- Friday
- August 21st, 2026
வடக்கு இத்தாலியில் உள்ள சிறிய நகரம் ஒன்று, அந் நகரத்தில் 1980 க்கு பிறகு பிறந்துள்ள முதல் குழந்தையின் வரவை மகிழ்வுடன் கொண்டாடி வருகின்றனர் அந்நாட்டு மக்கள். பீட் மாண்ட் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒஸ்டானா என்ற அந்த நகரின் மேயர், இந்த குழந்தையின் வரவு, தமது சிறு நகரின் ஒட்டுமொத்த சமூகத்தின் கனவு நனவானதை குறிப்பதாக...
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டுக்காக இலங்கையர் ஒருவருக்கு 18 மாத ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்து ஜேர்மனிய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. 53 வயதான ஜீ.யோகேந்திரன் என்ற இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜேர்மனிய பிரஜைக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஓர் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே கருதப்படுகின்றது....
சர்வதேச நாடுகளை அச்சுறுத்திவரும் சைகா வைரஸ் பாதிப்பிற்கு, அமெரிக்காவில் மட்டும் 4 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து ஆய்வு அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சைகா வைரஸ், கொசு மூலமாகவே பரவிவருகிறது என்று தெரியவந்த நிலையில், உடலுறவின் மூலமும் இந்த வைரஸ் தொற்று பரவுவதாக, டெக்சாஸ் மாகாணத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகில் பல நாடுகளில் வெகு வேகமாக பரவி பரவும் ஸிகா வைரஸ் காரணமாக உலக சுகாதார நிறுவனம் (WHO) சர்வதேச அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பிற்கு அமெரிக்காவில் மட்டும் 4 மில்லியன் பேர் ஆளாகியிருப்பதாக மதிப்பிடபட்டுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் (WHO), ஸிகா வைரஸ் குறித்தும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...
கொலம்பியாவில் சிக்கா வைரஸ் தொற்றிய 20,000 பேரில் 2000 பேர் கர்ப்பினிப் பெண்கள் என்று அந்நாட்டு சுகாதார நிறுவனம் அறிவித்துளள்து. நுளம்பினால் பரவும் இந்த வைரஸ் பாதிப்பால் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலையுடன் பிறப்பது மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிகா வைரஸ் மிகவும் வேகமாக பரவுவதாக எச்சரித்திருக்கும் உலக சுகாதார அமைப்பு இந்த ஆண்டில் 4 மில்லியன்...
ஐக்கிய அரபு ராஜ்சியத்தில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய இலங்கைப் பெண் ஒருவர், மற்றமொரு பணியாளரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டு பணிப் பெண்ணையே அவர் கொலைசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புஜாராஹ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமிரேட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வாக்குவாதத்தை அடுத்து, இரண்டு பேருக்கும் இடையிலான மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது....
பிரேஸிலை மோசமாகத் தாக்கிக்கொண்டிருக்கும் ஸீகா (zika) வைரஸானது (கொசுவினால் (நுளம்பு) பரவி, பிறக்கும் குழந்தைகளில் குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடியது) தற்போது அமெரிக்காவையும் தாக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தடுக்கும் முகமாக இதனை அழிப்பதற்குரிய மருந்தைக் கண்டுபிடிப்பதற்கு விரைந்து செயற்படுமாறு வைத்தியர்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார். வெப்பமான காலப்பகுதியில் இந்நோய் அமெரிக்கா முழுவதும் பரவும் ஆபத்து அதிகமாக...
ஆரோக்கியமற்ற உணவை சந்தைப்படுத்துவதை உலக அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சிறார்கள் மோசமாக குண்டாவதைத் தடுக்க சர்க்கரை கலந்த குடிபானங்கள் மீது அரசுகள் வரிவிதிப்பது பற்றி பரிசீலிக்கவேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குழந்தைப் பருவத்தில் உடல் பருமனாதலை குறைப்பதற்கான முக்கியத்துவம் குறித்த அறிக்கை ஒன்றில் உலக சுகாதார நிறுவனம் இந்த பரிந்துரைகளை முன்...
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 பதிவாகியிருப்பதாக அமெரிக்க நிலவியல் ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் ஏதுமில்லை.
இலங்கையுடன் தொழில்நுட்ப ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள எதிர்பார்ப்பதாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் ஜோன் பிலிப் கோடீஷ் கூறியுள்ளார். உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் இதனை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்படுத்தப்படவுள்ள ஒப்பந்தத்தினூடாக, இலங்கையின் அபிவிருத்திக்காக புதிய சந்ததியினருக்கு தொழில்நுட்பத்தை...
