Ad Widget

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.

indonesia-map

இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். உயிர்ச் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்தத் தகவலும் இல்லை.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. உள்ளூர் நேரப்படி இன்று நள்ளிரவு 12.44 மணியளவில் டைமோர் மாகாணத்தில் உள்ள அலோர் தீவை மையமாக கொண்டு 14.3 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் டிலி என்ற இடத்தின் மேற்கு-வடமேற்கில் 77 கிலோமீட்டர் தூரத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் கிழக்கு டைமோர் மாகாணத்தில் உள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

Related Posts