Ad Widget

மற்றுமொரு ரஷ்ய விமானம் விபத்து – பலர் பலி

தெற்கு சூடானின் தலைநகர் ஜுபா விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட ரஷ்ய தயாரிப்பு விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற சிறிது நேரத்திலேயே விமானம் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 40க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக வௌிநாட்டு செய்திகள் கூறுகின்றன.

ஏனையவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

ரஷ்ய தயாரிப்பு சரக்கு விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

Related Posts