- Monday
- January 12th, 2026
வலிவடக்கில் தமது சொந்த நிலங்களில் மக்களை மீள்குடியேற அனுமதிக்காவிடின் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து அவர்கள் மீள்குடியேறுவார்கள் என வலிவடக்கு மீள்குடியேற்ற ஒன்றியம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்றையதினம் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் வலிவடக்கு மீள்குடியேற்ற ஒன்றியமும் இணைந்து யாழ்பாடி விருந்தினர் விடுதியில் செய்தியாளர் சந்திப்பை நடாத்திய வேளையே மேற்கண்ட எச்சரிக்கை...
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வாழும் மக்களை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் முழுமையாக மீள்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ-மூனுடனான நேற்றை சந்திப்பு தொடர்பில் விளக்கமளிக்கும் வகையிலான ஊடக பிராதானிகளுடனான சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி மாளிகையில்...
கிளிநொச்சியை அண்மித்த பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவ முகாமிற்காக கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாகவும் மக்கள் தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன்னரும் பல தடவைகள் இந்த மக்கள் இராணுவ முகாமிற்கு முன்னாள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் கடந்த 17 ஆம் திகதி அந்த பகுதிக்கு விஜயம் செய்த...
கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பிரதேச மக்கள் நேற்று மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தின் தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த மூன்றரை ஏக்கர் வரையான பொதுமக்களின் காணியை இன்று விடுவிப்பதற்கான நடவ டிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவி த்தி ருந்தார். எனினும்...
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பிரதேசத்திலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த காலங்களில் மக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து வந்திருந்த நிலையில், அவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அளித்த வாக்குறுதியின் பிரகாரம் இன்று (புதன்கிழமை) ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் காரியாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தின் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த சுமார்...
'வலிகாமம் வடக்கில் இனிமேல் காணிகள் விடுவிக்கப்படமாட்டாது எனவும் அதற்காக நியாயமான நட்டஈடு பெற்றுக்கொள்ளுமாறும் ஒரு போதும் தான் அறிவிக்கவில்லையென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் தெரிவித்துள்ளார்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கூறினார். இந்த விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வலிகாமம் வடக்கில் இன்னமும் உயர்பாதுகாப்பு...
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள 11 கிராமசேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படமாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக் காரணமாக அக்காணிகள் விடுவிக்கப்படாது எனவும், அந்தக் காணிகளின் உரிமையாளர்களுக்கு பொருத்தமான அளவில் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இது தொடர்பான கடிதம் யாழ்.மாவட்டச் செயலகத்தினால் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 171 குடும்பங்களுக்கு நேற்றைய தினம்...
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் (திங்கட்கிழமை) வருகை தந்த உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கு பொறுப்பான பதில் பொறுப்பதிகாரி அனற்மாரி டில்ஷன் தலைமையிலான குழுவினர் மருதனார்மடத்தில் அமைந்துள்ள சபாபதி நலன்புரி நிலயத்திற்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்துள்ளனர். நேற்றைய தினம் காலை 11.00 சபாபதி நலன்புரி நிலையத்திற்குச் சென்ற உலக வங்கிக் குழு அங்குள்ள மக்களின் வாழ்க்கைத்...
எங்கள் நிலங்களை விடுவிக்கும்வரை தொடர்ந்து போராடுவோம் என்றும், நில மீட்புக்கான போராட்டத்தில் உயிரை விட தயாராக உள்ளதாகவும் வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து மல்லாகம், கோணப்புலம் நலன்புரி முகாமில் தங்கியிருக்கும் மயிலிட்டி மக்கள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் உறுதியாகத் தெரிவித்தனர். அத்துடன், தங்களுக்கு மாற்றுக் காணி, வீடு உள்ளிட்ட அரசாங்கத்தின் எந்த உதவியும் வேண்டாம் என்றும்,...
'பலாலி மற்றும் வசாவிளான் விமான நிலைய சந்தியை அண்மித்த பகுதிகள், விமான நிலைய விரிவாக்கலுக்காக மூன்றாம் கட்டமாக மதிப்பீடு செய்யுப்படவுள்ளது. குறித்த பகுதிகளில் உள்ள மக்களின் காணிகள் விடுவிப்பது சாத்தியமற்றது' என்று யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்தார். கீரிமலை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கான உறுதி செய்யப்பட்ட கடிதம்...
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்படவுள்ளள 460 ஏக்கர் காணியில் காங்கேசன்துறை(ஜே.233,) காங்கேசன்துறை மத்தி (ஜே.234), காங்கேசன்துறை மேற்கு (ஜே-235), பளை , வீமன்காமம் (ஜே.236), தையிட்டி (ஜே.250) போன்ற கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்ட நலன்புரி நிலையங்களில் வாழும்மக்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில ஒன்றுகூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்படவுள்ள...
