Ad Widget

பாலியல் படங்களை பார்த்தமை, வாகனங்களின் டயர்கள் மற்றும் பெட்ரோலை திருடியமைக்காக ஐ.நா. சபை ஊழியர்கள் பணி நீக்கம்!!

ஐ.நா சபை ஊழியர்கள் பாலியல் படங்களை பார்ப்பது, வாகனங்களின் டயர்கள் மற்றும் பெட்ரோலை திருடுவது போன்ற குற்றங்களில் ஈடுபடுவது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐ.நா சபையின் தலைமையகம் நியூயோர்க்கில் செயல்பட்டு வருகிறது, இதன் கிளைகளில் 188 நாடுகளிலிருந்து 45,000 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.

இந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கிடையே நடந்த ஒழுங்கீனங்கள் மற்றும் பணி நீக்கங்கள் தொடர்பான அறிக்கைகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும்.

கடந்த 2014 -ம் ஆண்டு யூலை 1-ம் திகதி முதல் 2015 யூன் 30-ம் திகதி வரை தவறிழைத்ததால், 60 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 ஊழியர்கள் பாலியல் படங்களை பார்த்ததோடு மட்டுமல்லாமல் அதனை சக ஊழியர்களுக்கு தங்களது மின்னஞ்சல் வழியாக அனுப்பியுள்ளனர், இதனால் அவர்கள் 4 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, அலுவலக வாகனத்தின் டயர்கள் மற்றும் பெட்ரோல் திருட்டி ஈடுபட்ட குற்றத்திற்காக 2 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், மேலும் அலுவலக முத்திரைகளை திருடி விற்பது போன்ற குற்றத்திற்காகவும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.நா. சபை ஊழியர்களிடையே ஒழுங்கீனங்கள் அதிகரித்து வருவதால், விதிகளுக்கு புறம்பாக யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.நா. சபையின் இணையதளத்தில் அதன் செயலாளர் பான் கீ மூன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts