சம்பந்தனின் முறைப்பாட்டினால் ஜனவரியிலிருந்து அரச அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் புகாருக்கமைய வடக்கு மாகாண அரசாங்க அதிகாரிகளுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் இடமாற்றம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வடக்கில் பணியாற்றும் அரச அதிகாரிகளை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்சிகளைப் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு செயற்பாடாகவே, வடக்கு மாகாணத்தில் செயற்பட்டு வரும் பிரதேச செயலர்கள், உதவிச் செயலாளர்கள்...

இராணுவத்தைக் குறைக்குமாறு பான்கிமூன் என்னிடம் கோரினார் : றெஜினோல்ட் குரே!

வடக்கில் இராணுவத்தினரின் அளவைக் குறைக்குமாறும், பொதுமக்களின் காணிகளை விரைவாக மீள வழங்குமாறும் ஐநா செயலர் பான்கிமூன் தன்னிடம் கோரியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். ஐநா செயலர் சில நாட்களுக்கு முன்னர் இலங்கை வந்தபோது அரசாங்கம் வடக்கில் இராணுவத்தினரின் அளவைக் குறைக்கவேண்டுமெனவும், இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களிடமே திருப்பிக்கொடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தார். இந்த விடயம்...
Ad Widget

பான்கிமூன் கூறினாலும் வடக்கில் இராணுவத்தைக் குறைக்கமுடியாது!

அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட ஐநா செயலர் பான்கிமூன் வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவத்தினரைக் குறைக்கவேண்டுமென வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், ஐநா செயலர் சொன்னாலும் வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவத்தினரைக் குறைக்கமுடியாது என பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும், அரசுக்குத் தேவையேற்படும் பட்சத்தில் மாத்திரமே வடக்கில் இராணுவம் குறைக்கப்படுமெனவும், ஐநா செயலர் சொன்னதற்காக இராணுவக் குறைப்புச் செய்யமுடியாது...

இலங்கைத் தூதுவர் மீது தாக்குதல்: அரசாங்கம் கண்டனம்

மலேஷியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் மற்றும் இரண்டாம் நிலைச் செயலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு விஜயம் செய்திருக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு செய்திச் சேவைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை அரசாங்கத்தின்...

‘சரணடைந்தோர் பலர் மாயம்’ : அனந்தி

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரான சில நாட்களுக்குள், பாதுகாப்புப் பிரிவினரிடம் சரணடைந்த பலர் காணாமற்போயுள்ளனர் என்று, வடமாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான்...

‘புலி எதிர்ப்புக்கு நான் அஞ்சேன்’: மஹிந்த

புலிப் பயங்கரவாத ஆதரவாளர்களினால், எனக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என்று, மலேசியாவுக்கு புறப்படுவதற்கு முன்னரே நான் அறிந்திருந்தேன்' என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 'புலிகளின் எதிர்ப்புக்கு நான் ஒருபோதும் அஞ்சமாட்டேன்' என்றும் தெரிவித்துள்ளார். மலேஷியாவிலுள்ள இலங்கைப் பிரஜைகள் சிலரைச் சந்தித்ததன் பின்னர், அங்குள்ள ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு...

‘பிரபாகரனும் இல்லை மஹிந்தவும் இல்லை’ : ஜனாதிபதி

'யுத்தத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், உயிர்வாழ்பவர்கள் மத்தியில் இல்லை. அதேபோல, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஆட்சி அதிகாரத்தில் இல்லை. ஆகையால், பிரச்சினைகளை என்னுடன் இலகுவாகப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்' என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பிரிவினைவாதக் குழுக்கள், வடக்கிலும் தெற்கிலும் இருப்பதனால், சிற்சில பிரச்சினைகள் எழுகின்றன. வடக்கில்,...

யாழ் குடாநாட்டில் தீவுப் பகுதிகளுக்கு பாதுகாப்பான புதிய படகு சேவை

யாழ் குடாநாட்டில் உள்ள தீவுப் பகுதிகளுக்கு படகு போக்குவரத்தை பாதுகாப்பாக மேற்கொள்வதற்கு புதிய படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த புதியத் திட்டத்திற்கு 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊர்காவற்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். படகு பயணத்தில் ஈடுபடும் பயணிகள்...

கிளிநொச்சியில் கவன ஈர்ப்பு போராட்டம்

இலங்கை சிறைச்சாலைகளில் உரிய விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி கிளிநொச்சியில் கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. சிறை கைதிகளின் உறவினர்கள், காணாமல் போனோரின் உறவுகள், பொதுமக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டு கைதிகளின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தனர். நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும், அதன்...

உரிமைகளை பெறுவதற்கு இனியும் காலம் கடத்த முடியாது : சம்பந்தன்

தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவதற்கு வன்முறைகளை விரும்பவில்லையென குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், உரிமைகளை பெறுவதற்கு இனியும் காலம் கடத்த முடியாதென தெரிவித்துள்ளார். யாழ்.தாவடியில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் அமிர்தலிங்கத்தின் 31ஆவது ஆண்டு நினைவுதின நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...

பரவிபாஞ்சான் மக்கள் 5ஆவது நாளாகவும் போராட்டம்!

கிளிநொச்சி மாவட்டம், பரவிபாஞ்சான் பிரதேசத்து மக்கள் இராணுவத்தினரால் அபக்கரிக்கப்பட்டுள்ள தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு கோரி மீண்டும் 5ஆவது நாளாக தொடர்ந்தும் கவயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பரவிபாஞ்சான் பிரதேசத்தில் மூன்றரை ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். கடந்த 31ஆம் திகதி குறித்த மூன்றரை ஏக்கர் காணி...

மக்களை வேலைவாய்ப்பெனக்கூறி சுவிஸ்,கனடாவிற்கு அழைத்துச் செல்லவுள்ள தனியார் நிறுவனம்!!!

தனியார் நிறுவனம் ஒன்று அல்லைப்பிட்டி பகுதியில் 68 பேரை சுவிஸ் மற்றும் கனடா தேசங்களிற்கு வேலைவாய்ப்புக்கு எனத் தெரிவித்து அழைத்து செல்லவுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பிரதேசத்தில் 2ஆம் வட்டாராம் பகுதியில் 68 பேர் சுவிஸ் . கனடா போன்ற தேசங்களிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.VNK buisness network என்ற தனியார்...

வலிவடக்கு மீள்குடியேற்ற ஒன்றியம் அரசுக்கு எச்சரிக்கை!!

வலிவடக்கில் தமது சொந்த நிலங்களில் மக்களை மீள்குடியேற அனுமதிக்காவிடின் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து அவர்கள் மீள்குடியேறுவார்கள் என வலிவடக்கு மீள்குடியேற்ற ஒன்றியம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்றையதினம் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் வலிவடக்கு மீள்குடியேற்ற ஒன்றியமும் இணைந்து யாழ்பாடி விருந்தினர் விடுதியில் செய்தியாளர் சந்திப்பை நடாத்திய வேளையே மேற்கண்ட எச்சரிக்கை...

உப பொலிஸ் உத்தியோகத்தர் மதுபோதையில் அட்டகாசம்

பருத்தித்துறை நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாகக் கூறி, நேற்று சனிக்கிழமை (03) அதிகாலை 4 மணியளவில் வல்வெட்டித்துறை ஆதிகோயிலடிப் பகுதியிலுள்ள வீடு ஒன்றின் முன் கதவினை உடைத்து அத்துமீறி நுழைந்த பருத்தித்துறைப் பொலிஸார் வீட்டிலுள்ள அனைவரையும் துப்பாக்கிமுனையில் அச்சுறுத்தியுள்ளனர். தமிழ் உப பொலிஸ் பரிசோதகர் தலைமையில் அதிகாலையே மதுபோதையில் குறித்த நபரின் வீட்டுக் கதவினை அத்துமீறி உடைத்து...

முல்லைதீவு மாணவன் புத்தளத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு

முல்லைத்தீவு ஹிஜ்ராபுரத்தைச் சேர்ந்த பரீத் முகம்மது இல்ஹாம் (வயது 16) என்ற மாணவன் புத்தளத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக மாணவனின் பெற்றோரால் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு தண்ணீரூற்று முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தர சாதாரண தரம் கற்கும் குறித்த மாணவன் 4 அடி 8 அங்குல் உயரமுடையவர்...

இந்தியாவில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினரை நாடு கடத்த தீர்மானம்

போலி கடவுச்சீட்டு ஒன்றைப் பயன்படுத்தி வௌிநாடு செல்ல தயாராக இருந்த நிலையில் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரை இலங்கைக்கு நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த விழக்கிழமை குறித்த நபர் போலி கடவுச்சீட்டு ஒன்றைப் பயன்படுத்தி ஜேர்மனிக்கு செல்ல முற்பட்ட போது பூனே விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த...

இறுதி யுத்தத்தில் ஐநாவின் தலையீடு போதுமானதல்ல: மூன்

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில், ஐக்கிய நாடுகளின் தலையீடு போதுமானதாக இருந்திருக்கவில்லை என ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கி மூன் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் இறுதி யுத்தத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றனவா என்பதை, இராஜந்தந்திர ரீதியில் இலாவகமாக மூன் தவிர்த்திருந்தார். தவிர, விசாரணைகளின்போது சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பை முன்மொழிவதாகவும் கட்டாயப்படுத்தவில்லை என்றவாறான கருத்துக்களையே மூன் வெளிப்படுத்தியிருந்தார்....

யாழில் கணவனின் தாக்குதலி மனைவி பலி

கோப்பாய், கலையடி பிரதேசத்தில் கணவன் மேற்கொண்ட தாக்குதலில் மனைவி உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட பிரச்சினை காரணமாக மனைவியை பொல்லால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலில் படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். திரிநெவேலி, கலையடி வீதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த கணவன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட...

காங்கேசன்துறையில் ரயில் தடம்புரண்டு விபத்து

இன்று காலை 07.00 மணியளவில் காங்கேசன்துறையில் ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற புகையிரதமே இவ்வாறு தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. புகையிரதத்தின் கட்டுப்பாட்டு கருவி (பிரேக்) செயலிழந்தமையே இந்த விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதங்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பிலான...

வடக்கு விவசாய அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் ரூபா 3 மில்லியன் பெறுமதியான உதவிகள்

வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு ஒதுக்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து உதவிப்பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை (03.09.2016) விவசாய அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் 6 மில்லியன் ரூபா பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியை வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களுக்கான வாழ்வாதார உதவிகள்,...
Loading posts...

All posts loaded

No more posts