- Friday
- August 14th, 2026
'இஸ்லாம் மதத்தினைத் தமது அரசியல் தேவைகளுக்காக முஸ்லிம்கள் பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்த சி.வி.விக்னேஸ்வரன், அதற்காக முஸ்லிம்களிடம் பகிரங்கமாகவே மன்னிப்புக் கேட்கவேண்டும்' என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார். பொரளையில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில், நேற்றுப் புதன்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டில், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள்,...
2015/2016 ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் இணையத்தளத்தின் ஊடாக மாத்திரமே பதிவுகளை மேற்கொள்ள முடியும். 2015ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த வருடத்திலும் பார்க்க இவ்வருடம் மேலதிகமாக 10% ஆன மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதியை பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
இம்மாதம் 27ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படும். நுளம்புகள் உருவாகும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார். நுளம்பு ஒழிப்பு வாரத்தில் வீடுகள், நிறுவனங்கள் என்பனவற்றின் சுற்றுச்...
2019ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இந்த சந்திப்பு அலரிமாளிகைளில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 17 வருடங்களுக்குப் பிறகு...
யாழ். கந்தரோடை பிள்ளையார் மக்களுக்குத் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊடாக விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் விநியோகம் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளமையால் இம் முகாமில் வசிக்கும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். யுத்தம் காரணமாக கடந்த 1990ம் ஆண்டு வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் யாழ். கந்தரோடையில் தனியாருக்குச் சொந்தமான காணியொன்றில்...
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள 23 பேரின் தண்டனையை தளர்த்துவது தொடர்பில் சட்டமா அதிபருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதாக, அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்தக் கலந்துரையாடலின் படி புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகத்தின் ஊடாக இவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்கமைய 23 கைதிகளையும் 6 மாதங்களுக்கு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படவுள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின்...
ஐக்கிய நாடுகள் சபையின் 71வது கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்கா சென்றுள்ள, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா கூட்ட தொடரில் தனது உரையினை நிகழ்த்தினார். இதன் போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை 2017ஆம் ஆண்டு ஏழ்மையில் இருந்து விடுதலை அடையும் ஆண்டாக பெயரிடப்பட்டுள்ளது. புதிய அரசாங்கம் உருவாகி 20 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இலங்கை...
உடுவில் மகளிர் கல்லூரியில் அண்மையில் மாணவிகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் போது நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாகவும், அக் கல்லூரியில் பல ஒழுக்க சீர்கேடுகள் நடைபெற்று வருவதாக பெற்றோரினால் கூறப்படும் முறைப்பாடுகள் தொடர்பாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா நாளை 22.09.2016 நடைபெறவுள்ள சபை அமர்வின் போது ஓர் அவசர பிரேரணையைக் கொண்டுவரவுள்ளார். அப் பிரேரணையில் கூறப்பட்டுள்ளதாவது,...
ஸ்மாட் கையடக்கத் தொலைபேசிகளுக்கான தீர்வை வரியை முற்றாக நீக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் தொழினுட்ப அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மேற்படி திட்டத்தை உள்ளடக்குவதற்கு நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...
எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு முதல் க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் கணக்கில் கொள்ளப்படாமல், மாணவர்கள் உயர்தர வகுப்புக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் நீண்டகாலமாக சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் இன்று புதன்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த சிறைச்சாலையில் உள்ள 25 தமிழ்க் கைதிகளே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார். நாளை அல்லது நாளை மறுதினம் அளவில்...
யாழ்ப்பாண பல்கலைக்கழ சுற்றுப்புறச் சூழல்களில் இளைஞர்கள் மது அருந்தி விட்டு அட்டகாசம் புரிவதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மது அருந்தி விட்டு அட்டகாசம் புரியும் இளைஞர்கள் தகாத செயல்களிலும் ஈடுபட்டு வருவதாகவும் குறித்த மக்கள் தெரிவித்தனர். தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் தெரிவித்தனர். குறிப்பாக வீதிகளில் வருபவர்களை மறித்து அட்டகாசம் புரிகிறார்கள். இது தொடச்சியாக இடம்பெறுவதாகவும்...
யாழ். நகர் முட்டாஸ் கடைச் சந்தியில் ரயர் கொழுத்திய இளைஞர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.உடையார் கட்டு முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க இளைஞரே கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ். நகர் முட்டாஸ் கடைச் சந்தியில் இன்று அதிகாலை பழைய ரயரினை போட்டு எரித்துள்ளார். சம்பவத்தினை அறிந்த யாழ்ப்பாணம் பொலிஸார் சென்று இளைஞரை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபர் யாழ்ப்பாணம்...
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அவர்களின் எழுக தமிழ் நிகழ்விற்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தி! பாறையைப் பிளந்து கொண்டு விதை முளைப்பது போல், தமிழின ஒடுக்குமுறைகளைப் பிளந்து கொண்டு 'தமிழ் மக்கள் பேரவை' உருவாகியிருப்பது, உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சம் குளிரும் செய்தியாகும். பல்வேறு அரசியல் இயக்கங்கள் மற்றும் வெகு மக்களை ஒருங்கிணைத்துக் கொண்டு...
எழுக தமிழ் நிகழ்விற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளளர் வைகோ அவர்கள் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தி
வடக்கில் பல்வேறு வகையான தொழில்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எமக்கு அபிவிருத்தி அவசியம். ஆனால், அபவிருத்தி என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் தொழில் முயற்சிகள் எதுவும் விவசாயிகளைக் கூலித்தொழிலாளிகளாக மாற்றிவிடக் கூடாது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார். யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து விவசாய உள்ளீடுகளை வழங்கி...
யாழ்ப்பாணம் சிறையில் கடந்த 40 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள காரைக்கால் மீனவர்கள் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி திடீர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி காரைக்கால் அருகே உள்ள டி.ஆர்.பட்டினத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கணேஷ்குமார், பிச்சைபாண்டி, முகமதுகான், ரகுமான்கான் ஆகியோர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். குறித்த நால்வரும் நெடுந்தீவு அருகே...
மக்களது எழுச்சியை தென்பகுதியிலே வேறு விதமாக சித்தரிப்பவர்களும் இருக்கின்றார்கள். தற்போதும் அவர்கள் தென்பகுதியிலே தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதமெடுக்கும் சாத்தியங்கள் உள்ளன போன்ற பிரசாரங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் செயற்பாடுகள் வெற்றிபெறவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் வடக்கில் மக்களைத் திரட்டி அரசிற்கு எதிராக எழுச்சியைஏற்படுத்த முனைவதானது இப்படியான நிகழ்வுகளை காண்பித்து பிரசாரம் செய்வதற்கு அவர்களுக்கு கருவியாக...
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு யாழ்மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச வணிகர் கழகங்களும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் பேரணிக்கு ஆதரவு வழங்குவதா வேண்டாமா என முடிவெடுக்கமுடியாமல் யாழ்.நகர் வணிகர் கழகத் தலைவர் திணறிவருவதாக தெரியவருகின்றது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஊடகவியலாளர்கள் இருவரின் உதவியோடு சுரேஸ் பிரேமச்சந்திரனை...
உரிமைக்காக குரல் கொடுக்க ஓரணியில் திரண்டு எழுக தமிழ் பேரணியை வெற்றி பெறச்செய்வோம் என்று முன்னாள் நடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் மக்கள் பேரவை நடாத்தும் 'எழுக தமிழ்' பேரணி தொடர்பாக, அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை எதிர்வரும்...
Loading posts...
All posts loaded
No more posts