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் சொந்த காணிகள் இல்லாத நிலையில் மீள்குடியேற்றப்பட்டு மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டுள்ள மக்களுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) காணிகளுக்கான உரித்துக்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பலாலியில் நேற்று மதியம் குறித்த காணி உரிததுக்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்ற நிலையில் முகாம்களில் வாழ்ந்து வந்த மக்களுக்கு, அரசாங்கத்தினால்...
தமிழர் தாயகப் பிரதேசங்களிலிருந்து யுத்த காலத்தில் வெளியேறிய முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் மீளக் குடியேற்றப்படுவதை தமிழர் தரப்பு ஒருபோதும் எதிர்க்காது என தெரிவித்துள்ள வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், எனினும் வெளியேற்றப்பட்டவர்களை மீளக் குடியேற்றுவதாகக் கூறி புதிதாக திட்டமிட்ட சிங்கள, முஸ்லீம் குடி யேற்றங்களை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். அதேவேளை...
முகாம் வாழ்க்கையினை முடிவுறுத்தி சொந்த இடங்களில் வாழ்வதற்கான திட்டத்தின் முதற்படியாக காணி அற்றவர்களுக்கு காணி வழங்கும் திட்டத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடைமுறைப்படுத்தியுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன்நேற்று (26) வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
வவுனியா - குடியிருப்பு பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த, வவுனியா பாதுகாப்பு சேனை தலைமையகத்திற்கு சொந்தமான இராணுவ முகாமில் அமைந்துள்ள கட்டடத்தில் இருந்து இராணுவத்தினர் வௌியேற்றப்பட்டுள்ளனர். இதன்படி அந்த கட்டத்தை மீள வவுனியா மாவட்ட செயலகத்திடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அம் மாவட்ட செயலாளர் ரோஹன புஸ்பகுமார குறிப்பிட்டுள்ளார். சுமார் 26 வருடங்களுக்கு முன்னர் குறித்த கட்டடம் இராணுவ...
வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள மேலும் 460 ஏக்கர் பொதுமக்களின் காணியை மீள்குடியேற்றத்திற்காக விரைவில் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் உறுதிசெய்தது. ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலிலேயே மேற்படி காணி விடுவிப்பு உறுதிசெய்யப்பட்டது. வடக்கின் மீள்குடியேற்றம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று ஜனாதிபதி...
மயிலிட்டிப் பிரதேசத்தில் சில பகுதிகளை விடுவிப்பதாக பலாலி இராணுவமுகாம் பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க மயிலிட்டிப் பிரதேச மக்களுக்கு உறுதியளித்துள்ளார். பலாலி இராணுவத் தளபதி தலைமையிலான குழுவினருக்கும், மயிலிட்டிப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசிக்கும் சில முகாம்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்குமிடையிலான இரகசிய முக்கிய சந்திப்பொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை பலாலி...
'நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் காணிகளை விடுவிக்காது ஏமாற்றும் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாக இருந்தால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்குத் தயாராகுங்கள்' என வலி. வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்துள்ளார். வசாவிளான், பலாலி தெற்கு சமூக நல அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடலும் புதிய நிர்வாகசபை தெரிவு செய்யும் நிகழ்வு, வசாவிளான் மேற்கு பொதுநோக்கு மண்டபத்தில் சனிக்கிழமை (20) இடம்பெற்றது....
யாழ்ப்பாணம் கீரிமலைப் பிரதேசத்தில் புதிதாக 100 வீடுகளை அமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதியை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியமர்வு, இந்துமத அலுவல்கள் அமைச்சு வழங்கியுள்ளது. இந்த நிர்மாணப் பணிகளில் இராணுவத்தினர், புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள், மற்றும் வீட்டுப் பயனாளிகளும் ஈடுபட்டுள்ளனர். ஒக்டோர் மாதம் மழை காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இதற்கான பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. நலன்புரி...
இந்த வருட இறுதிக்குள் வடக்கில் மீள்குடியேற்றம் நிறைவுக்கு வந்துவிடும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. மீள்குடியேற்ற அமைச்சின் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் காணிகளற்றவர்களாக 936பேர் இனங்காணப்பட்டுள்ளனர். எனினும், 971 வீடுகளைக் கட்டுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதனடிப்படையில் கீரிமலைக்கு அருகில் உள்ள காங்கேசன்துறை பகுதியில் இராணுவத்தின் உதவியுடன் வீடுகள் அமைக்கப்படுகின்றன. மேலும், 104 வீடுகள் பலாலி...
Loading posts...
All posts loaded
No more posts
