Ad Widget

கனடாவில் இலங்கையர்களின் குடியுரிமை பறிபோகுமா?

கனடாவின் புதிய குடிவரவு, குடியகல்வு சட்டத்தினால் பல இலங்கையர்கள் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர்.

இதன்படி ஒரு இலட்சத்து 40,000 இலங்கையர்கள் கனேடிய குடியுரிமையை இழக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சட்டத்தின் பிரகாரம் கனடாவில் பிறந்தவர்கள் தவிர, ஏனையவர்களுக்கான குடியுரிமை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, அவர்கள் இரண்டாம் நிலை பிரஜைகளாக நடத்தப்படுவர்.

கனேடிய மக்களை பாதுகாப்பதே இந்த புதிய சட்டத்தின் நோக்கம் என கூறப்படுகின்றது.

இதேவேளை சட்டம் இயற்றுவது அவர்களது உரிமை என்பதால் வௌிவிவகார அமைச்சுக்கு கருத்து சொல்ல எந்த சுதந்திரமும் இல்லை என இலங்கை வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பிற நாடுகளில் பிரஜா உரிமை பெற்றுள்ள இலங்கையர்கள் யாராயினும் நாட்டுக்கு திரும்ப முடியும் எனவும், ஆனால் அதற்கு நாம் கட்டாயப்படுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts