Ad Widget

தென் ஆப்ரிக்காவில் காந்தி சிலை மீது பெயிண்ட் ஊற்றப்பட்டது

தென் ஆப்ரிக்காவில் மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தபட்டுள்ளது தொடர்பில் ஒருவர் வழக்கை எதிர்கொள்ளவுள்ளார்.

gandhi

தீய எண்ணத்துடன் அவர் காந்தியின் சிலையை சேதப்படுத்தினார் எனக் கூறப்படுகிறது.

ஜொகனஸ்பர்க் நகரிலுள்ள அவரது சிலையின் மீது கடந்த சனிக்கிழமை வெள்ளை பெயிண்ட் ஊற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் ஐந்து லிட்டர் பெயிண்ட் வாளியும், ‘காந்தி போக வேண்டும்’ என்று எழுதப்பட்டிருந்த பதாதைகளும் இருந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

காலனித்துவ ஆட்சிகாலத்தில் தென் ஆப்ரிக்கா இருந்தபோது நிறுவப்பட்ட பல சிலைகள் இப்போது அங்கு சேதப்படுத்தப்பட்டுள்ளன.

கேப் டவுண் பல்கலைக்கழகத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய செயற்பாட்டாளரான சிசில் ரோட்ஸின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள சிலை அகற்றப்பட வேண்டும் எனும் போராட்டம் வெற்றி பெற்று, அவரது சிலை அங்கிருந்து அகற்றப்பட்ட பிறகு, காந்தி உட்பட பல சிலைகள் அங்கு சேதமாக்கப்பட்டுள்ளன.

Related Posts