- Monday
- June 29th, 2026
வடக்கு மாகாணத்தில் 22ஆயிரம் பொருத்து வீடுகள் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்துக்கான வீட்டுத் திட்டம் தொடர்பாகக் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடமாகாணத்திலிருந்து 97 ஆயிரம் பொதுமக்கள் பொருத்து வீடுகளுக்கான கோரிக்கையை முன்வைத்து கடிதம் மூலம் தனக்கு அறிவித்தமையை அடுத்தே 22ஆயிரம் வீடுகளை...
அண்மையில் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட தையிட்டி கணையவில் பிள்ளையார் ஆலயத்திலிருந்த சாமி விக்கிரகங்கள் சில நாட்களில் காணமற்போயுள்ளன. மேலும் சுவாமி வாகனங்கள் , மணிகள் பெறுமதியான பொழிகற்கள் என்பனவையும் ஆலயத்திலிருந்து திருடப்பட்டுள்ளன. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1990 ஆம் ஆண்டு வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் கடந்த 1998 ஆம் ஆண்டு செப்ரெம்பர்...
வலிகாமம் வடக்கு பகுதியிலிருந்து தாம் இடம்பெயர்ந்த போது தங்களுடைய வீடுகள் நிலம் எவ்வாறு காணப்பட்டதோ அதே போன்று மீண்டும் வழங்கப்படவேண்டும் என வலிகாமம் வடக்கு தையிட்டி- வள்ளுவர் புரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமது காணிகளை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் மீண்டும் மக்களிடம் எவ்வாறான நிலையில் கையளிக்கின்றார்கள் என்பதை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் காணி உரிமையாளர்களுடன் நேரடியாக...
வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து கடந்த 31ஆம் திகதி ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்டு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான 460 ஏக்கர் காணிகளை இன்று வெள்ளிக்கிழமை பொது மக்கள் சென்று பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது. காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்த பாதுகாப்பு வலய எல்லையில் மக்கள் அழைக்கப்பட்ட நிலையில் அங்கு இராணுவத்திரால்...
வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து கடந்த 31ஆம் திகதி ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்டு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான 460 ஏக்கர் காணிகளை நாளை வெள்ளிக்கிழமை பொது மக்கள் சென்று பார்வையிட அனுமதி வழங்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கீரிமலை வீட்டுத்திட்டத்திதை பயனாளிகளிடம் கையளித்த அதேவேளை வலி.வடக்கு உயர்பாதுகாப்பு...
முல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ள பெண்களை இராணுவம் தொடர்ச்சியாாக அச்சுறுத்தி வருவதாக கேப்பாப்புலவு கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் நேற்று மாலை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேப்பாப்புலவுக்கு நேரில் சென்று மக்களுடன் கலந்துரையாடிய போதே...
யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு புனர்வாழ்வு அளித்தல், அவர்களை மீள் குடியேற்றம் செய்தல் போன்ற விடயங்கள் மத்திய அரசாங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட விடயமாக இருக்கின்றதே தவிர, அவற்றை மாகாண சபையினால் செயற்படுத்த முடியாது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் புரிந்துக்கொள்ள வேண்டுமென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில், முஸ்லிம்களின்...
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலிவடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடுகளை கையளிக்கவுள்ளதுடன் வலிவடக்கில் மேலதிகமாக 460ஏக்கர் காணிகளையும் பொதுமக்களிடம் மீள வழங்கவுள்ளார். கடந்த 26வருடங்களுக்கு முன்னர் வலிவடக்கு பகுதியில் இருந்து குடாநாட்டில் அப்போது காணப்பட்ட அசாதாரண நிலமையினால் மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக நலன்புரி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியிருந்தனர். இவ்வாறான...
“பொதுவாக வடமாகாணத்தின் சகல மாவட்டங்களிலிருந்தும் குறிப்பாக, வன்னி மாவட்டத்திலிருந்து, யுத்த சூழ்நிலையில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு, வீடமைப்புத் திட்டங்களில் வீடுகளை வழங்கும் போது, அநீதியும் பாரபட்சமும் இழைக்க இடமளிக்கப்பட மாட்டாது” என புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் உறுதியளித்துள்ளார். இவ்விரு...
நாளைக்கு யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள மைத்திரிபாலசிறிசேன, பலாலி இராணுவ கொன்டோன்மன்ட் பிரதேசத்தில், 454 ஏக்கர் பிரதேசத்தினை மக்களிடம் கையளிப்பது தொடர்பான தகவலை வெளியிடவுள்ளார். பலாலி விமான ஓடுபாதைக்கு மேற்காக உள்ள பொதுமக்களின் காணிகளே நாளை விடுவிக்கப்படவுள்ளதாக யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். பொதுமக்களின் பாவனைக்காக வழங்கப்படவுள்ள குறித்த...
யாழ்ப்பாண முஸ்ஸிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கான அடிப்படை தேவைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று யாழ் கிளிநொச்சி முஸ்ஸிம் பணிமனையின் தலைவரும் யாழ் மாவட்ட மீள்குடியேற்ற செயலனியின் தலைவரும் ஆகிய மௌலவி எச்.எம் சுபியான் இன்று தெரிவித்தார். வடக்கிலிருந்த முஸ்ஸிம் மக்கள் கடந்த 1990ம் ஆண்டு ஒக்டோபர் 30ம் திகதி விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 26 வருடங்கள்...
1983 தொடக்கம் 2009ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலினால் தமது சொந்தக் காணிகளை கைவிட்டவர்கள் அல்லது உயிர் அச்சுறுத்தலின் காரணமாக மிகக் குறைந்த விலையில் காணிகளை விற்றவர்கள் தங்களது காணிகளை மீளப் பெறுவதற்கான விசேட சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இச் சட்ட மூலமானது இரண்டு வருடத்திற்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்பதால் இவ்வாறான...
தமிழக அகதி முகாம்களிலிருந்து மேலும் சில இலங்கை தமிழர்கள் அடுத்த வாரம் நாடு திரும்ப உள்ளனர். இதில் 17 பெண்களும், 13 ஆண்களுமாக மொத்தம் 11 குடும்பங்களை சேர்ந்த 30 பேர் உள்ளனர். இவர்கள் எதிர்வரும் 18ம் திகதி மதுரையிலிருந்து ஶ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொழும்புக்கு அழைத்து வரப்படவுள்ளனர். தற்போது நாடு திரும்ப...
வடமாகாணத்திலிருந்து 26 வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக அமைக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை மூடுமாறு வடமாகாண சபை நிர்வாகம் அழுத்தங்களை பிரயோகிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான றிசாத் பதியுதீன் குற்றம்சாட்டியுள்ளார். எனினும் வடமாகாண முஸ்லிம் மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியேறுவதில்...
அண்மையில் விடுவிக்கப்பட்ட வலி. வடக்கின் பலாலி தெற்கு வயாவிளான் பகுதியில் உள்ள புனித இந்து மயானத்தினை இல்லாது செய்து, மலச்சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கைக்கு, அப் பகுதி மக்கள், நேற்று சனிக்கிழமை (01) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். நான்கு கிராமசேவையாளர் பிரிவுக்கு உரித்தான மேற்படி பூனையன் காடு இந்து மாயனத்தினை அழித்து வலி. வடக்கு...
யாழ்ப்பாணம் கீரிமலை இந்துக்களின் புண்ணிய பூமியாக பார்க்கப்படுகையில் அதனை புனித பூமியாக்கி அங்கும் பௌத்தமயமாக்கலை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்ற குழுவினர் தலைவர் ச.சஜீவன் குற்றம்சுமத்தியுள்ளார். இதற்கு இந்திய அரசாங்கம் உதவ முன்வந்திருப்பது கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் மற்றும் இந்திய துணைத்தூதுவர் ஆகியோர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை...
வலிவடக்கு பகுதியில் இந்த வருடம் 1500 ஏக்கர் காணிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட் காணி மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்தார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மீள்குடியேற்றம் குறித்த கலந்துரையாடலின் போது, யாழ்.மாவட்டத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட...
வடக்கு மக்களின் காணிகளை அவர்களுக்கு விரைவாக வழங்கி மீள்குடியேற்ற வேண்டுமென தென்பகுதி மக்கள் ஜனாதிபதிக்கு எதிர்வரும் வியாழக்கிழமை மகஜரொன்றை அனுப்பவுள்ளனர். நல்லிணக்கத்தை மேம்படுத்துவது தொடர்பில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் கருவலஸ்வெல மற்றும் இடங்களை சேர்ந்த தென்பகுதி மக்களை கடந்த 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் அழைத்து வந்தனர். அம்மக்கள் வலி.வடக்கில் இருந்து...
அடுத்த மாதம் 2 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தரும் போது வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிப்பதற்கு இனங்காணப்பட்ட 800 ஏக்கர் காணிகளிலும் மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான முன்னாயத்தங்கள் அரச அதிகாரிகளினாலும், இராணுவத் தரப்பினாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இனங்காணப்பட்ட பகுதிகளில் உள்ள உயர்பாதுகாப்பு வலய...
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் விடுவிக்கப்பட வேண்டிய 4419 ஏக்கர் நிலப் பகுதியில் ஓரங்குலத்தைக் கூட விடுவிக்க முடியாது என, யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கு கண்டனம் வௌியிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் குடாநாட்டிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மீள்குடியேற்றத்தைப் பூரணப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், உடனடியாகக் குறித்த நிலங்கள்...
Loading posts...
All posts loaded
No more posts
