- Friday
- August 21st, 2026
ஆவர்த்தன அட்டவணையில் புதிதாக நான்கு இரசாயன மூலகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்த அட்டவணையின் ஏழாவது வரிசை பூர்த்தியாகி இருப்பதோடு உலகெங்குமுள்ள அறிவியல் பாடப்புத்தகங்கள் புதுப்பிக்கப்பட வேண்டி ஏற்பட்டுள்ளது. இந்த மூலகங்கள் ஜப்பான், ரஷ்யா மற்றும் அமெரிக்க நாட்டு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2011 ஆம் ஆண்டு 114 மற்றும் 116 மூலகங்கள் இணைக்கப்பட்ட பின்னர் ஆவர்த்தன...
வடகொரியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு அதி பயங்கரமான ஹைட்ரஜன் குண்டை வெற்றிகரமாக பரிசோதித்ததே காரணம் என்ற பகீர் தகவலை வட கொரியா வெளியிட்டுள்ளது. வடகொரியாவின் அணு பரிசோதனைக் கூடம் அருகே இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. கில்ஜு நகரின் வடமேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் புங்கேரி என்ற பகுதியில் அமைந்துள்ள அணு பரிசோதனை கூடத்தின் அருகே...
அமெரிக்காவில் பெருகிவரும் துப்பாக்கி கலாசாரத்தால் அங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. நிலைமையை மாற்ற துப்பாக்கி விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், துப்பாக்கி வன்முறையை குறைப்பது தொடர்பாக ஒபாமா நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த உரையில் அவர் “ 3 ஆண்டுகளுக்கு முன் சுட்டுக்கொல்லப்பட்ட 20 பள்ளி குழந்தைகளை நினைக்கும் போது எனக்கு பைத்தியம்...
துருக்கியின் ஏகியேன் கடற்கரையில் குறைந்தது 34 குடியேறிகளின் உடல்கள் கரையொதிங்கியுள்ளதாக துருக்கிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் பல சிறார்களும் அடங்குவர் எனக் காவல்துறையினர் கூறுகின்றனர். இந்தக் குடியேறிகள் இரண்டு தனித்தனி படகுகளில் கிரேக்கத் தீவான லெஸ்போஸை அடைய முயற்சித்த போது, மோசமான வானிலை காரணமாக அந்தப் படகுகள் கவிழ்ந்தன என துருக்கிய ஊடகங்கள் கூறுகின்றன. துருக்கிய...
இங்கிலாந்தின் சச்சக்ஸ் என்ற உள்நாட்டு கவுண்டி கிரிக்கெட் அணி வீரர் மேத்யூ ஹாப்டன் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார், அவருக்கு வயது 22. மேத்யூ ஹாப்டன் கடந்த 2014ம் ஆண்டு, சச்சக்ஸ் அணிக்காக விளையாட ஆரம்பித்தார். வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வந்தா். இந்நிலையில், அவர் இறந்துவிட்டதாக இங்கிலாந்து (மற்றும் வேல்ஸ்) கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது....
சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமத்திய ரேகையின் வடக்கே 44.81 டிகிரி கோணத்திலும், கிழக்கே 129.95 டிகிரி கோணத்திலும் பூமியின் அடியில் சுமார் 580 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று அதிகாலை உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு...
ஸ்மார்ட் போன் யுகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பது தொடர்கதையாகி வரும் நிலையில், தனக்கு இழைக்கபடும் அநீதிக்காக அதே பெண்கள் ஆவேசமாக பழிவாங்கும் செய்திகளும் அவ்வப்போது வெளியாகி வருகின்றது. தென் ஆப்பிரிக்காவின் புமலங்கா நகரைச் சேர்ந்த ஹம்ரி கோசா(25) என்ற வாலிபன் சில தினங்களுக்கு முன், தான் வழக்கமாக செல்லும் உள்ளூர்...
2016 ம் ஆண்டில் எல் நினோ (கடும் வெப்பம்) சுழற்சியால், உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் பசியாலும், கடுமையான நோயாலும் பாதிக்கப்படுவார்கள் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். வரும் ஆண்டில் உலகம் முழுவதும் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. புவியின் சுழற்சி காரணமாக எல் நினோ (கடும் வெப்பம்), லா நினா...
ஐ.எஸ். தீவிரவாதிகள் 'பாலியல் பலாத்காரம் செய்வதற்கு முன்னதாக பிரார்த்தனை செய்ய கட்டாயப்படுத்தினர்’ என்று அவர்களிடம் பாலியல் அடிமையாக சிக்கி உயிர்பிழைத்த பெண் தெரிவித்துஉள்ளார். சிரியா, ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களிடம் சிக்கிய பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் அடிமைகள் ஆக்கி கொடுமை செய்து வருகின்றனர். அவர்களிடம் சிக்கி உயிர்பிழைத்த பெண்கள் தெரிவிக்கும் தகவலானது...
புதிய ஆண்டில் உலகில் தமது உரிமைகளுக்காகப் போராடும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்விலும் முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையுடனும் ஈழத்தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முன்னோக்கி நகரும் என்ற எதிர்பார்ப்புடனும் நாம் இப் புதிய ஆண்டை வரவேற்றுக் கொள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அவர்கள் தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார். கடந்த...
டுபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 63 அடுக்கு மாடி நட்சத்திர ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புத்தாண்டு பிறப்புக் கொண்டாட்டத்தை ஒட்டி வாணவேடிக்கை நடக்க இருந்த இடத்துக்கு அருகிலேயே இந்தக் கட்டடம் உள்ளது. அட்ரஸ் டவுன்டவுன் ஹோட்டல் என்ற இந்த 63 -மாடிக் கட்டடம், உலகின் உயரமான கட்டடமான பர்ஜ் கலீஃபாவுக்கு அருகே உள்ளது....
மிகப்பெரிய இணையவழித் தாக்குதல் காரணமாக பிபிசியின் அனைத்து இணைய சேவைகளும் வியாழனன்று காலை பாதிக்கப்பட்டன. வியாழனன்று லண்டன் நேரம் காலை ஏழு மணிக்கு இந்த பிரச்சனை ஆரம்பித்தது. அந்த சமயத்தில் பிபிசி இணைய பக்கங்களுக்கு வந்த பார்வையாளர்களால் குறிப்பிட்ட பக்கங்களை பார்க்கவோ, படிக்கவோ முடியவில்லை. மாறாக Error message எனப்படும் குறிப்பிட்ட இணைய சேவையை நீங்கள்...
ஃபேஸ்புக் தனது பங்குகளை 2012ஆம் ஆண்டு பங்குச் சந்தையில் விற்பனைக்கு வெளியிடுவதற்கு முன்பு பொதுமக்களுக்கு தவறான தகவலை கொடுத்ததற்காக அதன் பங்குதாரர்களில் இரு குழுவினர் அதன் மீது சட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று அமெரிக்க நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்ததை அடுத்து அந்த நிறுவனம் இரண்டு வழக்குகளை எதிர்கொள்கிறது. தமது எதிர்கால வளர்ச்சி குறித்த கவலைகளை ஃபேஸ்புக்...
வடமேற்கு பாகிஸ்தான் நகரான மர்தானில் நடத்தப்பட்ட தற்கொலைகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டதாகவும் பத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அடையாள அட்டை பெறுவதற்காக பொதுமக்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒரு அரசு வளாகத்தின் வாயிலில் தற்கொலை குண்டுதாரி இரு சக்கர வாகனத்தை மோதி தாக்குதலை நடத்தியுள்ளார். இறைவன் பெரியவன் என்று கத்தியவண்ணம் அந்த...
அவுஸ்திரேலிய விக்டோரியா மாநிலத்தில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயில் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக வெளிநாட்டுச் செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன. இதில் பிரபல சுற்றுலா நகரங்களான வைரிவர் மற்றும் செபரேஷன் கிரீக் ஆகிய இரண்டு நகரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயணிக்கும் கிறேட் ஓசோன் என்ற வீதியும் இந்த காட்டுத்தீயால்...
நைஜீரியாவில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் இங்குள்ள ஒரு எரிவாயு நிரப்பும் தொழிற்சாலையில் கியாஸ் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் தீயில் சிக்கி நூற்றுக்கும் அதிகமானோர் கரிக்கட்டைகளாக கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு நைஜீரியாவில் உள்ள அனெம்ப்ரா மாநிலத்தின் நேவ்வி பகுதியில் கிறிஸ்தவ மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில்...
விண் கற்களை விட வால் நட்சத்திரங்களால் பூமிக்கு ஆபத்து என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்ணில் சுற்றித்திரியும் விண் கற்களால் பூமிக்கு ஆபத்து ஏற்படும் என்று அடிக்கடி அறிவிக்கப்படுகிறது. ஆனால் அதைவிட தொலை தூரத்தில் உள்ள வால் நட்சத்திரங்களால் பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இங்கிலாந்து பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வாளர் குழு...
சவுதி அரேபியாவில் ஆணொருவருடன் தகாத உறவைப் பேணியதாக குற்றம்சாட்டப்பட்டு கல்லால் அடித்து கொல்லுமாறு, இலங்கைப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை, சிறைத் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட மேன்முறையீட்டை அடுத்தே, அந்த நாட்டு அரசாங்கத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, பிரதி வௌிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார். இதன்படி குறித்த பெண் மூன்று...
2015-ம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டத்தை 24 வயதான, பிலிப்பைன்ஸ் நாட்டின் அழகி பியா அலோன்ஜோ உர்ட்ஸ்பட்ச் வென்றுள்ளார். உலக அழகி போட்டியில் மிஸ் கொலம்பியா அரியட்னா குடியர்ரெஸ் இரண்டாவது இடத்தினையும், மிஸ் யுனிவர்ஸ் யு.எஸ்.ஏ ஒலிவியா ஜோர்டான் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். அமெரிக்காவின் லாஸ் வேகஸ் பகுதியில் நேற்று நடந்த 65வது உலக அழகிப்...
இந்தோனேஷியாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேஷியாவின் உள்ள போர்னியோ தீவுப்பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால், பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் ஏதும் இல்லை. சுனாமி ஏற்படுவதற்கான...
Loading posts...
All posts loaded
No more posts
