Ad Widget

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்

நேபாளத்தில் மற்றுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 6.7 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. நேபாளம் தெற்கு கோடாரி எனுமிடத்திலேயே இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இதேவேளை, நேபாளம், காத்மண்டிலிருந்து 50 மைல் தூரத்தில் ஆறுமைல் ஆழத்துக்கு அடியில் 7.9 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுமார் 2,000 க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts