Ad Widget

உலகின் இளம் பணக்காரர்கள் பட்டியலில் மார்க் ஜூகெர்பெர்க் முதலிடம்

உலகின் இளம் பணக்காரர்கள் பட்டியலில் முகநூல் நிறுவனரான மார்க் ஜூகெர்பெர்க் முதலிடம் பெற்றுள்ளார். உலக அளவில் 35 வயதுக்கு உள்பட்ட பணக்காரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Mark-Zuckerberg-facebook

அதில் பேஸ்புக் நிறுவனர்களில் ஒருவரான மார்க் ஜூகெர்பெர்க் முதலிடம் பெற்றுள்ளார். “வெல்த்-எக்ஸ்” என்ற பன்னாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் அவருக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

அவரது சொத்து மதிப்பு 41.6 பில்லியன் டாலர். அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 2.72 லட்சம் கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.(இலங்கை மதிப்பில் சுமார் 5545280000.00)

இந்தப் பட்டியலில் முகநூலின் மற்றொரு நிறுவனர் டஸ்டின் மோஸ்கோவிட்ஸ் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூபாய் 60,000 கோடியாகும். இளம் பணக்காரர்கள் பட்டியலின் முதல் 20 இடங்களில் பெண்கள் 6 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts