணப்படம் அமெரிக்காவில் திரையிடப்பட்டது

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த மருத்துவ மாணவி கற்பழிப்பு தொடர்பாக ‘இந்தியாவின் மகள்’ என்ற பெயரில் ஆவணப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியின் பேட்டியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் இந்த ஆவணப்படம் நேற்று திரையிடப்பட்டது....

சிரியாவில் உளவாளியை சுட்டுக் கொல்லும் 10 வயது சிறுவன்!

சிரியாவில் இஸ்ரேல் நாட்டிற்கு உளவு பார்த்ததாகக் கூறி பாலஸ்தீனியர் ஒருவரை, 10 வயது சிறுவன் சுட்டுக் கொலை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனிய நாட்டை சேர்ந்த முகமது சயீது இஸ்மாயில் முசாலாம் என்ற 19 வயதான இளைஞர், கடந்த 2014 ஆம் ஆண்டு சிரியாவுக்குச் சுற்றுலா செல்வதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டு ஐஎஸ் தீவிரவாத...

பிரஞ்சு விளையாட்டு பிரபலங்கள் அர்ஜெண்டினா விபத்தில் பலி

அர்ஜெண்டினாவில் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட சம்பவத்தில், பிரான்சின் முன்னாள் முன்னணி விளையாட்டு நட்சத்திரங்கள் மூன்று பேர் உட்பட பிரஞ்சு பிரஜைகள் எட்டு பேர் உயிரிழந்திருப்பது தன்னை தாளாத் துயரத்தில் தள்ளியிருப்பதாக பிரஞ்சு அதிபர் ஃபிரான்ஸுவா ஒல்லாந்த் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் பலரும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர். தொலைதூரத்து இடங்களில் பிரபலங்கள் கஷ்டப்பட்டு உணவு...

கேட்கும் திறன் குறைபாடுள்ளவருக்கு உயரிய இசை விருது

உலகளவில் இசைத்துறையில் நோபல் பரிசு என்று கருதப்படும் போலார் மியூசிக் விருது இந்த ஆண்டு இரண்டு பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்தின் பிரபல தாள வாத்தியக் கலைஞரான டேம் எவ்லின் க்ளெனி மற்றும் அமெரிக்காவின் நாட்டுப்புற இசைக் கலைஞர் எமிலோ ஹாரிஸ் ஆகியோரே இந்த ஆண்டுக்கான விருதுக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். [caption id="attachment_41671" align="aligncenter" width="2400"] எவ்லின் க்ளெனி[/caption]...

சிட்னியில் இந்தியப் பெண் குத்திக்கொலை: இருநாடுகளும் கண்டனம்

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் இந்தியப் பெண் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டமையை இரண்டு நாடுகளின் அதிகாரிகளும் கண்டித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மிக்பெரிய நகரமான சிட்னியில் பூங்கா ஒன்றில் பிரபா அருண் குமார் என்ற பெண் சனிக்கிழமை குத்திக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவங்கள் தொடர்பில் ஆஸ்திரேலியப் பொலிஸார் யாரையும் இதுவரைக் கைதுசெய்யவில்லை. ஆனால், இனத்துவேஷத்துடன் சம்பந்தப்பட்ட தாக்குதலாக இதனைக் கருதுவதற்கான...

சூரிய சக்தியின் துணையுடன் உலகம் சுற்றும் விமானம்

சூரியசக்தியில் இயங்கும் விமானம் ஒன்று உலகைச் சுற்றிவரும் அதன் ஐந்து மாதப் பயணத்தில் முதல்கட்டத்தில் உள்ளது. ஒரு துளி எரிபொருளையும் பயன்படுத்தாமல் தனியே சூரிய சக்தியை மட்டுமே கொண்டு இந்த விமானம் இயங்கக்கூடியது. சோலார் இம்பல்ஸ் டூ- என்ற பெயருடைய இந்த விமானம் தனியொரு நபர் மட்டுமே அமர்ந்து பயணிக்கக்கூடியது. அபு தாபியிலிருந்து ஒமான் நோக்கி...
Loading posts...

All posts loaded

No more posts