விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டுபிடிப்பு

வவுனியா புறநகர்ப் பகுதியாகிய பண்டாரிகுளத்தில் உள்ள பாடசாலை வளாகத்தில் விடுதலைப்புலிகளின் கைத்துப்பாக்கி வைக்கத்தக்கதும், தற்கொலை தாக்குதலுக்குப் பயன்படுத்தும் வெடிப்பொருட்களை வைப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்ற பட்டியும் வெடிப்பொருட்கள் சிலவும், கண்டெடுக்கப்பட்டிருப்பாதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். இந்தப் பாடசாலையில் இருந்த பழைய கட்டடம் ஒன்றை இடித்து அழித்தபோது, சுவரின் அருகில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த தகர பரல் ஒன்று கனரக இயந்திரத்தில் சிக்கி...

யாழ் எழுக தமிழ் பேரணிக்கு அலைகடலாய் அணிதிரள்வீர்! தொல். திருமாவளவன் அழைப்பு

இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டின் முதல் இன அழிப்புக்கு முகங்கொடுத்த எம் தமிழ்ச் சொந்தங்களே! வணக்கம். 2009 மே மாதம் மௌனிக்கப்பட்டது ஆயுதங்களை தான், எங்கள் ஜனநாயக போராட்டத்தை அல்ல என்பது உலகச் சமூகத்திற்கு எடுத்துச் செல்ல நமக்கு கிடைத்திருக்கின்ற ஒரு வாய்ப்பு தான் 'எழுக தமிழ்' போராட்டம். இனப்படு கொலையாக்கப்பட்டவர்களுக்காக நியாயம் கேட்போம். சுயநிர்ணய உரிமைக்காக...
Ad Widget

எழுக தமிழ் நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்பல்கலை மாணவர் பீடங்கள் கூட்டறிக்கை

எழுக தமிழ் நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்பல்கலை மாணவர் பீடங்கள்  கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. யாழ்ப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் 2015-16 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் புதிய 2016-17 ஆண்டுக்கான ஒன்றியம் இன்னும் அமைக்கப்படவில்லை. இந்நிலையில் கலைப்பீடம் விஞ்ஞான பீடம் மருத்துவபீடம் ஆகியவற்றின் மாணவர் ஒன்றியங்கள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றினை வௌியிட்டுள்ளன. அதில் பேதங்களை மறந்து  எழுகதமிழ்...

சிறுமியை மூர்க்கத்தனமாக தாக்கிய சிறியதாய் கைது

யாழ்.நீர்வேலி பகுதியில் தாயொருவர் ஆறுவயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை மிக மூர்க்கத்தனமாக தாக்கும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டதன் விளைவாக எடுக்கப்பட்ட நடவடிககையில் பொலிசாரினால் குறித்த தாய்  கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதவது , நீர்வேலி பகுதியில் உள்ள தோட்ட காணி ஒன்றில் வாழும் ஒரு குடும்பத்தை சேர்த்த தாயொருவர் ஆறு வயது...

விவசாயத் திணைக்களத்தின் உயர் பதவிகளில் பத்து வருடங்களின் பின்னர் தமிழர்கள் இருக்க மாட்டார்கள் : அமைச்சர் ஐங்கரநேசன் குற்றச்சாட்டு

வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் உயர் பதவிகளில் பத்து வருடங்களின் பின்னர் தமிழர்கள் இருக்க மாட்டார்கள். இந்தப் பதவிகளில் சிங்களவர்கள் அமர்வதற்கேற்ற வகையில், அரசு திட்டமிட்டுச் செயற்படுகிறது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நேற்று...

யாழ். போதனா வைத்தியசாலை வைத்திய சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ். போதனா வைத்தியசாலையின் அரச வைத்தியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடாத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். ஸ்ரீலங்காவில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களுக்கும் அதனால் ஏற்படுகின்ற உயிரிழப்புக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், எழுந்து நிற்போம் எனும் தொனிப் பொருளில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடாத்தவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அரச வைத்தியர் சங்கத்தினர் எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 10 மணி...

ஆட்பதிவுத் திணைக்களமும் இடமாற்றம்

கொழும்பு, ஜாவத்தையில் அமைந்துள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம், எதிர்வரும் 27ஆம் திகதி முதல், பத்தரமுல்ல, சுஹுருபாயவுக்கு மாற்றப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, நாளை வெள்ளிக்கிழமை (13) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (26) வரை, இத்திணைக்களத்தில் எந்தவொரு சேவையும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 27ஆம் திகதி முதல், பத்தரமுல்ல, சுஹுருபாய புதிய கட்டடத்தொகுதியில் வழமையான சேவைகள் இடம்பெறவுள்ளன.

ரமித் ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

இன்று காலை கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல்ல பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 07 சுதந்திர சதுக்கத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். மது போதையில் காரை செலுத்தியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உடுவில் மகளிர் கல்லூரி மாணவியைத் தாக்கிய ஆசிரியை கைது!

யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் தமது அதிபரின் பதவிக் காலத்தை நீடிக்க வலியுறுத்தித் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்த போராட்டம் கடந்த-07 ஆம் திகதி திட்டமிட்டுக் குழப்பப்பட்டதுடன், இதன் போது மாணவிகள் மீது கல்லூரியை முகாமைத்துவம் செய்துவரும் தென்னிந்தியத் திருச்சபையின் தலைவர் டீ. எஸ். தியாகராஜாவிற்கு நெருக்கமானவர்கள் மற்றும் சில ஆசிரியர்கள்...

கடைகளைப் பூட்டி எழுக தமிழுக்கு பூரண ஆதரவு!

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவிருக்கும் எழுக தமிழ் பேரணிக்கு யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைத்துக் கடைகளையும் பூட்டி பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட சிகையலங்கார சங்கம் அறிவித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண நகரின் கலைத்தூது மண்டபத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சிகையலங்கார சங்கத்தின் பிரதிநிதி தமிழ் மக்கள் பிரதிநிதிகளின்...

அனைவரும் முற்றவெளி நோக்கி திரண்டு வாருங்கள்!!

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் சனிக்கிழமை (24-09-2016) நடைபெற இருக்கும் எழுக தமிழ் மாபெரும் பேரணி யில் அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் வர்த்தக நிலையங்கள், சந்தைகள் மற்றும் நிறுவனங்களைப் பூட்டி பேரணிக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ் மக்கள் பேரவை அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றது. இவ்வாறு தமிழ் மக்கள் பேரவையினரால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

எழுக தமிழுக்கு சுமந்திரன் ஆதரவு ? மக்களின் எழுச்சியை வரவேற்பதாக அறிவிப்பு

பொதுமக்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்ற செயற்பாடுகளை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சி முக்கியஸ்தருமான எம்.ஏ.சுமந்திரன் முக்கியமாக காணி விடுவிப்பு அரசியல் கைதிகள் விடுவிப்பு போன்றவிடையங்களில்அரசு தாமதமாக செயற்படுவது தொடர்பில் அரசின் மீது மக்களிற்கு அதிருப்தி இருப்பதாகவும் தங்களிடமும் அந்த அதிருப்திநிலை காணப்படுவதாகவும் அதனை பாராளுமன்றின் ஊடாக தாம் வெளிப்படுத்தியிரப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனாலும் இந்த...

கொழும்பில் ஒன்று திரண்டு அதிபர்கள் போராட்டம்

அதிபர் சேவையின் முரண்பாடுகளின் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நேற்று 21.09.2016 புதன்கிழமை காலை 10.30 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய சுமார் 500 வரையான அதிபர்கள் ஜனாதிபதி அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். இதன்போது பொலிஸார் லோட்டஸ் வீதியில் வைத்து ஊர்வலத்தை வழிமறித்தனர். இதன்போது ஏற்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து – தொழிற்சங்க...

அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது

தமது விடுதலையை வலியுறுத்தி அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரத போராட்டம் இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்க வேண்டுமென கோரியுள்ள இவர்கள், தாம் தொடர்புடைய வழக்குகளை தமிழ் பிரதேசங்களுக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தமது விடுதலையை...

மற்றுமொரு கிரிக்கெட் வீரர் கைது

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல பொலிஸாரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பிலே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

வீதி விபத்துக்களில் அதிகளவில் இளைஞர்களே உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வீதி விபத்துக்களில் அதிகளவில் இளைஞர்களே உயிரிழப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இவ்வாண்டின் முதல் காலாண்டில் விபத்துக்களில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 509 பேரில், 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இரண்டாவது காலாண்டில் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின்...

எழுக தமிழ் பேரணிக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு!

எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவிருக்கும் எழுக தமிழ் பேரணிக்கு ஆசிரியர் சங்கமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் தமது பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக ஆசிரியர் சங்கமும் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. அதில் நாங்கள் பௌத்தர்களையும் சிங்களச் சகோதரர்களையும் வெறுக்கும் இனவாதிகளல்ல. மாறாக எமது இனத்துக்கான அடையாளத்தை நாமாகவே தீர்மானிக்கக்கூடிய...

எழுக தமிழ் பேரணிக்கு தமிழரசுக் கட்சி எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை! சிறிதரன்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு தமிழரசுக் கட்சி எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என கூட்டமைப்பில் அங்கம் வசிக்கும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். எனினும் கடந்த காலங்களை விட தமிழ் மக்களுக்கு சாதகமான ஒரு சூழல் தற்போது உருவாகியுள்ள நிலையில் பொறுத்துப் பார்ப்போம் என்பதே எமது நிலைப்பாடு எனவும் அவர் கூறினார்....

“எழுக தமிழ்“ முதலமைச்சர் அறைகூவல்

எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள “எழுக தமிழ்“ நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு எமது அபிலாசைகளை அரசிற்கும் சர்வதேசத்திற்கும் எடுத்தியம்புவோம் என அறைகூவல் விடுத்துள்ளார் கௌரவ முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் அவர்கள். அவர் தனது அறிக்கையில் என் அன்பார்ந்த தமிழ்ப் பேசும் சகோதர சகோதரிகளே! அரசியல் யாப்பொன்றை எமக்குச் சாதகமாகத் தரப்போவதாக அறிவித்திருக்கும் அரசாங்கம் அதே நேரத்தில் எமது வடக்கு,...

மூன்று பொலிஸ் அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த வழக்கில் அப்போதைய சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை கைதுசெய்யுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற சந்தேகநபரின் மரணம் தொடர்பில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் 3 பேரினதும் வெளிநாட்டு பயணங்களுக்கும் தடைவிதித்து நீதவான் ஏ.ஏ.ஆனந்தராசா உத்தரவிட்டுள்ளார்....
Loading posts...

All posts loaded

No more posts