இங்கிலாந்தில் மாணவன் ஒருவன் ஆங்கில பாடத்தில் தவறாக எழுதிய ஒரு வார்த்தையால் பொலிசார் அம்மாணவனின் வீட்டிற்கு சென்று சோதனையிட்டுள்ளனர். இங்கிலாந்தின் Lancashire என்ற இடத்தில் உள்ள பள்ளியில் பயின்று வந்த 10 வயது மணவன், தனது ஆங்கில பாடத்தில் நான் மாடி வீட்டின் வசிக்கிறேன்(Terrace house) என்று எழுவதுதற்கு பதிலாக நான் தீவிரவாத வீட்டில் வசிக்கிறேன்...
லிபியாவில் கொள்ளையடித்த 3 பேரை பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுக்கொன்ற புகைப்படங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை அளித்து வருகின்றனர். இந்நிலையில் லிபியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் பொதுமக்கள் முன்னிலையில் 3 பேரை சுட்டுக்கொன்றுள்ளனர். கொள்ளை செயலில் ஈடுபட்டது, இஸ்லாமிய மதத்தில் இருந்து...
பாகிஸ்தானின் பசா கான் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த 3 ஆயுததாரிகளால் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தாக்குதல்களில், குறைந்தது 15பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பல்கலைக்கழகத்தில் சுமார் 3,000பேர் இருப்பதாகவும் தப்பிவந்தோரின் கருத்தின்படி சுமார் 60பேர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச விண்வெளி மையத்தில் பூத்துள்ள மலரின் படத்தை விண்வெளியில் சுற்றி வரும் விஞ்ஞானி ஸ்காட் கெல்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கடந்த நவம்பர் மாதம் மலர்கள் வளர்ப்பிற்கான சோதனையை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெற்றிக்கிரமாக சோதனை செய்தது. இந்நிலையில் சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக 250...
இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் நேற்று காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்று இந்தோனேஷியாவிற்கான இலங்கைத் தூதுவர் தர்ஷன பெரேரா கூறியுள்ளார். இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் சுமார் 130 இலங்கையர்கள் வசிப்பதாகவும் அவர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக எந்த தகவலும் இதுவரை இல்லை என்றும் அவர் எமது செய்திப்பிரிவிடம் தெரிவித்தார். இந்தோனேஷியாவின் தலைநகர்...
ஜப்பானின் ஹொக்காய்டோ தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.7 ஆக பதிவாகியிருந்தது. ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ளது ஹொக்காய்டோ தீவு. அந்த தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.7 ஆக பதிவாகியிருந்தது. ஷிசுனாய் நகரில் இருந்து தென்கிழக்கில் 51 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை...
பேஸ்புக் பிறந்த நாளான பிப்ரவரி 4-ம் தேதியை நண்பர்கள் தினமாக கொண்டாடும்படி பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் “பிப்ரவரி 4-ம் தேதி பேஸ்புக்கின் 12-வது பிறந்த நாள். இந்த ஆண்டு விழாவானது ஒரு சமூகமாக இணைந்து நாம் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்பதை நினைவுப்படுத்தும்...
போன் செய்த 15 நிமிடங்களில் வீடு தேடிவரும் பீட்ஸாவின் பின்னணியில் பாலின மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான மூலக்கூறுகள் இருப்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பீட்ஸாவில் உள்ள வெண்ணை போன்ற வழவழப்பான பொருட்கள் அவற்றை பேக்கிங் செய்து எடுத்துச்செல்ல பயன்படுத்தப்படும் கார்ட்போர்ட் பெட்டிகளின் வெளிப்பக்கத்தில் கசியாமல் இருக்க ஒருவகையான இரசாயனப்பூச்சு அட்டைப் பெட்டிகளில் பூசப்படுகிறது. அவ்வகையிலான அட்டைப்...
துபாயில் ஆளில்லாத வீடுகளில் நுழைந்து கொள்ளையிட்டதாக கூறப்படும் ஐந்து இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை துபாயின் அல் பார்ஷா (Al Barsha) பகுதியிலுள்ள ஆடம்பர வீடொன்றில் கொள்ளையர்கள் புகுந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த வீட்டின் உரிமையாளருக்கு தெரிவிக்கப்பட்டு அவர் வந்து பார்த்த வேளை, 250,000 திர்ஹாம் பெறுமதியான கடிகாரங்கள் மற்றும் 100,000 திர்ஹாம் பணம்...
மதுபானம் அருந்துவது தொடர்பிலான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பிரிட்டன் வெளியிட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக குடிப்பதால் உடல் நலத்துக்கு ஏற்படும் தீங்குகளை குறைக்கும் நோக்கில், இந்தப் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்த அளவுக்கு மதுபானத்தை அருந்துவது, பெரிய அளவில் ஆபத்துக்களை ஏற்படுத்தாது என்பது குறித்து அந்த வழிகாட்டல் கையேடு கூறுகிறது. மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்கு மதுபானத்தை அருந்துவது...
Loading posts...
All posts loaded
No more posts
